ஏல நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட.. சிக்ஸ் பேக் லுக்கில் அர்ஜூன் டெண்டுல்கர்

ஏல நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட.. சிக்ஸ் பேக் லுக்கில் அர்ஜூன் டெண்டுல்கர்

அர்ஜூன் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். சிக்ஸ் பேக் உடன் தான் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
Published on

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். 23 வயதான இவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது தியோதர் கோப்பைக்கான தொடரில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிக்ஸ் பேக் உடன் தான் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஃபிட்னஸ் சார்ந்து அவரது ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கே.எல்.ராகுல், சுப்மன் கில் போன்றவர்கள் ஃபிட்னஸ் சார்ந்து அதிக கவனம் செலுத்துபவர்கள். அவர்களது வழியில் அர்ஜுனும் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com