என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்த போட்டியில் அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தார்.
    • தென்ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி வீரரான எய்டன் மார்க்கம் 102 ரன்களையும், துவக்க வீரர் டி காக் 82 ரன்களையும் குவித்து அசத்தினர்.

    பின்னர் 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 34.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அவுட் ஆன விதம் அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அவர் 78 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரன் ஓடும்போது தனது காலில் இருந்த ஷூ நழுவியதால் தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எதிர் முனையில் உள்ள கிரீசை தொட முடியாமல் ரன் அவுட்டாகி பரிதாபமான முறையில் வெளியேறினார்.

    இந்த போட்டியில் அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    அவர் ஆட்டமிழந்த வீடியோ கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததும் நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி இறுதியில் தோல்வியையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சுப்மன் கில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் விராட் கோலி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் சுப்மன் கில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் விராட் கோலி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    • இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்திய அணியில் கேப்டன் ரோகித் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து 53 ரன்களை குவித்து இருந்தார்.

    கொழும்பு :

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து 53 ரன்களை குவித்து இருந்தார்.

    போட்டி முடிந்த நிலையில் ரசிகர் ஒருவருடன் சைகையில் பேசி அவரை மகிழ்வித்தார். இந்த சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தப் போட்டிக்கு பின் மைதானத்தில் பிற இந்திய வீரர்களுடன் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோகித், ரசிகர் ஒருவர் தேசியக் கொடியுடன் நிற்பதை பார்த்தார். அந்த ரசிகர் தேசியக் கோடியை கீழே இறக்கி வைத்திருந்தார். இந்தியா வெற்றி பெற்றதால் தேசியக் கொடியை மேலே தூக்கி நன்றாக ஆட்டுமாறு தன் கையில் வைத்திருந்த பேட் மூலமாக அவருக்கு சைகை காட்டினார்.

    இதை எதிர்பாராத அந்த ரசிகர், ரோகித் தன்னுடன் சைகையில் பேசிய மகிழ்ச்சியோடு, தேசியக் கொடியை மேலே தூக்கி ஆட்டினார். அதைக் கண்டு ரோகித்தும் மகிழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. 


    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.
    • ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம்.

    மும்பை:

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய வீரர்களின் திறமையை பரிசீலிக்காமல், ஜோதிடரை அணுகி வீரர்களின் ராசி பலன்களை பார்த்து தேர்வு செய்தது தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி விளையாடிய போது இந்திய கால்பந்து சங்கத்தின் அதிகாரி ஒருவரின் மூலம் ஜோதிடரை, அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அணுகியிருக்கிறார். அந்த தகுதிச்சுற்றின் ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம், எந்தெந்த வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என அணியின் விவரங்கள் அத்தனையையும் ஜோதிடரிடம் கொடுத்தே இகோர் ஸ்டிமாக் ஆலோசனை பெற்றிருக்கிறார்.

    கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங்11 பட்டியலை 2 நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியுள்ளார்.

    ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து , இவர் இன்று நன்றாக விளையாடுவார். இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. ஏனென்றால் அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் கூறியது தான் காரணம்.

    மேலும் ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம். மேலும், இந்திய அணிக்காக ஆலோசனை வழங்கியதற்காக அந்த ஜோதிடருக்கு ரூ. 15 லட்சம் சன்மானமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    • இலங்கை 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
    • இலங்கை அணியின் கேப்டன் சனாகா வந்த முதலே அதிரடியாக விளையாடினார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய இலங்கை 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இந்நிலையில் அடுத்து வந்த கேப்டன் சனாகா வந்த முதலே அதிரடியாக விளையாடினார். ரவீந்திர ஜடேஜா வீசிய 26-வது ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அப்போது இந்திய வீரர்கள் அதை கொண்டாட துவங்கிய நிலையில் விராட் கோலி ஓடிவந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கொண்டாடியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக கேப்டன்ஷிப் விவாகரத்தில் இருவருக்கும் சண்டை விரிசல் என கடந்த காலங்களில் பலமுறை ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் அதை அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். அதை மேலும் மறுக்கும் வகையில் இந்த தருணம் அமைந்தது என்றே சொல்லலாம்.


    இந்திய பேட்டிங் துறையின் இரு துருவங்களாகவும் முன்னாள் இந்நாள் கேப்டன்களாகவும் திகழும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் அன்பாக கட்டுப்படுத்தி வெற்றியை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்த போட்டியில் ரோகித் சர்மா 53 ரன்னில் அவுட் ஆனார்.
    • விராட் கோலி 3 ரன்னில் வெளியேறினார்.

    சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட், சரித் அசாலங்கா 4 விக்கெட், மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 41.3 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டி தகுதி பெற்றது.

    இந்நிலையில் ரோகித் - விராட் கோலி ஜோடி பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் 2-வது விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி 10 ரன் எடுத்தது. இதையும் சேர்த்து அவர்கள் பார்ட்னர்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். 86 ஒருநாள் போட்டி இன்னிங்சில் இதை எட்டி சாதனை படைத்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் டெஸ்மான்ட் ஹெய்ன்ஸ் ஜோடி 97 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களை எட்டியதே அதிவேகமாக இருந்தது.

    மேலும் இந்திய தரப்பில் டெண்டுல்கர் சவுரவ் கங்குலி, ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோருக்கு பிறகு 5 ஆயிரம் ரன்களை கடந்த ஜோடியாகவும் ரோகித்- கோலி திகழ்கிறார்கள்.

    • இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 172 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 22 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு டோனிதான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டோனியால்தான் இன்று ரோகித் சர்மா ரோகித் சர்மாவாக உள்ளார். ரோகித்தின் கேரியரில் இந்த திருப்புமுனை ஒரே ஒரு மனிதனால் மட்டுமே சாத்தியமானது. அவர்தான்எம்எஸ் டோனி. ரோகித் வாழ்க்கையின் முதல் ஆறு ஆண்டுகள் கடினமான நேரத்தில் டோனி அவரை ஆதரித்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறங்குமாறு ரோகித்திடம் டோனி கேட்டு கொண்டார்.

    மிடில் ஆர்டர் பேட்டராக இருந்து தொடக்க ஆட்டக்காரராக மாறிய பிறகு ரோகித்தின் கேரியர் முற்றிலும் மாறிவிட்டது. இன்று அவர் எல்லா காலத்திலும் சிறந்த ஒயிட்-பால் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டுடன் சமநிலையில் உள்ளார்.
    • விளையாட்டு வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

    நியூயார்க்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஓபனை கைப்பற்றி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தினார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டுடன் சமநிலையில் உள்ளார். 36 வயதான ஜோகோவிச் இந்த ஆண்டில் நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விம்பிள்டனை தவிர மற்ற மூன்றிலும் கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார்.

    இந்த நிலையில் அவரது எதிர்கால திட்டம் குறித்து அவரது பயிற்சியாளர் கோரன் இவானிசெவிச் அளித்தபேட்டியில், '24 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச் சாதனை உண்மையிலேயே வியப்புக்குரியது. அவர் தொடர்ந்து சாதிக்கும் வேட்கையில் இருக்கிறார். இன்னும் சாதனைகளை உடைக்கிறார். நம்ப முடியாத ஒரு டென்னிசை விளையாடிக்கொண்டு இருக்கிறார். விளையாட்டு வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். நான் டென்னிஸ் குறித்து மட்டும் பேசவில்லை. பொதுவாக எல்லா விளையாட்டையும் சேர்த்து தான் சொல்கிறேன். அவர் ஒரு வின்னர். தனக்கு தானே உத்வேகம் அளிப்பதில் ஜோகோவிச்சும் ஒருவர்.

    25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதும் அவர் ஓய்வு பெறுவாரா? என்று கேட்கிறீர்கள். இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி வரை விளையாட வேண்டும் என்பதே அவரது திட்டம்' என்றார்.

    • சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

    இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

    சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட், சரித் அசாலங்கா 4 விக்கெட், மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவரில் 172 ரன்னுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் செய்தனர். இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியை ஆல் அவுட் செய்ததன் மூலம் இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது எதிரணியை தொடர்ச்சியாக 14 முறை ஆல் அவுட் செய்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.

    • ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் ஆவார்.
    • ஆசிய கோப்பையின் கடைசி 2 போட்டிகளில் குல்தீப் யாதவ் 9 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா அரை சதத்தால் 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். கடைசி 2 போட்டிகளில் அவர் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் பெற்றிருக்கிறார். இவர் 88 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இந்தப் பட்டியலில் முகமது ஷமி (80 ஒருநாள் போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 106 போட்டிகளில் 150 விக்கெட் எடுத்துள்ளார்.

    உலக அளவில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 338 ரன்கள் குவித்தது.
    • தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே ரன்களை குவித்தது. இதனால் அந்த அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. மார்கரம் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். மார்க்ரம் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி காக் 82 ரன்னும், பவுமா 57 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மட்டும் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 38 ரன்னும், மிட்செல் மார்ஷ் 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சார்பில் ஜெரால்டு கொயட்சி 4 விக்கெட்டும், சம்ஷி, மகராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஆட்ட நாயகன் விருது மார்க்ரமுக்கு வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய இந்தியா 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் விளாசினார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.

    கே.எல்.ராகுல் 39 ரன்னும், இஷான் கிஷன் 33 ரன்னும், அக்சர் படேல் 26 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டும், சரித் அசலங்கா 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் முதலில் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனால் இலங்கை அணி 99 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 7வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லாலகே ஜோடி 63 ரன்களை சேர்த்தது. டி சில்வா 41 ரன்னில் அவுட்டானார். கடைசி வரை போராடிய வெல்லாலகே 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ்ப் 4 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது துனித் வெல்லாலகேவுக்கு வழங்கப்பட்டது.

    ×