என் மலர்
விளையாட்டு
- சூப்பர் 8 சுற்றில் அகமதாபாத், சென்னை, கொல்கத்தாவில் இந்திய அணி விளையாடுகிறது.
- சென்னையில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வருகின்றன. இதுவரை இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன. "ஏ" பிரிவில் பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா ஆகியவற்றில் ஒரு அணி தகுதி பெற வேண்டியுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மோதும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1-ல் இந்தியா X1, வெஸ்ட் இண்டீஸ் X2, ஆஸ்திரேலியா X3, தென்ஆப்பிரிக்கா X4 என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி இந்தியா வருகிற ஞாயிற்றுக்கிழமை (22-ந்தேதி) தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
26-ந்தேதி (வியாழக்கிழமை) ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
3-வது மற்றும் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
- ஜிம்பாப்வே 2 வெற்றி, ஒரு போட்டி ரத்து மூலம் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
- ஆஸ்திரேலியா லீக் சுற்றோடு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறது.
டி20 உலகக் கோப்பையில் "பி" பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை உறுதி செய்துள்ளது.
ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததால் 3 போட்டிகளில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் ஓமனுடன் விளையாட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலேயில் நடைபெற இருந்தது. இந்த போட்டி மழையினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தால்தான் ஆஸ்திரேலியாவுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற சிறிய அளவில் வாய்ப்பு. அடுத்த போட்டியில் இலங்கையிடம் ஜிம்பாப்வே தோல்வியடைய வேண்டும்.
ஆனால் மழையால் டாஸ் கூட சுண்டப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஜிம்பாப்வே 1 புள்ளி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை தகர்ந்தது.
- இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
- இம்ரான் கான் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இம்ரான் கான் உடல்நிலை குறித்து அறிந்து வர, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளர், சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த பிறகு இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீதப் பார்வை மட்டுமே இருப்பதாகவும், வலது கண் நரம்பில் அடைப்பு காரணமாக இது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும் 2025 அக்டோபர் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாகப் பார்வை மங்கத் தொடங்கியும் சிறை அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததே இந்தப் பாதிப்பிற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, வரும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து இம்ரான் கானுக்கு முழுமையான பரிசோதனைகளை நடத்த வேண்டும். அவர் தனது குடும்ப மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல் உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த 14 புகழ்பெற்ற கேப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடித்தில், "முன்னாள் கேப்டன்களான நாங்கள், பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் கேப்டனும் உலக கிரிக்கெட்டின் புகழ்பெற்ற நபருமான இம்ரான் கானின் சிகிச்சை மற்றும் சிறைவாச நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலையுடன் எழுதுகிறோம். இம்ரான் கானின் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1992 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தானின் கேப்டன் இம்ரான் கானுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
- ஐசிசி ஏற்கனவே இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளது.
- அதில் தகுதி பெறாத அணிக்காக புதிய அணி சேர்த்துக் கொள்ளப்படும்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகள் அதே பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். அதனடிப்படையில் ஒரு அணி 4 போட்டிகளில் விளையாட வேண்டும்.
ஒரு பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 8-க்கு முன்னேறும். சூப்பர் 8 இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக முதல் இரண்டு குரூப்பில் இருந்து 4 அணிகளும், 2-வது குரூப்பில் இருந்து 4 அணிகளும் என பிரிக்கப்படும்.
ஆனால் இந்த முறை அவ்வாறு குரூப் 8 சுற்று பிரிவுகள் பிரிக்கப்படவில்லை. ஐசிசி தரவரிசை அடிப்படையில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 அணிகளை வைத்தது குரூப் 1 மற்றும் குரூப் 2 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் 2-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஏதாவது ஒரு அணி தகுதி பெறவில்லை என்றால் அதற்குப் பதிலாக லீக் குரூப் போட்டியில் தகுதி பெறும் அணி இடம் பெறும்.
உதாரணத்திற்கு "பி" பிரிவில் ஜிம்பாப்வே அடுத்த சுற்றுக்கு முன்னேற இருக்கிறது. இந்த சுற்றில் உள்ள ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக ஜிம்பாப்வே குரூப் 1-ல் இடம் பெறும்.
- இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர்.
- கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வாங்கினர்.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர்.
கேப்டன் மோனாங்க் படேல், துணை கேப்டன் ஜெஸ்ஸி சிங், சவுரப் நேத்ராவல்கர், மிலிந்த் குமார் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
- பெங்கால் முதல் இன்னிங்சில் 328 ரன்களும், ஜம்மு-காஷ்மீர் 302 ரன்களும் சேர்த்தனர்.
- ஜம்மு-காஷ்மீர் வெற்றிக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி டிராபி அரையிறுதி போட்டிகள் கடந்த 15-ந்தேதி தொடங்கின. மேற்கு வங்கத்தில் உள்ள கல்யாணியில் பெங்கால்- ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்கால் முதல் இன்னிங்சில் சுதிப் குமார் கராமி (146) சதத்தால் 328 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஜம்மு-காஷ்மீர் 302 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
16 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 99 ரன்னில் சுருண்டது. அக்யூப் நபி, சுனில் குமார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
பெங்கால் அணி 99 ரன்களில் சுருண்டதால் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 126 ரன்கள் இலங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 126 இலக்கை எட்டினால் ஜம்மு-காஷ்மீர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
- நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
- ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ரன்கள் (11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.
174 ரன்களை துரத்திய நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
2024ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு சென்ற ஆப்கானிஸ்தான் அணி நடப்பு தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குரூப் D பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா சிறிய வாய்ப்பு.
- மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஜிம்பாப்வே ஒரு புள்ளி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
டி20 உலகக் கோப்பையில் "பி" பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை உறுதி செய்துள்ளது.
ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததால் 3 போட்டிகளில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் ஓமனுடன் விளையாட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலேயில் நடைபெற இருந்தது. இந்த போட்டி மழையினால் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தால்தான் ஆஸ்திரேலியாவுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற சிறிய அளவில் வாய்ப்பு. அடுத்த போட்டியில் இலங்கையிடம் ஜிம்பாப்வே தோல்வியடைய வேண்டும்.
ஆனால் தற்போது மழை பெய்து வரும் நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஜிம்பாப்வே ஒரு புள்ளி பெற்று, இரண்டு வெற்றி, ஒரு முடிவு இல்லை என்பதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும்.
- கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார்.
- கனடா சார்பில் ஹெலிகர் மற்றும் சாத் பின் சஃபர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணியின் தொடக்க வீரரான கேப்டன் தில்பிரீத் பஜ்வா 39 பந்துகளில் 36 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், துவக்க வீரராக களமிறங்கிய யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ரன்கள் (11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார். கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி, ஜேகோப் டஃபி, கைல் ஜேமிசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 174 ரன்களை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் செய்ஃபெர்ட் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய ஃபின் ஆலென் 8 பந்துகளில் 21 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து நடையை கட்டினர்.
தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் கிளென் பிலிப்ஸ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரச்சின் 39 பந்துகளில் 59 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்சர்), கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 76 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.
நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கனடா சார்பில் ஹெலிகர் மற்றும் சாத் பின் சஃபர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
- கனடா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது.
- யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ரன்கள் விளாசினார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் தில்பிரீத் பஜ்வா 39 பந்துகளில் 36 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், துவக்க வீரராக களமிறங்கிய யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ரன்கள் (11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.
இதனால் கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி, ஜேகோப் டஃபி, கைல் ஜேமிசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- பதும் நிசாங்கா சதம் விளாசினார்.
- குசால் மெண்டிஸ் அரைசதம் அடித்தார்.
டி20 உலகக் கோப்பையில் இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நடைபெற்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது மிட்செல் மார்ஷ் (54), டிராவிஸ் ஹெட் (56) ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. பதும் நிஷாங்கா, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குசால் பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து நிஷாங்கா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிசாங்கா 32 பந்தில் அரைசதமும், குசால் மெண்டிஸ் 35 பந்தில் அரைசதமும் அடித்தனர்.
குசால் மெண்டிஸ் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பவன் ரத்னாயகே களம் இறங்கினார். பதும் நிசாங்கா அரைசதத்தை வெற்றிகரமாக சதமாக மாற்றினார். அவர் 52 பந்தில் சதம் விளாசினார். இந்த டி20 உலகக் கோப்பையில் முதல் சதம் இதுவாகும். இவரது சதத்தால் இலங்கை 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நிசாங்கா 100 ரன்களுடனும், ரத்னயகே 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் மங்கியுள்ளது.
- ஆஸ்திரேலியா 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் குவித்தது.
- கடைசி 3 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே அடித்தது.
டி20 உலகக் கோப்பையில் இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிட்செல் மார்ஷ் 27 பந்தில் 54 ரன்களும், டிராவிஸ் ஹெட் 29 பந்தில் 56 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
கேமரூன் கிரீன் (3), டிம் டேவிட் (6) ஏமாற்றம் அடைந்தனர். ஜோஷ் இங்லிஸ் 27 ரன்களும், மேக்ஸ்வெல் 22 ரன்களும் அடித்தனர்.
ஆஸ்திரேலியா 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்துள்ளது.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 8.2 ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் விக்கெட்டுகளை மளமளவென இழந்து 200 ரன்களை தாண்ட முடியவில்லை.






