என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கஞ்சா, போதை மருந்து கும்பலுடன் ஜிப்மர் டாக்டர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
புதுச்சேரி:
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் கடந்த 5-ந் தேதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முதலியார்பேட்டை நூறடி சாலையில் ஸ்ரீனிவாஸ் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக விடுதி மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அதே விடுதியின் மற்றொரு அறையில் புதுவையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன், பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கஞ்சா மற்றும் போதை ஊசி செலுத்தி மயங்கிய நிலையில் கிடந்தார். போதை தெளிந்ததும் விசாரித்ததில் அந்த பெண் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைபார்த்து வருபவர் என்பதும் போதை மருந்துக்கு அடிமையாகி அதைத் தேடி இங்கு வந்ததும் தெரியவந்தது. போதை மருந்து வாங்கிக் கொடுத்த வாலிபரும் அவரது அறையில் இருந்தபோது போலீசில் சிக்கினார்.
இதையடுத்து கஞ்சா, போதை ஊசி ஆகியவை அவர்களுக்கு கிடைத்தது எப்படி? சப்ளை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
தங்கும் விடுதியில் கஞ்சா, போதை ஊசி ஆகியவற்றுடன் சிக்கியவர்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கு கஞ்சா, போதை மருந்து ஆகியவற்றை ஆரோவில்லில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் ரஷிய நாட்டை சேர்ந்த இவான் (வயது 23) என்பவர் கொடுத்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் லாஸ்பேட்டை பெலிக்ஸ் (32) என்பவர் கஞ்சா மற்றும் போதை மருந்து சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இவான், பெலிக்ஸ் அவரது கூட்டாளிகளான வில்லியனூர் பார்த்தசாரதி (23), மணிகண்டன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் 2 போதை மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
சாதாரணமான இவர்களுக்கு போதை ஊசி மருந்து கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரித்தபோது, இதில் டாக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. அதாவது, கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் துரையரசன் (29) என்பவர் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 3 போதை மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதை பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதலானது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கஞ்சா, போதை மருந்து சப்ளை செய்ததில் மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களை குறிவைத்து கஞ்சா, போதை மருந்து விற்கப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கஞ்சா, போதை மருந்து சப்ளை கும்பலை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், குற்றப்பிரிவு போலீசார் அம்பேத்கர், கந்தவேலு, சிரஞ்சீவி, துளசி, ராஜ்குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து தெற்குப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் பாராட்டினார்.

புதுவை கரிக்கலாம்பாக்கத்தில் ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்:
புதுவை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ரவி என்கிற ரவிக்குமார் (வயது27). ரவுடி. திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். அதே பகுதியில் வசித்து வருபவர்கள் அருணாசலம் (30), அருண்பாண்டியன் (25). அண்ணன், தம்பியான இவர்கள் ரவுடிகள். நேற்று முன்தினம் ரவிக்குமாருக்கும், அருண்பாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் முகத்தில் ரவிக்குமார் கத்தியால் வெட்டினார். இதையடுத்து அவரை பழிக்குப்பழி வாங்க அருண்பாண்டியனும், அவரது அண்ணன் அருணாசலமும் சதி திட்டம் தீட்டினர்.
இந்தநிலையில் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே பாழடைந்த மருத்துவமனை குடியிருப்பில் நேற்று இரவு ரவிக்குமார் தனது நண்பர்கள் கார்த்திக், சித்தானந்தன் ஆகியோருடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.
இதுபற்றி தெரிந்து கொண்ட அருணாசலம், அருண்பாண்டியன் ஆகியோர் கூட்டாளி மணிகண்டன் என்பவருடன் சென்று அங்கு கிடந்த மது பாட்டில்களை எடுத்து கார்த்திக், சித்தானந்தன் ஆகியோரை தாக்கினர். குடிபோதையில் இருந்த ரவிக்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செத்தார். இதுபற்றி தெரியவந்ததும் மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தப்பிஓடிய அருணாசலம், அருண்பாண்டியன், மணிகண்டன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரைக்காலில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமினை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
காரைக்கால்:
மத்திய, மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் திருச்சியைச் சேர்ந்த ஆர்.எஸ் கல்வி அறக் கட்டளை சார்பில் காரைக் கால் பஸ் நிலைய மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் கமலக் கண்ணன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், துணை கலெக்டர் ஆதர்ஷ், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி தயாளன், ஆர்.எஸ்.கல்வி அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட 400 பேருக்கு தையல், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு தேவையான தேநீர், உணவு மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்படும்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும், கிராமப்புற மக்கள் சுயதொழில் செய்வதற்கு ஏதுவாக தையல், கணினி, சுயஉதவிக் குழுக்கள் மூலம் வாகனங்கள் வாங்கி சுயதொழில் செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதுச்சேரி, காரைக்காலில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையினால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவிடம், அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுமார் 300 கி.மீ சாலைகள் பாதிப்பு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் சுமார் ரூ.2,800 ஹெக்டேர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாதிப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் சேர்த்து புயல், மழையால் சுமார் ரூ.400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக இடைக்கால நிதியாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வில்லியனூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 29). தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது மனைவி கீதாவுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கீதா தனது தாயாரின் வீட்டுக் கு சென்று விட்டார். இதனால் சுகுமார் மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
காட்டுக்குப்பத்தில் வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் பேட் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது சைக்கிளில் காட்டுக்குப்பம் துணை மின் நிலையம் அருகே சென்ற போது, கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வேன் எதிர்பாராத விதமாக மூர்த்தியின் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை, வேளாண் இயக்குனர்களுடன் கவர்னர் கிரண்பேடி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
கவர்னர் கிரண்பேடி பல்வேறு துறை தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனர் ருத்ரகவுடு உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள், விரிவுரையாளர்களுடன் அவ்வப்போது பள்ளிக்கல்வி இயக்குனர் கலந்துரையாடல் நடத்த வேண்டும். பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களை நடத்த வேண்டும். பள்ளி நிர்வாகம் சார்பில் படிப்பு முடிந்ததும் திரும்பத் தரும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தியுடன் ஆலோசனை நடத்தினார். இதுபற்றி அவர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
வேளாண் துறை செயல்முறையில் தொடர்ச்சியான நடைமுறையை உறுதிப்படுத்த சரியான தகவல் தொடர்பு உத்திகளை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் தொடங்கி அனைத்து தேவையான தகவல்களையும், அரசு கொள்கை சார்ந்த விஷயங்களையும் விவசாயிகளுக்கு தெரிவிக்க குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வசதியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.
வேளாண்துறை இணையத்தளத்தில் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் தமிழில் தகவல்கள் இருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் வேளாண்துறையில் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துரையாடல் அவசியம். விவசாயிகளை அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இவை அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிரவியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த நிரவி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரும் இவரது மனைவியும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரியில் வசித்து வரும் மகனை பார்ப்பதற்காக சென்றனர். நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஜன்னல் உடைந்து கிடந்தது.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அது குறித்து ராமலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே புதுவையில் இருந்து காரைக்காலுக்கு விரைந்து வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் புகார் செய்ததன்பேரில் நிரவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ராமலிங்கத்தின் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தொடர்ந்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு தெரிந்து கொண்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பெண்களுக்கான கல்வி, தொழில் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளியில் புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு துறை சார்பில் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்து தையல் உபகரணங்களை வழங்கினார். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் மலர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடிவு செய்து சர்க்கரை ஆலை, பஞ்சாலைகளை திறக்க முயன்றோம். ஆனால் ஆலைகளை மூடி விடுங்கள் என கவர்னர் கூறிவிட்டார். கவர்னரை எதிர்த்து நாங்கள் ஒரு போராட்டமே நடத்தி வருறோம். ஆனால், அவர் ஒரு சதவீதம் கூட மாறவில்லை. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு குடிபெயர்ந்த காலம் போய், இங்கிருந்து பலரும் தமிழகத்துக்கு போகின்றனர். இதற்கு, கவர்னர் தான் காரணம்.
அரசு சார்பில் இலவச அரிசிக்குப் பதில் 5 மாதத்துக்கான பணம் தர கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவர் 3 மாதத்திற்கு மட்டுமே அனுமதித்துள்ளார். அந்த தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மகளிர், மாற்றுத் திறனாளிகள் வாங்கிய கல்வி, தொழில் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இதற்கு முதல்-அமைச்சர் சம்மதம் தெரிவிப்பார். இது தொடர்பான கோப்புகளை தயார் செய்து கவர்னரை சந்தித்து வழங்குவேன். அவர் ஒப்புதல் அளிக்கா விட்டால் மத்திய அரசிடம், மக்கள்படும் சிரமங்களை எடுத்துக்கூறி கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம்.
மத்திய அரசும் ஒப்புதல் வழங்கவில்லையென்றால் மக்களை திரட்டி போராடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வில்லியனூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்கள் திருடி வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் புறவழிச்சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை வழிமறித்து விசாரித்தனர். இதில், அதை திருடிக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில், கீழஅக்ரகாரத்தை சேர்ந்த ரகு (வயது 34), வில்லியனூர் மூர்த்திநகர் ராஜவேல் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.
தவளக்குப்பம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தி அடைந்த மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு புதுநகரை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 59) மீனவர். மது பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மது குடிக்க மனைவி சரசுவிடம் பணம் கேட்டபோது தர மறுத்ததால் விரக்தி அடைந்த செல்லக்கண்ணு அருகில் உள்ள கொட்டகைக்கு சென்று தூக்குப்போட்டு தொங்கினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து செல்லக்கண்ணுவை அவரது குடும்பத்தினர் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே செல்லக்கண்ணு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை சாரத்தில் இருந்து சாலையின் நடுப்பகுதியில் எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் இருந்து கோட்டக்குப்பம், மரக்காணம் வழியாக சென்னை வரை பல்வேறு ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை விளங்குகிறது. இதில் புதுவை சாரத்தில் இருந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் இருப்பதால் அந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.
போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக உள்ளதால் இரவில் போதுமான வெளிச்சம் இல்லாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதேபோல் புதுவை - கடலூருக்கு செல்லும் வெங்கட சுப்பையா சிலை சதுக்கத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக எரியாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எரியாமல் உள்ள மின்விளக்குகளை உடனே சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுவையில் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் நடைபெற்றது. இதையொட்டி புதிய பஸ் நிலைய வாசலில் சாலை மறியல் நடந்தது.
அப்போது மறைமலை அடிகள் சாலை வழியாக முதல்-அமைச்சர் நாராயணசாமி காரில் வந்தார். மறியலை பார்த்த அவர் காரை விட்டு இறங்கி மறியலில் ஈடுபட்ட தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் ஜனநாயக விரோதமாக எதிர்கட்சிகள் எதிர்ப்பை மீறி 3 வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜனதா அரசு நிறைவேற்றியது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான இந்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பிலும், விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் மறியலில் ஈடுபட்ட தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டேன். புதுவையில் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்படும்.