என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    வில்லியனூர் அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

    வில்லியனூர் அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே அரசூர் தென்றல்நகர் களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகள் ராஜேஸ்வரி (வயது22). இவர் தந்தைக்கு உதவியாக மளிகை கடையை கவனித்து வந்தார்.

    சம்பவத்தன்று கோவிந்தராஜ் வெளியே சென்றிருந்ததால் ராஜேஸ்வரி மளிகை கடையில் வியாபாரத்தை கவனித்தார்.

    பின்னர் கோவிந்தராஜ் மளிகை கடைக்கு வந்து ராஜேஸ்வரியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    ஆனால் ராஜேஸ்வரி வீட்டுக்கு செல்லவில்லை. இதையடுத்து ராஜேஸ்வரியை தோழிகள் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். எங்கும் ராஜேஸ்வரி இல்லை.

    இதைதொடர்ந்து கோவிந்தராஜ் தனது மகள் ராஜேஸ்வரி மாயமானது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×