என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் இன்று 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,444 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்தை தாண்டியது. மொத்த பாதிப்பு 98,26,775 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 442 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,628 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,24,328 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 33,494 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,444ஆக உயர்ந்துள்ளது.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் தொடங்கும் என்று கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் மோகன் கூறினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் இயங்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அணுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில், சனிக்கிழமை ்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிபெயர்ச்சி விழா என்கிறோம்.
விழா பாதுகாப்பு குறித்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், புதுச்சேரி கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த்மோகன், நேற்று முன்தினம் மாலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, முழு பாதுகாப்பு வழங்குவது குறித்து, காவல் துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களுக்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
விழாவையொட்டி, புதுச்சேரியில் இருந்து சிறப்பு படை வரவழைக்கப்படும். இன்று (சனிக்கிழமை) முதல் போலீசாரின் பாதுகாப்பு நடைமுறைகள் தொடங்கப்படும். கோவில் நிர்வாகம் ஆன் லைன் மூலம் முன் பதிவு செய்தவர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
அதன்படி உரிய சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காவல்துறையினர், கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்ற வேண்டும். சட்டம்- ஒழுங்கு பிரச்சினை எதுவும் இன்றி செயல்பட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காரைக்கால் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, காரைக்காலில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த்மோகன் ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிஹாரிக்காபட், போலீஸ் சூப்பிரண்டுகள் வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிரவியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த நிரவி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரும் இவரது மனைவியும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரியில் வசித்து வரும் மகனை பார்ப்பதற்காக சென்றனர். நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஜன்னல் உடைந்து கிடந்தது.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அது குறித்து ராமலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே புதுவையில் இருந்து காரைக்காலுக்கு விரைந்து வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் புகார் செய்ததன்பேரில் நிரவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ராமலிங்கத்தின் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தொடர்ந்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு தெரிந்து கொண்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
வில்லியனூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுகுமார் (வயது29). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கீதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இதனால் கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உருவாகி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகுமாரிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி கீதா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி கோபித்து சென்றது முதல் சுகுமார் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை முடிவை கையில் எடுத்த சுகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே அரசூர் தென்றல்நகர் களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகள் ராஜேஸ்வரி (வயது22). இவர் தந்தைக்கு உதவியாக மளிகை கடையை கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று கோவிந்தராஜ் வெளியே சென்றிருந்ததால் ராஜேஸ்வரி மளிகை கடையில் வியாபாரத்தை கவனித்தார்.
பின்னர் கோவிந்தராஜ் மளிகை கடைக்கு வந்து ராஜேஸ்வரியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் ராஜேஸ்வரி வீட்டுக்கு செல்லவில்லை. இதையடுத்து ராஜேஸ்வரியை தோழிகள் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். எங்கும் ராஜேஸ்வரி இல்லை.
இதைதொடர்ந்து கோவிந்தராஜ் தனது மகள் ராஜேஸ்வரி மாயமானது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தவளக்குப்பத்தில் வேலைக்கு செல்ல தாய் அனுமதிக்க மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
தவளக்குப்பம் சதாநகரை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் அப்பகுதியில் பகுதியில் உள்ள ஒரு அரிசிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர்களது மகள் திவ்யபாரதி (வயது19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதற்கிடையே திவ்யபாரதி வேலைக்கு செல்ல விரும்பினார். ஆனால் அவரது தாயார் பாக்கியலட்சுமி வேலைக்கு செல்லவேண்டாம் எனக்கூறி மேற்கொண்டு படிக்குமாறு அறிவுறுத்தி வந்தார்.
இதனால் திவ்யபாரதி மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்றும் இதுதொடர்பாக திவ்யபாரதி தனது தாயிடம் வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து விட்டு வழக்கம்போல அரிசி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த திவ்யபாரதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு மின்விசிறி கொக்கியில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பாக்கியலட்சுமி வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது திவ்யபாரதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பாகூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் பலியானார். தாய்-மகள் படுகாயம் அடைந்தனர்.
பாகூர்:
பாகூர் அருகே ஆதிங்கப்பட்டு சரோஜிஅம்மாள் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் பாகூர் அரசு பள்ளியில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் நெப்போலியன் (வயது27). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் ரெக்சின் கடையில் வேலை பார்த்து வந்தார்.
மேலும் ஆர்டரின் பேரில் தனியாக ரெக்சின் தயாரித்து கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நெப்போலியன் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கரிக்கலாம் பாக்கத்துக்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பாகூர்-கரிக்கலாம்பாக்கம் சாலையில் சேலியமேடு பகுதியில் அவர் வந்துகொண்டிருந்தார்.
அப்போது எதிர் திசையில் சேலியமேட்டை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் சிலம்பரசி (26) தனது தாய் ஞானவள்ளியுடன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக நெப்போலியன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிலம்பரசி ஓட்டி வந்த ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்டதில் நெப்போலியன் மற்றும் சிலம்பரசி அவரது தாய் ஞானவள்ளி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நெப்போலியன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நெப்போலியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி புதுவையில் மறியல் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள், தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 8-ந்தேதி பந்த் போராட்டம் நடந்தது.
புதிய பஸ் நிலையம், காமராஜர் சிலை சதுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் நடந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி தன்ராஜ் அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் தேவபொழிலன், இந்திய கம்யூனிஸ்டு சலீம், ஆம்ஆத்மி ரவிசீனுவாசன், மக்கள் நீதி மய்யம் பிராங்களின் பிரான்சுவா, சுசிகம்யூனிஸ்ட் லெனின்துரை, அரசு ஊழியர் சம்மேளனம் பாலமோகனன் உள்ளிட்டோர் மீது நோய் தொற்று பரவல் தடுப்பு சட்டம், ஊரடங்கு உத்தரவை மீறல், கும்பலாக கூடுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காமராஜர் சிலை சதுக்கத்தில் மறியல் செய்த தொழிற்சங்க நிர்வாகிகள் சீனுவாசன், பிரபுராஜ், அந்தோணி, ரமேஷ் உள்ளிட்டோர் மீது 2 பிரிவுகளின் கீழ் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தமிழ்மாறன், பொதினி வளவன், முன்னவன், செல்வ நந்தன், அரிமா தமிழன், செந்தமிழ்செல்வன், கார்முகில், சுடர்வாளன், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் துணை அமைப்புகளின் மாநில செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், மகளிர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.க்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக ரவிக்குமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்படும். இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பா.ஜனதா அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்கள்.
நாட்டு மக்களின் நலனுக்காக விவசாயிகள் நடத்தும் அனைத்து போராட்டத்திலும் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும். மேலும் அதானி மற்றும் அம்பானி நிறுவன பொருட்களை தமிழகம் மற்றும் புதுவையில் வாங்காமல் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. கூறினார்.

கனமழையின் காரணமாக புதுவையில் 61 ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நிவர் புயலால் 42 ஆண்டுகளுக்கு பிறகு 30 செ.மீ. மழை பதிவாகியது.
இதனைத்தொடர்ந்த வந்த புரெவி புயல் காரணமாக தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக புதுவை வெள்ளக்காடாக மாறியது. சாலைகள் அனைத்தும் மழையால் சேதமடைந்தது.
புதுவையில் பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர் ஏரி உள்பட 84 ஏரிகள் உள்ளது. கனமழையின் காரணமாக புதுவையில் 61 ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஊசுட்டேரி முழு கொள்ளளவான 3.50 மீட்டரரையும், பாகூர் ஏரி முழு கொள்ளளவான 3.60 மீட்டரையும் எட்டியுள்ளது.
காட்டேரிக்குப்பம் ஏரி, சுத்துக்கேணி பெரிய ஏரி, தொண்டமாநத்தம் வெள்ளேரி, தொண்ட மாநத்தம் கடப்பேரி, வேல்ராம்பட்டு ஏரி, உழந்தை ஏரி, அபிஷேகப்பாக்கம் ஏரி, மணமேடு ஏரி, கிருமாம் பாக்கம் ஏரி, உச்சிமேடு ஏரி, மேல்பரிக்கல்பட்டு ஏரி, அரங்கனூர் ஏரி, கனகன் ஏரி உள்ளிட்ட 61 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

புதுவையில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியிருந்த நிலையில் இன்றும் 2 பேர் பலியாகி இருப்பது பொதுமக்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 7, காரைக்காலில் 12, ஏனாமில் ஒருவர், மாகியில் 23 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் தற்போது 90, காரைக்காலில் 7, ஏனாமில் 9, மாகியில் 98 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதுவையில் 15, காரைக்காலில் 8, ஏனாமில் ஒருவர், மாகியில் 24 பேர் என மொத்தம் 48 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 406 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 204 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 36 ஆயிரத்து 420 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 62, காரைக்காலில் 45, ஏனாமில் 4, மாகியில் 52 பேர் என 163 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் தற்போது 367 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 617 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். இந்நிலையில் நேற்று புதுவையில் ஒருவர், காரைக்காலில் ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது. புதுவை மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 30 ஆயிரத்து 517 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவையில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியிருந்தனர். இந்தநிலையில் இன்று 2 பேர் பலியாகி இருப்பது பொதுமக்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழாவில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அனைவரும், ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு செய்தால் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
காரைக்கால் :
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாற்றில், உலக புகழ்மிக்க தர்பாராண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அணுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில், சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த கோவிலில், 2½ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். சில சமயங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சிவிழா நடைபெறும்.
அந்த வகையில், கடந்த சனிபெயர்ச்சி விழா கடந்த 2017 டிசம்பரில் நடைபெற்றது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27-ந் தேதி காலை 5.22 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
சனிபெயர்ச்சி விழாவிற்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் தலைமையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு சொந்தமான விருந்தினர் விடுதியில், சனிப்பெயர்ச்சி விழாவை எவ்வாறு நடத்துவது? பக்தர்கள் எவ்வாறு அனுமதிக்கப்படுவார்கள்? கோவில் சார்பிலான முன் ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் கலெக்டர் அர்ஜூன்சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழா மத்திய, மாநில அரசுகளின் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு வருகிற 27-ந் தேதி சமூக இடைவெளியோடு நடைபெறும். விழாவில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அனைவரும், ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம். (ஆன்லைன் முகவரி - www.thirunallarutemple.org ). முன்பதிவு செய்தால் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நடைமுறையானது, சனிபெயர்ச்சி விழா அன்றும், சனிபெயர்ச்சி விழாவுக்கு முந்தைய இருவார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) மற்றும் பிந்தைய 4 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) நடைமுறையில் இருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
கோவில் வாசலில் நலவழித்துைறை ஊழியர்கள் உடல் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அருகிலேயே மருத்துவ ஆம்புலன்ஸ், டாக்டர்கள் இருப்பார்கள். கொரோனா அறிகுறி இருந்தால் உரிய சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
சனிபெயர்ச்சி அன்று கோவில் சார்பில், 3 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தை முன்னிட்டு சனிபகவானின் நளன் குளத்தில் பக்தர்கள் நீராட இதுவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
சனிபெயர்ச்சி அன்று பக்தர்கள் குளிக்கலாமா? அல்லது வேறு மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து உரிய ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும்.
வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருநள்ளாறு வந்து செல்ல தேவையான பஸ் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்கு முந்தைய ஆண்டுகளில் ஏற்பாடு செய்த வாகன பார்க்கிங் வசதிகள், கூடுதல் போலீசார் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்படும்.
மேலும், ரூ.1000 ரூ.600 மற்றும் ரூ.300 தனிநபர் விரைவு தரிசன டிக்கெட் மூலம் சிறப்பு நுழைவு வாயிலின் வழியாக விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த தரிசன டிக்கெட்டை, இலவச கார், வாகன பாஸாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.