என் மலர்
செய்திகள்

அபராதம்
காலி மனைகளில் தண்ணீர் தேங்கினால் அபராதம்
காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை அதன் உரிமையாளர்கள் உடனடியாக வெளியேற்றவேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியாங்குப்பம்:
புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியிலும் காலி மனைகளில் தண்ணீர் தேங்கி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திர ராஜன் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வீராம்பட்டினம், சுனாமி குடியிருப்பு, காக்காயந்தோப்பு, கோட்டைமேடு, ஸ்ரீராம் நகர், மணவெளி, ஓடைவெளி, சின்ன வீராம்பட்டினம், இடையார்பாளையம், ஜலகண்டேஸ்வரர் நகர், இளவரசன் நகர், கொருக்கமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீர் மோட்டார்கள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை அதன் உரிமையாளர்கள் உடனடியாக வெளியேற்றவேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story






