என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    முதலியார்பேட்டையில் ஆசிரியையிடம் செல்போன் பறிப்பு

    முதலியார்பேட்டையில் ரோட்டில் நடந்து சென்ற ஆசிரியையிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்து சென்றனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லூசியா(வயது 31). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 26-ந் தேதி கடலூர் மெயின்ரோட்டில் மரப்பாலம் அருகே செல்போனில் பேசிய படி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென லூசியாவின் கையில் இருந்த செல்போனை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். அதற்குள் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×