என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் அவதி
    X
    எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் அவதி

    கிழக்கு கடற்கரை சாலையில் எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் அவதி

    புதுவை சாரத்தில் இருந்து சாலையின் நடுப்பகுதியில் எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து கோட்டக்குப்பம், மரக்காணம் வழியாக சென்னை வரை பல்வேறு ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை விளங்குகிறது. இதில் புதுவை சாரத்தில் இருந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் இருப்பதால் அந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.

    போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக உள்ளதால் இரவில் போதுமான வெளிச்சம் இல்லாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    இதேபோல் புதுவை - கடலூருக்கு செல்லும் வெங்கட சுப்பையா சிலை சதுக்கத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக எரியாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எரியாமல் உள்ள மின்விளக்குகளை உடனே சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×