search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் குல்தீப்
    X

    ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் குல்தீப்

    • ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் ஆவார்.
    • ஆசிய கோப்பையின் கடைசி 2 போட்டிகளில் குல்தீப் யாதவ் 9 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா அரை சதத்தால் 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். கடைசி 2 போட்டிகளில் அவர் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் பெற்றிருக்கிறார். இவர் 88 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இந்தப் பட்டியலில் முகமது ஷமி (80 ஒருநாள் போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 106 போட்டிகளில் 150 விக்கெட் எடுத்துள்ளார்.

    உலக அளவில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×