என் மலர்
புதுச்சேரி
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறினார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது. அன்று சனீஸ்வரர், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சனிப்பெயர்ச்சி விழாவுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளதால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் விருந்தினர் மாளிகையில் சனிப்பெயர்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமையில் நடந்தது. துணை கலெக்டர் ஆதர்ஷ், வடக்கு போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் அர்ஜூன்சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா கொரோனா விதிகளுக்கு உட்பட்டு வருகிற 27-ந் தேதி சமூக இடைவெளியோடு நடைபெறும். விழாவில் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
ஆன்லைன் முகவரி www.thirunallarutemple.org ஆகும். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு சனிப்பெயர்ச்சி அன்று கோவில் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி வரைவில் அறிவிக்கப்படும்.
இந்த நடைமுறை சனிப்பெயர்ச்சி விழா அன்றும், சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முந்தைய வார இறுதி நாட்களான(19, 20, 26-ந் தேதிகள்) மற்றும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு வரும் 4 வார இறுதி நாட்களில்(ஜனவரி 2, 3, 9, 10, 16, 17, 23, 24-ந் தேதிகள்) நடைமுறையில் இருக்கும். சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறி இருந்தால், உரிய சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
சனிப்பெயர்ச்சியன்று கோவில் சார்பில் 3 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நளன்குளத்தில் சனிப்பெயர்ச்சி நாளில் பக்தர்கள் புனித நீராடலாமா? வேண்டாமா? அல்லது வேறு மாற்று ஏற்பாடுகள் குறித்து உரிய ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும்.
வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து செல்ல தேவையான பஸ் வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. மேலும், ரூ.1000 ரூ.600 மற்றும் ரூ.300 தனிநபர் விரைவு தரிசன டிக்கெட், சிறப்பு நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யலாம். இந்த தரிசன டிக்கெட்டை இலவச கார், வாகன பாசாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்காலில் 38 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி அமைச்சர் கந்தசாமியை ரேஷன்கடை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் 70 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 120 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கடை மூலம் இலவச அரிசி வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டதையடுத்து அதில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை, சம்பளம் இன்றி கடந்த 3 ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் 38 மாத நிலுவை சம்பளம், ரேஷன் கடைகளை உடனே திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசு நூற்பாலையை சிறப்பாக இயக்குவது குறித்து, அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம் பேச்சுவர்த்தை நடத்துவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை அமைச்சர் கந்தசாமி வந்தார். அப்போது அம்பேத்கர் வீதியில் வந்த அவரது காரை 50க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மறித்து சாலையில் அமர்ந்தனர். இதனால் வேறுவழியின்றி அமைச்சர் கந்தசாமி காரைவிட்டு கீழே இறங்கினார். தொடர்ந்து, ஊழியர்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து கலெக்டர் அர்ஜூன்சர்மா அங்கு விரைந்து வந்தார். அமைச்சர் கந்தசாமி, ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
ரேஷன் கடை ஊழியர்களை சேர்த்து 10 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. 9,500 அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக கவர்னர் கிரண்பேடியிடம் போராடி வருகிறோம். புதுச்சேரியில் அனைத்திற்கும் மேலானவர் நான் தான். எல்லா அதிகாரமும் தனக்கு தான் உள்ளது என கிரண்பெடி கூறிவருகிறார். மக்கள் குறித்து கவர்னருக்கு துளி கூட அக்கறை இல்லை. இது தொடர்பாக, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பலமுறை, பல வழிகளில் கேட்டுவிட்டோம். அந்த அம்மா (கவர்னர்) அசைந்துகொடுக்க மறுக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து பேசப்போகிறேன். சுமூகமான முடிவு வராவிட்டால், கவர்னரை கண்டித்து நான் போராடப்போகிறேன். இதற்காக அமைச்சர் பதவி போனால்கூட கவலையில்லை. விரைவில் உங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பேன். அல்லது காலி பணியிடங்களில் மாற்றுவேலை பெற்றுத்தர பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பிறகும் கலெக்டர் அலுவலகம் சென்ற அமைச்சரை, ஊழியர்கள் விடாமல் துரத்தி கோஷங்கள் எழுப்பினர். அமைச்சர், கலெக்டரை போலீசார் பாதுகாப்பாக கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் எதிரே ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு அடுத்தடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது.
புதுச்சேரி:
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை.
புதுச்சேரியில் டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை.
புதுச்சேரியில் டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மூலக்குளத்தில் டீக்கடையை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்குளம்:
மூலக்குளம் பாரிஸ்நகர் பெரம்பை ரோட்டை சேர்ந்தவர் ஜோசப் (வயது 41). இவர் தனது வீட்டையொட்டி டீக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து டீக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைத்து இருந்த ரூ.30 ஆயிரத்தை யாரோ திருடி இருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநில அரசின் நிதியில் இருந்து அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாய விளைபொருட்களுக்கு குறைவான விலை கொடுக்கப்பட்டதாக மத்திய வேளாண்துறை மந்திரி தெரிவித்து இருப்பது தவறானது.
அப்போது நெல்லுக்கு 126 சதவீதமும், கோதுமைக்கு 87 சதவீதமும், பருப்பு வகைகளுக்கு 115 சதவீதமும் விலை உயர்வு கொடுக்கப்பட்டது. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சியில் நெல்லுக்கு 43 சதவீதமும், கோதுமைக்கு 41 சதவீதமும், பருப்பு வகைகளுக்கு 69 சதவீதமும்தான் விலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நாராயணசாமி கூறுகையில், ‘புதுவையில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தொற்று பாதித்தவர்களில் 97.30 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர். மாகி பகுதியில் தற்போது பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. அங்கு மருத்துவ அதிகாரிகள் செல்ல அறிவுறுத்தி உள்ளோம். கொரோனா தடுப்பு மருந்து விரைவில் கிடைக்கும் என்றும், முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறியுள்ளார். புதுவையில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்கவேண்டும். இல்லாவிட்டாலும் மாநில அரசின் நிதியில் இருந்து செலவு செய்வோம்’ என்றார்.
மின் தடையை கண்டித்து குரும்பாபேட்டில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வில்லியனூர்:
புதுவை மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை திரும்ப பெறக்கோரி மின்துறை ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் தொடர் மழையால் ஏற்பட்ட மின் தடைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் ஊசுடு தொகுதி குரும்பாபேட் ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மின்துறைக்குக்கு புகார் தெரிவித்தும், மின்தடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி - மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மின் தடையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நெட்டப்பாக்கத்தில் வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையம் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரம்யா. இவர்களுடைய மகன்கள் சஞ்சய் (வயது 4), கவுதம் (3). இவர்கள் வீட்டின் அருகில் உள்ள ஏரி கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நிரம்பி இருந்தது. இதனை வேடிக்கை பார்க்க நேற்று காலை சிறுவர்கள் இருவரும் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஏரிக்கு வரத்து வரும் வாய்க்காலில் சிறுவர்கள் தவறி விழுந்தனர். அதிகளவில் தண்ணீர் சென்றதால் அதில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். கரையோரம் இருந்த செடியை பிடித்துக்கொண்டு கவுதம் கூச்சலிட்டான். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவனை மீட்டனர். அப்போது சஞ்சய் ஏரியில் மூழ்கியது குறித்து தெரிவித்தான்.
உடனே அவனை பொதுமக்கள் தேடினர். அப்போது ஏரி வாய்க்காலில் சிறிது தூரத்தில் சஞ்சய் பிணமாக மீட்கப்பட்டான். மகனை இழந்த பெற்றோர் அவனது உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுவையில் தங்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்திய விடுதி மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார்பேட்டை 100 ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணும், 3 ஆண்களும் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்பதும், அவருடன் இருந்த 3 பேர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த மைக்கேல் ராஜ் (வயது 24), நெல்சன் ராகுல் (25), திருக்கோவிலூரை சேர்ந்த வினோத்குமார் (25) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் விடுதியின் மேலாளர் டேவிட் ராஜ், வரவேற்பாளராக பணியாற்றிய சுகுமார் ஆகியோர் விபசாரத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் நேற்றிரவு புதுவை பஸ் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 அழகிகள் போலீசில் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரியில் நிவர் புயல், வெள்ள சேதங்களை அசுதோஷ் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
புதுச்சேரி:
நிவர் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கிறது.
நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். 2 குழுக்களாக பிரிந்து மத்திய குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையிலான மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது.
மேலும் புதுச்சேரியில் நிவர் புயல், வெள்ள சேதங்களை அசுதோஷ் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
ஆய்வுக்குப்பிறகு புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் மத்திய குழு ஆலோசனை செய்கிறது.
நிவர் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கிறது.
நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். 2 குழுக்களாக பிரிந்து மத்திய குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையிலான மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது.
மேலும் புதுச்சேரியில் நிவர் புயல், வெள்ள சேதங்களை அசுதோஷ் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
ஆய்வுக்குப்பிறகு புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் மத்திய குழு ஆலோசனை செய்கிறது.
காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை அதன் உரிமையாளர்கள் உடனடியாக வெளியேற்றவேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியாங்குப்பம்:
புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியிலும் காலி மனைகளில் தண்ணீர் தேங்கி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திர ராஜன் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வீராம்பட்டினம், சுனாமி குடியிருப்பு, காக்காயந்தோப்பு, கோட்டைமேடு, ஸ்ரீராம் நகர், மணவெளி, ஓடைவெளி, சின்ன வீராம்பட்டினம், இடையார்பாளையம், ஜலகண்டேஸ்வரர் நகர், இளவரசன் நகர், கொருக்கமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீர் மோட்டார்கள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை அதன் உரிமையாளர்கள் உடனடியாக வெளியேற்றவேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்தடையை கண்டித்து முதல்-அமைச்சர் வீட்டின் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
மின்தடையை கண்டித்து முதல்-அமைச்சர் வீட்டின் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையொட்டி புதுச்சேரியில் இதற்கான பணிகள் தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழுவை உருவாக்கி மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4-ந் தேதி தொடங்கிய போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.
இந்தநிலையில் தொடர் மழை காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதை கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.
உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை, வம்பா கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலையிலும் இது தொடர்ந்தது. இது குறித்து புகார் தெரிவித்தும் மின்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோனாம்பாளையம் சந்திப்பில் கூடினர்.
உடனடியாக தங்களது பகுதிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் கிடந்த மரக் கிளைகள், டெலிபோன் கம்பங்களை இழுத்து சாலையில் போட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இந்தநிலையில் தொகுதி எம்.எல்.ஏ.வும் கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளருமான அன்பழகன் அங்கு விரைந்து சென்றார். அவரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் சேர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர் வலமாக சென்றனர். சோனாம்பாளையத்தில் இருந்து புஸ்சி வீதி, எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பை அடைந்தனர்.
அங்கு அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த இடத்திலேயே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மாறன், மின்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி விட்டு இன்னும் சிறிது நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்து இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார். அதை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து சீரானது.
முதல்-அமைச்சர் வீடு முன் நடந்த மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்டம் காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை விடப்பட்ட நிலையில் மழைநீர் வடியாததால் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்டம் காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை விடப்பட்ட நிலையில் மழைநீர் வடியாததால் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.






