என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேபாளம் அணி"

    • டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.
    • நேபாளம் அணி 180 ரன்கள் அடித்து தோல்வியடைந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. பெத்தேல், ஹாரி புரூக் அரை சதம் கடந்தனர்.

    அடுத்து ஆடிய நேபாளம் இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் அணி 4 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.

    நேபாள அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு இங்கிலாந்து கேப்டன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இங்கிலாந்தை கதிகலங்க வைத்த நேபாள் அணிக்கு, தனது சேவைகள் தேவைப்பட்டால் வழங்கத் தயாராக உள்ளதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் பெத்தேல், ஹாரி புரூக் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. பெத்தேல், ஹாரி புரூக் அரை சதம் கடந்தனர்.

    அடுத்து ஆடிய நேபாளம் இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் அணி 4 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.

    நேபாள அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு இங்கிலாந்து கேப்டன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் போட்டிக்கு பிறகு நேபாள அணி கேப்டன் ரோகித் பவுடல் பேசியதாவது:

    எங்களது வீரர்கள் தங்களது முழு முயற்சியையும் களத்தில் காட்டினர். அவர்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

    நாங்கள் உலகக் கோப்பைக்கு நம்பிக்கையுடன் தான் வந்துள்ளோம். வெறுமனே பங்கேற்றுவிட்டு செல்வதற்காக இங்கு வரவில்லை.

    முயற்சி என வரும்போது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் 100 சதவீத பங்களிப்பை வழங்கினோம்.

    கடைசி ஓவரை சாம் கர்ரன் உண்மையிலேயே சிறப்பாக வீசினார்.

    எங்களை நினைத்து நேபாள ரசிகர்கள் பெருமைப்படுவார்கள். நாங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அதேபோல், மற்ற அணிகளும் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்க மாட்டார்கள். இந்த ஆட்டம் உணர்த்திய செய்தி இது தான் என தெரிவித்தார்.

    • முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணி மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆல் ரவுண்டர் சோம்பால் காமி கடைசியில் வந்து 48 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடிய நேபாளம் அணி வீரர்களுக்கு இந்திய அணி சார்பில் பதக்கம் வழங்கப்பட்டது.

    ஆல் ரவுண்டர் சோம்பால் காமிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் அரை சதம் விளாசிய ஆசிப் ஷேக்கிற்கு விராட் கோலியும் பதக்கம் வழங்கினார். இந்த தருணத்தை நேபாளம் அணி தங்களது டுவிட்டரில் பதிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×