என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்களில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இந்தியா 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பார்படாஸ்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 19 ரன்னிலும், பாண்ட்யா 5 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 46 பந்தில் ஒரு சிக்சர், 7 பவுண்டரி உள்பட அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 16 ரன்னும், ரோகித் சர்மா 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்களில் சுருண்டது.
    • இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பார்படாஸ்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடக்கிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கியதௌ. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியின் ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
    • கெயில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கான டான் போடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக பிரான்டன் கிங் மற்றும் கெயில் மேயர்ஸ் களமிறங்கினர். இதில், கெயில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அலிக் அத்தனாஸ் விளையாடி வருகிறார்.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அர்ஜூன் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.
    • சிக்ஸ் பேக் உடன் தான் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். 23 வயதான இவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது தியோதர் கோப்பைக்கான தொடரில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சிக்ஸ் பேக் உடன் தான் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஃபிட்னஸ் சார்ந்து அவரது ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கே.எல்.ராகுல், சுப்மன் கில் போன்றவர்கள் ஃபிட்னஸ் சார்ந்து அதிக கவனம் செலுத்துபவர்கள். அவர்களது வழியில் அர்ஜுனும் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளார்.

    • ஜெர்மனி சுற்றுப்பயனத்திற்கான 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஜூனியர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • நாங்கள் வரவிருக்கும் உலக கோப்பை தொடருக்கு நல்ல முறையில் தயாராகி உள்ளோம் என அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

    டெல்லி:

    ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஆண்கள் ஜூனியர் ஹாக்கித் தொடர் நடைபெற உள்ளது. தொடரில் இந்தியா,ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் தொடரை நடத்தும் ஜெர்மனி ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடர் அடுத்த மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் வரவிருக்கும் ஆண்கள் ஜூனியர் உலக கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகளுடன் இந்தியா மோத உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்தியா முயற்சிக்கும்.

    இந்நிலையில் இந்த சுற்றுப்பயனத்திற்கான 20 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணிக்கு உத்தம் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். துணைக் கேப்டன் பதவி பாபி சிங் தாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் சிஆர் குமார் கூறியதாவது:-

    நாங்கள் வரவிருக்கும் உலக கோப்பை தொடருக்கு நல்ல முறையில் தயாராகி உள்ளோம். சில இடங்களில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதனை மேம்படுத்த இந்தத் தொடர் உதவிகரமாக இருக்கும் . இந்தத் தொடரில் வெற்றி பெற கடுமையாக முயற்சிப்போம்'என்று கூறியுள்ளார்.

    இந்திய அணி பின்வருமாறு; உத்தம் சிங்(கேப்டன்),பாபி சிங் தாமி (துணைகேப்டன்),மொகித்,ரன்விஜய் சிங் யாதவ்,சர்தா நந்த் திவாரி,ரோகித்,அமந்தீப் லக்ரா,அமிர் அலி,வாரிபம் நிரஜ் குமார் சிங்,யோகிம்பர் ராவத், புவன்னா, விஷ்னுகாந்த் சிங்,ரஜிந்தர் சிங்,அமந்தீப்,சுனித் லக்ரா,சேத்தன் சர்மா,அமித் குமார் யாதவ்,அரிஜீத் சிங்,அங்கத் பிர் சிங்,சுதீப் சிர்மகோ. ஆண்கள் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கித் தொடர் டிசம்பர் 5 முதல் 16ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த 4 போட்டிகளில் இங்கிலாந்து அணியே டாசை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார்.
    • நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

    பிபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியில் இடம்பிடித்துள்ளார் 25 வயது வீராங்கனையான யமிலா ரோட்ரிக்ஸ். இத்தாலிக்கு எதிரான முதல் க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக களமிறங்கிய இவர், தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார்.

    இதையடுத்து அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு பதிலாக போர்ச்சுகல் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தனது காலில் பச்சை குத்தியதால் அர்ஜென்டினா ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

    தற்போது அர்ஜென்டினா உலகக் கோப்பை அணியில் அங்கம் வகிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு அவர் அதிக விசுவாசத்தையும் ஆதரவையும் காட்ட வேண்டும் என்று நம்பும் சில அர்ஜென்டினா ரசிகர்களிடமிருந்து இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இது குறித்து பேசிய யாமிலா ரோட்ரிக்ஸ், "தேசிய அணியில் மெஸ்சி எங்கள் கேப்டன், ஆனால் ரொனால்டோ எனது உத்வேகம் மற்றும் வழிபடும் உருவம் என்று நான் கூறுவதால், நான் மெஸ்சியை வெறுக்கிறேன் என்று அர்த்தம் இல்லை.

    நான் எப்போது மெஸ்சிக்கு எதிரானவள் என்று சொன்னேன்? நான் சொல்லாத விஷயங்களைச் சொல்வதை நிறுத்துங்கள். நான் மிகவும் கடினமான விமர்சனங்களை சந்திக்கிறேன். நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

    என்று யமிலா கூறினார்.  

    • ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் போன்ற எத்தனையோ இளம் வீரர்கள் துருப்பு சீட்டுகளாக உள்ளனர்.
    • ஆசிய மற்றும் உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது கணிப்பது மிகவும் கடினமானது.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது.

    இந்தப் போட்டிகளில் இந்திய அணி நிலை குறித்து இலங்கை முன்னாள் பிரபல வேகப்பந்து வீரர் சமிந்தா வாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளில் விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோரை மட்டும் இந்திய அணி நம்பி இருக்கவில்லை. பல இளம் வீரர்கள் அணியின் துருப்பு சீட்டுகளாக இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் போன்ற எத்தனையோ இளம் வீரர்கள் துருப்பு சீட்டுகளாக உள்ளனர்.

    ஜெய்ஷ்வால், சுப்மன்கில் போன்ற இளம் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். இந்தியாவில் எத்தனையோ திறமைசாலிகள் உள்ளனர். எல்லோரும் போட்டி போடுகிறார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணி எப்போதுமே விராட்கோலி, ரோகித் சர்மாவை சார்ந்து இருக்காது என்று நான் நினைக்கிறேன். மற்ற திறமையானவர்களும் இருக்கிறார்கள். கோலி, ரோகித் அபாரமாக செயல்பட்டால் பெரும்பாலும் இந்தியாவே வெற்றி பெறும்.

    பும்ரா உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவரது சேவை பெற இந்திய அணி விரும்புகிறது. காயத்தில் இருந்து குணமடைந்த அவர் மீண்டும் நல்ல நிலைக்கு வருவது எளிதல்ல. பும்ரா முழு உடல்தகுதி பெற்றால் உலக கோப்பையில் இந்தியாவுக்கு பலன் கிடைக்கும்.

    ஆசிய மற்றும் உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது கணிப்பது மிகவும் கடினமானது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையாக இருக்கும் அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. 50 ஓவர் போட்டிகள் அனைத்தும் 325 முதல் 350 ரன்களுக்கு செல்கிறது. எனவே எந்த அணி 320 முதல் 350 ரன்களை பெறுகிறதோ அவர்களால் வெற்றி பெற இயலும்.

    இவ்வாறு சமிந்தா வாஸ் கூறியுள்ளார்.

    • உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம்.
    • தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் பும்ரா குறித்து பேசி வருகிறோம்.

    பார்படாஸ்:

    ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று பார்படாஸில் தொடங்குகிறது.

    இந்நிலையில் பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம். அவர் மோசமான காயத்திலிருந்து மீண்டுள்ளார். மேலும் அணி இன்னும் அறிவிக்கப்படாததால் அவர் அயர்லாந்திற்கு செல்வாரா என்பது எனக்கு தெரியாது. அவர் விளையாடினால் அது நல்லது.

    உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம். ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் திரும்பும் போது போட்டி சார்ந்து சில விஷயங்கள் முக்கியம். அதை அவர் விஷயத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் இது குறித்து பேசி வருகிறோம். இப்போதைக்கு அவர் குறித்து வரும் தகவல் அனைத்தும் பாசிட்டிவாக உள்ளது.

    என ரோகித் கூறினார்.

    • இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
    • சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

    பிரிட்ஜ்டவுன்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது.

    அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அணி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கான பிஸியான அட்டவணையைக் கருத்தில் கொண்டு சிராஜ்க்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். 

    • முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
    • சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் தொடங்கியது. முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாளில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்று பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

    முன்னதாக அவர் முதல் டெஸ்டில் 76 ரன்களும், இரண்டாவது டெஸ்டில் 63 மற்றும் 94 ரன்களும், மூன்றாவது டெஸ்டில் 53 ரன்களும், நான்காவது டெஸ்டில் 55 ரன்களும், ஐந்தாவது டெஸ்டில் 125 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 208 ரன்களும், ஏழாவது டெஸ்டில் 53 ரன்களும் எடுத்து புதிய சாதனையை அவர் படைத்தார். 

    ×