என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு நாள் சுற்று பயணமாக காரைக்காலுக்கு சென்றார்.
காரைக்கால் மாவட்டத்தில் அவர் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். இதில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள காரைக்கால் மேற்கு புறவழிசாலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்று புறவழி சாலையை திறந்து வைத்தார்.
அப்போது காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். அவர்கள் மேடையில் இருந்த முதல்- அமைச்சர் நாராயணசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவையில் எடுத்த முடிவின் படி புறவழிச்சாலைக்கு டாக்டர் கலைஞர் புறவழி சாலைஎன ஏன் பெயர் சூட்டவில்லை என கேள்வி எழுப்பினர்.
திறப்பு விழா அழைப்பிதழில் கூட மேற்கு புறவழி சாலை என்று மட்டும் தான் இடம்பெற்றுள்ளது என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் சாலைக்கு அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் கூட கலைஞர் பெயர் இடம் பெறவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அவர்களை சமாதானம் செய்தார். காரைக்கால் மாவட்ட கலெக்டரை (பொறுப்பு) அழைத்து 2 நாட்களுக்குள் சாலையின் பெயர் பலகையில் டாக்டர் கலைஞர் மேற்கு புறவழிசாலை என்ற பெயரை எழுதும்படி முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தி.மு.க.வினர் அங்கிருந்து வெளியேறினர்.
புதுவை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. வரும் சட்டமன்ற தேர்தலை அந்த கூட்டணியில் நீடித்து சந்திக்க விரும்பவில்லை.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி தனித்தோ, மாற்று கூட்டணி அமைத்தோ போட்டியிட விரும்புகின்றனர். இதனால் காங்கிரஸ் கூட்டணி கவர்னருக்கு எதிராக நடத்திய ஆலோசனைக்கூட்டம், தர்ணா போராட்டம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவற்றை புறக்கணித்தனர்.
மேலும் தங்கள் கருத்தை கட்சி தலைமையிடமும் தெரிவித்தனர்.
இதற்கேற்ப கடந்த மாதம் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் புதுவை மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு செயல் வீரர்கள் கூட்டமும் நடத்தினார். இதனிடையே கூட்டணியில் குழப்பம் இல்லை, கட்சியை வலுப்படுத்தவே ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனால் மீண்டும் காங்கிரசோடு இணைந்து புதுவை தி.மு.க.வினர் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து தனித்து செயல்படுகின்றனர்.
சமீபத்தில், கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்து விட்டார். இந்நிலையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால் தி.மு.க. இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து புதுவை தி.மு.க.வினர் காங்கிரசை புறக்கணித்து வருகின்றனர்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீதான அதிருப்தியால் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து நமச்சிவாயம் பா.ஜனதாவில் இணைந்தார்.
அவருடன் ஊசுடு தனி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். ஏற்கனவே புதுவை அரசியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ள மல்லாடிகிருஷ்ணராவ், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த கடிதத்தை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர் அலுவலகம், வீடு, கார் ஆகியவற்றை அரசிடம் திரும்ப ஒப்படைத்து விட்டார். தனது துறைகள் தொடர்பான எதனையும் அவர் கவனிப்பதில்லை.
இதனால் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் துறைகளை முதல்-அமைச்சர் நாராயணசாமியே கூடுதலாக கவனித்து வருகிறார்.
அமைச்சர்கள் பதவி விலகல், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. விலகல், பா.ஜனதாவில் இணைந்தது ஆகியவை புதுவை காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. இதனை தடுக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, பல்லம்ராஜூ, சஞ்சய்தத், ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்களை தனியாக சந்தித்த எம்.எல்.ஏ.க்கள், காலியாக உள்ள அமைச்சர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சுழற்சி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு காலியாக உள்ள அமைச்சர் பதவிகளை வழங்கி கட்சியில் இருந்து வெளியேறுவதை தடுக்க நாராயணசாமி முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.
கட்சி மேலிடத்திடம் இதுதொடர்பாக பேசி வருகிறார். யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக அமைச்சர் பதவி வழங்கினால் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்து கட்சியை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நாராயணசாமி ஆலோசித்து வருகிறார்.
இதில் முடிவெடுக்கும் பட்சத்தில் ஓரிரு நாளில் புதிய அமைச்சர் பதவி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், ராஷ்ட்ரீய ஜனதாதள மாநில தலைவர் சஞ்சீவி உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி கடந்த 26-ந் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் கிரண்பெடியும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
எனவே கவர்னரை கண்டித்து நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அவர் வருகிற 10-ந் தேதி நேரம் ஒதுக்கி உள்ளார்.
அன்றைய தினம் டெல்லி சென்று அவரை சந்தித்து கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட கையெழுத்துகளை அவரிடம் ஒப்படைக்க உள்ளோம். மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம்.
மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு புதுவையை வஞ்சித்து வரும் நிலை, கவர்னர் கிரண்பெடி மாநில அரசுக்கு எந்தெந்த வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார் என்பது குறித்தும், முழு அடைப்பு போராட்டம் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூற வருகிற 14, 15-ந் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரசாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை வில்லியனூர் வி.மணவெளி அன்னைதெரேசா நகர் தண்டுகரை வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் கறவை மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் தர்ஷன் (வயது16). இவர் சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்து 3 மணிக்கு தர்ஷன் வீட்டுக்கு வந்தார். அதுமுதல் வீட்டின் தனி அறையில் கட்டிலில் படுத்துக்கொண்டே தர்ஷன் காதில் ஹெட்போன் வைத்துக்கொண்டு செல்போனில் ஆன்லைனில் (பையர்வால்) விளையாடிக் கொண்டிருந்தார். இரவு 7.30 மணிக்கு சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் ஜெய்சித்ரா தர்ஷனை எழுப்ப வந்தார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி சுயநினைவு இன்றி மகன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தர்ஷனை மீட்டு அரும்பார்த்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






