என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நெட்டப்பாக்கம் அருகே அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

    நெட்டப்பாக்கம் அருகே அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெட்டப்பாக்கம்:

    நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 51), அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார்.

    இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ஏகாம்பரம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மகன் அருள்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஏகாம்பரத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×