என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வரும் போட்டிகளில் தவறிவிட்டால் ஆஸ்திரேலியா வெற்றியில் ஒன்றுமே இல்லை: ஜிம்பாப்வே கேப்டன்
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் சூப்பர் 8 சுற்றுக்கு வாய்ப்புள்ளது.
- அயர்லாந்து, இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற வேண்டும்.
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு ஜிம்பாப்வே அதிர்ச்சி அளித்தது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணி அடுத்து அயர்லாந்து, இலங்கை அணிகளுடன் மோத உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியில் ஒன்றுமே இல்லை என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிகந்தர் ரசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிகந்தர் ரசா கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது விளையாட்டின் ஒரு பகுதி. எனினும், அடுத்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் எங்களுக்கு தெரியும். நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கப் போகிறது.
தற்போது தவறிவிட்டால் வெற்றிகளில் ஒன்றுமே இல்லை. எல்லோரும் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். நேற்று போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தோம். ஓய்வு எடுத்தோம். இன்று நன்றாக பயிற்சி மேற்கொண்டோம். நாளை என்னைத் பொறுத்த வரையில் மற்றொது போட்டி அவ்வளவுதான். அநேகமாக இது முக்கியமான போட்டி.
இவ்வாறு சிகந்தர் ரசா தெரிவித்தார்.
நாளை ஜிம்பாப்வே அயர்லாந்து எதிர்த்து விளையாட இருக்கிறது. அதன்பின் 19-ந்தேதி இலங்கையை எதிர்கொள்கிறது.






