என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியா 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் குவித்தது.
    • கடைசி 3 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே அடித்தது.

    டி20 உலகக் கோப்பையில் இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிட்செல் மார்ஷ் 27 பந்தில் 54 ரன்களும், டிராவிஸ் ஹெட் 29 பந்தில் 56 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

    கேமரூன் கிரீன் (3), டிம் டேவிட் (6) ஏமாற்றம் அடைந்தனர். ஜோஷ் இங்லிஸ் 27 ரன்களும், மேக்ஸ்வெல் 22 ரன்களும் அடித்தனர்.

    ஆஸ்திரேலியா 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்துள்ளது.

    ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 8.2 ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் விக்கெட்டுகளை மளமளவென இழந்து 200 ரன்களை தாண்ட முடியவில்லை.

    • ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் சூப்பர் 8 சுற்றுக்கு வாய்ப்புள்ளது.
    • அயர்லாந்து, இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற வேண்டும்.

    டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு ஜிம்பாப்வே அதிர்ச்சி அளித்தது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜிம்பாப்வே அணி அடுத்து அயர்லாந்து, இலங்கை அணிகளுடன் மோத உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியில் ஒன்றுமே இல்லை என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிகந்தர் ரசா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சிகந்தர் ரசா கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது விளையாட்டின் ஒரு பகுதி. எனினும், அடுத்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் எங்களுக்கு தெரியும். நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கப் போகிறது.

    தற்போது தவறிவிட்டால் வெற்றிகளில் ஒன்றுமே இல்லை. எல்லோரும் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். நேற்று போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தோம். ஓய்வு எடுத்தோம். இன்று நன்றாக பயிற்சி மேற்கொண்டோம். நாளை என்னைத் பொறுத்த வரையில் மற்றொது போட்டி அவ்வளவுதான். அநேகமாக இது முக்கியமான போட்டி.

    இவ்வாறு சிகந்தர் ரசா தெரிவித்தார்.

    நாளை ஜிம்பாப்வே அயர்லாந்து எதிர்த்து விளையாட இருக்கிறது. அதன்பின் 19-ந்தேதி இலங்கையை எதிர்கொள்கிறது. 

    • ஜஸ்டின் மோஸ்கா அபாரமாக விளையாடி 34 பந்தில் 43 ரன்கள் விளாசினார்.
    • பென் மனென்டி 25 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 60 ரன்கள் விளாசினார்.

    டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இத்தாலியை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைக்க இங்கிலாந்து தள்ளப்பட்டது.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. வில் ஜேக்ஸ் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இத்தாலி களம் இறங்கியது. கத்துக்குட்டி அணியான இத்தாலி சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு கடும் சவால் விட்டது.

    தொடக்க வீரர் அந்தோணி மோஸ்கா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜே.ஜே. ஸ்மட்ஸ் பந்துகள் சந்தித்து ஆட்டமிழந்தார். ஆனால், மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ஜஸ்டின் மோஸ்கா அபாரமாக விளையாடி 34 பந்தில் 43 ரன்கள் விளாசினார்.

    கேப்டன் மனென்டி 11 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த பென் மனென்டி, கிரான்ட் ஸ்டீவாரட் இங்கிலாந்து மரண பயத்தை காட்டினர். பென் மனென்டி 25 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 60 ரன்கள் விளாசினார். ஸ்டீவர்ட் சிக்சராக பறக்க விட்டார். 17-வது ஓவரில் 2 சிக்சரும், 18-வது ஓவரில் 2 சிக்சருடன் பறக்கவிட்டார்.

    இதனால் கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 19-வது ஓவரை சாம் கர்ரன் சிறப்பாக வீசியதுடன் ஸ்டீவர்ட்டை அவுட்டாக்கினார். ஸ்டீவர்ட் 23 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் சாம் கர்ரன் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரில் 25 ரன்கள் இத்தாலிக்கு தேவைப்பட்டது. ஓவர்டன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த இத்தாலி 20 ஓவரில் 178 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    • பில் சால்ட் 28 ரன்களும், டாம் பான்டன் 30 ரன்களும் அடித்தனர்.
    • பில் ஜேக்ஸ் 22 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இன்றைய 2-வது போட்டியில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- இத்தாலி அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து கட்டாயம் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    பட்லர் 3 ரன்னிலும், பில் சால்ட் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த வீரர்கள் தங்களுடைய பங்குக்கு ஏற்ற வகையில் ரன்கள் சேர்த்தனர்.

    பெத்தேல் (23), டாம் பான்டன் (30), ஹார் ப்ரூக் (14), சாம் கர்ரன் (25) விரைவாக ரன் சேர்த்தனர். வில் ஜேக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வில் ஜேக்ஸ் 21 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் விளாசினார். அவர் 22 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.

    • முதல்நாள் ஆட்ட முடிவில் 148 ரன்கள் எடுத்திருந்தார்.
    • இரட்டை சதம் அடித்த தேவ்தத் படிக்கல் 232 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்ற வருகின்றன. கர்நாடகா- உத்தரகாண்ட் இடையிலான போட்டி லக்னோவில் நேற்று தொடங்கியது. உத்தரகாணட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கர்நாடகா முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் கே.எல். ராகுல் மற்றும் தேவ்தத் ஆகியோர் சதத்தால் 2 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்திருந்தது.

    தேவ்தத் படிக்கல் 148 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தேவ்தத் படிக்கல் இரட்டை சதம் விளாசினார். 144 பந்தில் சதம் அடித்த படிக்கல், 288 பந்தில் இரட்டை சதம் அடித்தார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 232 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கருண் நாயர் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, ரவிச்சந்திரன் ஸ்மாரன் சதம் அடித்து விளையாடி வருகிறார். கர்நாடகா 174.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 676 ரன்கள் குவித்துள்ளது.

    கே.எல். ராகுல் நேற்றைய ஆட்டத்தில் 211 பந்தில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • உஸ்மான் தாரிக்கை பற்றி நாம் பேசி வருகிறோம்.
    • ஆனால், அவர் பந்து வீச வரும்போது இஷான் கிஷன் ஏற்கனவே டேமேஜ் செய்துவிட்டார்.

    டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டி விறுவிறுப்பாகவும், யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் தொல்வியை சந்தித்தது. இது ஒரு சைடாக முடிந்த போட்டி என்று கூட கூறலாம்.

    கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருந்தது. இருந்தபோதிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 175 ரன்கள் குவித்துவிட்டது.

    இந்த நிலையில், முதல் இன்னிங்சிலேயே பாகிஸ்தான் தோல்வியடைந்து விட்டது என்று அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வக்கார் யூனிஸ் கூறியதாவது:-

    பாகிஸ்தான் முதல் இன்னிங்சிலேயே தோல்வியடைந்து விட்டது. இந்தியா 175 ரன்களை சேர்த்ததும், பாகிஸ்தானிடம் இருந்து போட்டி நழுவி சென்றுவிட்டது. பந்து நன்றாக சுழன்று கொண்டிருக்கும்போது, சூர்யகுமார் யாதவ் தன்னுடைய பந்துவீச்சு மூலம் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்.

    பாகிஸ்தானின் பேட்டிங் சிறப்பானதாக இல்லை என்று ஏற்கனவே நமக்குத் தெரியும். எனினும், இந்தியா 175-க்குப் பதிலாக 140 அல்லது 150 ரன்கள் எடுத்திருந்தால், விசயம் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

    இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து நன்றாக டர்ன் செய்தது போன்று, பாகிஸ்தான பந்து வீச்சாளரக்ள் செய்யவில்லை. இந்தியா அதிகமான ரன்களை சேர்த்துவிட்டது.

    சூர்யகுமார் யாதவ் முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யாவிடம் கொடுத்தார். அடுத்த ஓவரை பும்ராவிடம் கொடுத்தார். அவர் ஸ்விங், சீமிங் மற்றும் ஸ்டம்பிற்கு நேராக பந்து வீசுதல் போன்றவற்றால் அமர்க்களப்படுத்தினார். இது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமானதாகிவிட்டது.

    உஸ்மான் தாரிக் சிறப்பாக பந்து வீசி ஒரு விக்கெட் வீழ்த்தி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு வாரமாக அவரைப் பற்றி நாம் பேசி வருகிறோம். ஆனால், அவரை மிகவும் பின்புதான் கொண்டு வந்தனர். அவர் பந்து வீச வரும்போது இஷான் கிஷன் ஏற்கனவே டேமேஜ் செய்துவிட்டார்.

    இவ்வாறு வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

    • ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
    • ஆஸ்திரேலியா அணி ஐ.சி.சி. போட்டிகளில் தொடர்ச்சியாக 15 வெற்றியை பெற்று இருந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 11வது வெற்றியை பெற்றது. 9வது வெற்றியை அடைந்த போது இந்தியா சாதனை படைத்து இருந்தது.

    இதற்கிடையே பாகிஸ்தானை தோற்கடித்தன் மூலம் இந்தியா புதிய சாதனையை நிகழ்த்தியது. ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடத்திய போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றது.

    2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதன் பிறகு ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஷிப் டிராபி (டி20, ஒருநாள்) போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

    இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 2006ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஐ.சி.சி. போட்டிகளில் தொடர்ச்சியாக 15 வெற்றியை பெற்று இருந்தது. இந்த சாதனையை இந்தியா தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

    இந்திய அணி இதற்கு முன்பு 2012-2014 வரை தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா உமர்சாய் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • இப்ராகிம் சத்ரான் 41 பந்துகளில் 53 ரன்களை விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 28வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. ஆப்கானிஸ்தான் 2 போட்டியில் தோற்று இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் தோற்றது.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. சோயிப்கான் அதிகபட்சமாக 48 பந்தில் 68 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), ஷரபு 31 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டர், 2 சிக்சர்), எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா உமர்சாய் 4 விக்கெட்டும், முஜிபுர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    161 ரன்களை ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இப்ராகிம் சத்ரான் அதிரடியாக ஆடினார். இவர் 41 பந்துகளில் 53 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினார். அடுத்து களமிறங்கிய குலாப்தீன் நயிப் 12 பந்துகளில் 13 ரன்கள், செதிகுல்லா 14 பந்துகளில் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இவர்களைத் தொடர்ந்து ஆடிய தார்விஷ் ரசூலி 23 பந்துகளில் 33 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தார். இவருடன் ஆடிய அசமதுல்லா ஓமர்சாய் 21 பந்துகளில் 40 ரன்களை (2 பவுண்டரிகள், 3 சிக்சர்) விளாசினார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா உமர்சாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய 28-வது லீக் ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. ஆப்கானிஸ்தான் 2 போட்டியில் தோற்று இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் தோற்றது.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. சோயிப்கான் அதிகபட்சமாக 48 பந்தில் 68 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), ஷரபு 31 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டர், 2 சிக்சர்), எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா உமர்சாய் 4 விக்கெட்டும், முஜிபுர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது.

    • உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது முறையாக பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.
    • திறமை இல்லாத ஒருவரிடம் பதவியைக் கொடுத்தால், அவர் அந்த அமைப்பையே அழித்துவிடுவார்.

    கொழும்பு:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது முறையாக பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார். அதில், உலகிலேயே மிகப்பெரிய குற்றம் என்ன தெரியுமா? தகுதி இல்லாத ஒருவரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான். திறமை இல்லாத ஒருவரிடம் பதவியைக் கொடுத்தால், அவர் அந்த அமைப்பையே அழித்துவிடுவார். என அக்தர் கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது இரு நாட்டு கேப்டன்களும் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

    கொழும்பு:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது வெற்றியை பெற்றது.

    கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.

    பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

    அதேபோல நேற்றைய போட்டியின் போது இருநாட்டு கேப்டன்கள் மீண்டும் கை குலுக்கலை தவிர்த்து கடந்து சென்றனர்.

    இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் இருவரும் மைதானத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் கட்டியணைத்து சிரித்த முகத்துடன் கைகுலுக்கி கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவுக்கு சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல ரசிகர்கள் இதுதான் ஸ்போர்ட்மேன்ஷிப் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மைதானத்தில் அரசியல் இருக்க கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர்.

    • உலகின் தலைசிறந்த பவுலர் என்பதை பும்ரா வெளிப்படுத்தினார்.
    • பந்துவீச்சில் அனைவரும் வழங்கிய பங்களிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

    கொழும்பு:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

    இஷான் கிஷன் 40 பந்தில் 77 ரன்னும் (10 பவுண்டரி , 3 சிக்சர்) , கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி), ஷிவம் துபே 17 பந்தில் 27 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சைம் அயூப் 3 விக்கெட்டும், கேப்டன் சல்மான் ஆகா, சகின் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது வெற்றியை பெற்றது.

    உஸ்மான் கான் அதிகபட்சமாக 34 பந்தில் 44 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), சகின்ஷா அப்ரிடி 19 பந்தில் 23 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா, பும்ராஅக்ஷர் படேல் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், திலக் வர்மா, தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்நிலையில் இந்த வெற்றியை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த வெற்றி இந்தியாவுக்கானது. நாங்கள் ஆட விரும்பிய அதே வகையான கிரிக்கெட்டை ஆடினோம். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்தது சிறந்த முடிவாக அமைந்தது.

    இஷான் கிஷன் புதுமையான சிந்தனையுடன் செயல்பட்டார். 0/1 என்ற நிலையில் யாராவது பொறுப்பேற்க வேண்டி இருந்தது, அதை அவர் அற்புதமாக செய்தார். கொஞ்சம் சரிவு இருந்தது. திலக்வர்மா, துபே, ரிங்கு ஆகியோர் பேட்டிங் செய்த விதம் பாராட்டத்தக்கது.

    முதலில் பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவு அல்லது ஆடுகளம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது. நாங்கள் எடுத்த ஸ்கோர் சராசரியை விட 15 ரன்கள் அதிகம் என உணர்ந்தோம். 155 ரன்கள் என்பது போட்டியை நெருக்கடியாக மாற்றி இருந்திருக்கும்.

    ஹர்திக் பாண்டியா சிறப்பான பந்துவீச்சு தொடக்கத்தை கொடுத்தார். உலகின் தலைசிறந்த பவுலர் என்பதை பும்ரா வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் அனைவரும் வழங்கிய பங்களிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் ஒரு அணியாக நல்ல நேரம் செலவிட்டு, அகமதாபாத் பயணத்தின் போது அடுத்த ஆட்டங்களை பற்றி சிந்திப்போம்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வருகிற 18-ந் தேதி அகமதாபாத்தில் எதிர் கொள்கிறது. 

    ×