என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் அமெரிக்காவின் கோகோ காப், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 174 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

    முதல் இரு டி20 போட்டியில் இங்கிலாந்தும், 3வது டி20 போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் 41 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே நியூசிலாந்து அதிரடியில் மிரட்டியது.

    தொடக்க ஆட்டக்காரர் சைபர்ட் 32 பந்தில் 48 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 25 பந்தில் 42 ரன்னும், சாப்மேன் 25 பந்தில் 40 ரன்னும் குவித்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து 17.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 2-2 என சமனிலைப்படுத்தியது.

    நியூசிலாந்து சார்பில் 3 விக்கெட் வீழ்த்திய மிட்செல் சான்ட்னருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. பேர்ஸ்டோவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    • டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடந்த கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 92 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்கா 41 ரன்னும், அசலங்கா 36 ரன்னும், துனித் வெல்லேலகே 33 ரன்னும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நயீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. 37.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டினால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அந்த அணியின் முகமது நபி 32 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 65 ரன்கள் விளாசினார். ஹஷ்மதுல்லா ஷகிடி 59 ரன்கள் எடுத்தார். ரஹ்மத் ஷா 45 ரன்கள் சேர்த்தார்.

    கடைசி கட்டத்தில் ரஷித் கான் அதிரடியாக ஆடி 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    இலங்கை சார்பில் காசுன் ரஜிதா 4 விக்கெட்டும், துனித் வெல்லலகே, தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணி மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆல் ரவுண்டர் சோம்பால் காமி கடைசியில் வந்து 48 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடிய நேபாளம் அணி வீரர்களுக்கு இந்திய அணி சார்பில் பதக்கம் வழங்கப்பட்டது.

    ஆல் ரவுண்டர் சோம்பால் காமிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் அரை சதம் விளாசிய ஆசிப் ஷேக்கிற்கு விராட் கோலியும் பதக்கம் வழங்கினார். இந்த தருணத்தை நேபாளம் அணி தங்களது டுவிட்டரில் பதிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    • தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக். இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    30 வயதான குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார். 140 போட்டிகளில் இடம்பெற்றுள்ள அவர் 17 சதம் மற்றும் 29 அரை சதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்களை எடுத்துள்ளார். டி காக் ஒருநாள் போட்டிகளில் 197 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். (183 கேட்சுகள், 14 ஸ்டம்பிங்).

    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று இந்தியா அறிவித்தது.
    • அக்டோபர் 7-ந் தேதி தென் ஆப்பிரிக்கா அணி முதல் லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர் கொள்கிறது.

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று இந்தியா அறிவித்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியும் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது.

    அக்டோபர் 7-ந் தேதி தென் ஆப்பிரிக்கா அணி முதல் லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர் கொள்கிறது.

    தென்னாப்பிரிக்கா அணி:

    1. டெம்பா பவுமா (கேப்டன்) 2. ஜெரால்ட் கோட்ஸி 3. குயின்டன் டி காக் 4. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 5. மார்கோ ஜான்சன் 6. ஹென்ரிச் கிளாசென் 7. சிசண்டா மகலா 8.கேசவ் மஹராஜ் 9. ஐடன் மார்க்ரம் 10. டேவிட் மில்லர் 11. லுங்கி என்கிடி 12. அன்ரிச் நார்ட்ஜே 13. தப்ராஸ் ரபஹாம் 14. டாகிசோ ரபஹாம் 15. ராஸ்ஸி வான் டெர் டுசென்.

    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது.
    • தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.

    உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த அணியில் முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர்.

    தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு தமிழக வீரர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உள்ளூரில் உலகக்கோப்பை நடப்பது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. கோப்பையை நாம் அனைவரும் வீட்டிற்கு கொண்டு வருவோம் என கூறினார்.

    • நாம் பாரதியர்கள் என சேவாக் கூறியுள்ளார்.
    • சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாரத் என மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்திருந்தார். அதில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என கூறியிருந்தார்.

    சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார். இந்த படம் தமிழக அளவில் வெற்றி கண்டது. ஏன் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு படமாக இருந்தது என்றே கூறலாம்.

    • இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர்.
    • எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

    பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் ஏந்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். டீம் இந்தியா அல்ல. டீம் பாரத். தனது கருத்து அரசியல் சார்பு சார்ந்தது அல்ல. சமீபத்திய தேர்தல்களில் இரண்டு அரசியல் கட்சிகளின் சலுகைகளை நான் நிராகரித்தேன்.


    ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை பர்மா மீண்டும் மியான்மர் என மாற்றியது. மேலும் பலர் தங்கள் அசல் பெயருக்கு திரும்பிவிட்டனர்.

    என அவர் கூறினார்.

    • இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
    • போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்களுடன் நேபாள் அணி வீரர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி கொண்டனர்.

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய நேபாளம் அணி 48.02 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. மழை பெய்ததால் ஓவர் குறைக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 23 ஓவரில் 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழைக்கு பிறகு ஆடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்களுடன் நேபாள் அணி வீரர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி கொண்டனர். மேலும் நேபாள் அணியின் ஆல்ரவுண்டர் சோம்பல் காமி அவரது ஷூவில் விராட் கோலியின் ஆட்டோகிராபை வாங்கினார்.

    இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்த சோம்பல் காமி, விராட் கோலி கிரிக்கெட்டர் அல்ல, எமோசன் என தலைப்பு வைத்திருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    • உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவித்துள்ளன.
    • இந்த முறையும் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவில்லை.

    டெல்லி:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவில்லை. துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி:-

    1. ரோகித் சர்மா 2. சுப்மன் கில் 3. விராட் கோலி 4. ஸ்ரேயாஸ் அய்யர் 5. ஹர்திக் பாண்ட்யா 6. ஜடேஜா 7.கே.எல்.ராகுல் 8. குல்தீப் யாதவ் 9. முகமது சமி 10. முகமது சிராஜ் 11. பும்ரா 12. ஷர்துல் தாகூர் 13. சூர்யகுமார் யாதவ் 14. இஷான் கிஷன் 15. அக்சர் படேல்

    உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவித்துள்ளன.

    • ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
    • சபலெங்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான அரினா சபலென்கா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    சபலென்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

    ×