என் மலர்
செய்திகள்

போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தமிழ்மாறன், பொதினி வளவன், முன்னவன், செல்வ நந்தன், அரிமா தமிழன், செந்தமிழ்செல்வன், கார்முகில், சுடர்வாளன், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் துணை அமைப்புகளின் மாநில செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், மகளிர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.க்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக ரவிக்குமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்படும். இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பா.ஜனதா அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்கள்.
நாட்டு மக்களின் நலனுக்காக விவசாயிகள் நடத்தும் அனைத்து போராட்டத்திலும் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும். மேலும் அதானி மற்றும் அம்பானி நிறுவன பொருட்களை தமிழகம் மற்றும் புதுவையில் வாங்காமல் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. கூறினார்.

Next Story