என் மலர்
புதுச்சேரி
கவர்னர் என்ன சொன்னாலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலையாட்டி பொம்மை போல் செயல்படுவார் என்று நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மகளிர் காங்கிரஸ் கொடி அறிமுக நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களுக்குதான் இப்போது ரிப்பன் கட் பண்ணும் வேலை நடக்கிறது.
மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் மத்திய அரசு 41 சதவீதம் மானியம் வழங்குகிறது. ஆனால், புதுவைக்கு 20 சதவீத மானியம்தான் கொடுக்கிறது. இதற்காக தான் போராட்டம் நடத்தினோம்.
எங்களுடைய சொந்த பிரச்னைக்காக போராட்டம் நடத்தவில்லை. தேர்தலின்போது ரங்கசாமி கொடுத்த வாக்குறுதியில் மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் சேர்ப்பது, 10 ஆயிரம் பேருக்கு வேலை என்று சொன்னது என்ன ஆனது?
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு வார்டு ஒதுக்கீடு மறு ஆய்வு செய்ய உள்ளதால் புதுவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுவை அரசே தெரிவித்துள்ளது. இப்படி கூறுவதற்கு ஒரு ஆட்சியா?
ஒரு அரசே தவறு செய்துவிட்டதாக சொல்லலாமா? அப்படி என்றால், என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு ஆள தகுதியில்லை. திறமை இல்லை. நிர்வாகம் தெரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இதை மகிளா காங்கிரசார் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
நமக்குள் நடக்கும் சண்டையை நிறுத்திவிட்டு, கருத்து வேறுபாடின்றி கட்சியை பலப்படுத்தும் வேலையை பார்க்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தல் நமக்கு மிகப்பெரிய பாடம்.
கவர்னர் என்ன சொன்னாலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலையாட்டி பொம்மை போல் செயல்படுவார். இப்படிப்பட்ட ஒரு ஆட்சிதான் புதுவையில் நடக்கிறது.
புதுவையில் காங்கிரஸ் தான் நம்பர்-1 கட்சி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. யாராவது நாங்கள் தான் நம்பர்-1 கட்சி என்றால், அந்த கூட்டணிக்கு நாம் செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. வெற்றி, தோல்வி என்பது 2-ம் பட்சம்தான். அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
எனவே, முதலில் நமக்குள்ளான சண்டையை விடுங்கள். யார் அதிகமாக சண்டை போடுகிறார்களோ, அவர்களை கட்சி தலைவர் சஸ்பெண்டு செய்யும் வேலையை பாருங்கள். அப்போதுதான் எல்லோருக்கும் புத்தி வரும். மகளிர் காங்கிரசார் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிற உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்தி அதிகமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரியில் அடை மழை காரணமாக வீடுகளில் முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி நேற்று அதிகாலை முதல் புதுவையில் மழைதூற தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பகல் வேளையில் சரசரவென மழை கொட்டியது.
சிறிதுநேரம் கூட இடைவெளி இல்லாமல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
சாலைகளில் உருவாகி இருந்த திடீர் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள முதலியார்பேட்டை கடலூர் சாலை மேலும் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது.
பகல் முழுவதும் இடைவிடாது அடைமழை பெய்துகொண்டே இருந்ததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம், பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குடை பிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் இருசக்கர வாகனங்களில் சென்றனர்.
இடைவிடாத மழை காரணமாக நேற்று பகல் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30மணி வரை புதுவையில் 1.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் நிலையில், அதற்கான அறிவிப்பாணையை திரும்பப்பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கான அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் தாக்கல் செய்த மனுவில் புதுச்சேரி நகராட்சியில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் கொண்ட வார்டுகளை ஒதுக்காமல் குறைந்த எண்ணிக்கை கொண்ட வார்டுகளை ஒதுக்கியுள்ளனர். எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளின்படி ஆதிதிராவிடர்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணையின்போது, குளறுபடிகள் நீக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். அதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப்பெற அனுமதி அளிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஐந்து நாட்களில் புதிய அறிவிப்பாணையை புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நாளை (புதன் கிழமை) மற்றும் வருகிற 9-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்களை கவருவதற்காக புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் வாங்கி தமிழக பகுதிக்கு கடத்தப்படுவதாக புகார் வந்தது.
இதனை தடுக்க புதுச்சேரி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முதலியார்பேட்டை போலீசார் நேற்று 100 அடி ரோட்டில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கருணாகரன் (வயது 23), செல்வம் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10,500 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கோரிமேடு போலீசார் மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையம் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தியதில், 5 அட்டை பெட்டிகளில் பீர் பாட்டில்கள், ஒரு பெட்டியில் மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கார் டிரைவர் டி.என்.பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், வானூர் பூத்துறைக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் கலால் துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் ஓட்டு போட ‘13 சி’ படிவம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க சட்டமன்ற தேர்தல்போல 80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் ஓட்டுப்போட மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி 80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் ஓட்டு போட ‘13 சி’ படிவம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு வார்டு வாரிய இவர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் அவர்களின் பெயர், முகவரி, மொபைல் எண் அடங்கிய தபால் ஓட்டு குறித்த விருப்ப படிவம் பூத் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பூர்த்தி செய்து பெறப்படும்.
ஓட்டுப்பதிவுக்கு முன் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் அலுவலர்கள் அடங்கிய குழு வாக்காளர் வீட்டுக்கே சென்று ஓட்டுகளை பெற்று தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பர். இதற்காக சிறப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்படும்.
வாகனத்தில் சிறப்பு பார்வையாளர், 2 தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோ கிராபர், காவல்துறையை சேர்ந்த ஒருவர் இருப்பர். தேர்தலின்போது சட்டம்- ஒழுங்கை பராமரிக்க சிலர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவர். இவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கவும் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலதாமத சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. டெங்குவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டெங்கு என்பது உலக அளவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு நாட்டில் இந்த நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவது வழக்கம். டெங்கு என்பது ஏடிஸ் ஈகிப்ட் வகை கொசுக்களால் பரவும் வைரஸ் நோயாகும். ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை சுத்தமான நீர் தேக்கத்தில் கொசு இனப்பெருக்கம் செய்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது டெங்கு பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. மழையின்போது பிளாஸ்டிக் தேனீர் கப்புகள், அலுமினிய நகர்வு ஜன்னல்களில் அடிப்பாகம் விளிம்புகளில், பறவை தண்ணீர் தட்டுகளில், தொழிற்சாலைகளில் உள்ள உபகரணங்களில், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் சுத்தமான தண்ணீர் ஒரு வாரத்துக்கு மேல் தேங்குவதால் டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசு உருவாக வாய்ப்பு உள்ளது.
டெங்கு காய்ச்சல் சாதாரணமாக காய்ச்சல் அறிகுறிகளுடன் சரியாகிவிடும். அடுத்த நிலையில் தலைவலி, மூட்டுகளை முறிக்கும் அளவிலான வலி ஏற்படும்.
காய்ச்சல் விட்ட பிறகு நமக்கு நன்றாகிவிட்டது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி பாதிப்புகளை உடலில் நாம் உணராத வகையில் டெங்கு உருவாக்குவதால், காலதாமத சிகிச்சையால் உயிர்பலி ஏற்படுகிறது.
டெங்கு பரவுவதை தடுக்க தீவிரப்படுத்தப்பட்ட கொசுப்புழு மற்றும் புகை மருந்து தெளிப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமாக இந்த நோய் மனித குலத்தை தாக்காமல் தடுக்கலாம். இந்த நோயை தடுக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 25-ந்தேதி முதல் புதுவை பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் புதுவை பல்கலைக்கழகத்தில் இன்னும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து மாணவர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தநிலையில் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கான அறிவிப்புகளை பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆய்வு மாணவர்களில் அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு வருகிற 25-ந்தேதி வகுப்புகள் தொடங்குகிறது. இறுதியாண்டு பட்டமேற்படிப்பு மாணவர்கள் 3-ம் ஆண்டு மாணவர்கள் (ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு) டிசம்பர் 6-ந்தேதியும், சமூக அறிவியல் பிரிவில் இறுதியாண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு (ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு) ஜனவரி 17-ந்தேதியும் வகுப்புகள் தொடங்குகின்றன.
இதர அனைத்து பட்டமேற்படிப்பு மாணவர்கள், ஆய்வு படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆகியோருக்கு நேரடி வகுப்பு தொடங்கும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் அமரேஷ் சமந்த்ராயா வெளியிட்டுள்ளார்.

புதுவை லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் கோவில் வீதி- லில்லி லொலான் வீதி சந்திப்பில் தனியார் தங்கும் விடுதி (லாட்ஜ்) உள்ளது.
நேற்று காலை இந்த விடுதிக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் வேலூர் மாவட்டம் கனகாம்புதூர், மோகன்ராஜ் (வயது 30) என்ற முகவரியை கொடுத்து விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
மோகன்ராஜூடன் வந்த பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். அவரது கழுத்தில் தாலி கயிறு இருந்தது.
காலையில் விடுதியை விட்டு வெளியே சென்ற இவர்கள் புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு மாலையில் விடுதி திரும்பினர்.
இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது மின் விசிறியில் மோகன்ராஜ் கயிற்றால் தூக்குப்போட்டும், அவருடன் வந்த பெண் போர்வையால் தூக்குப்போட்டும் பிணமாக தொங்குவதை கண்டனர்.
மோகன்ராஜின் சட்டை பையில் காட்பாடியில் இருந்து சென்னை வந்ததற்கான ரெயில் டிக்கெட் இருந்தது. இவர்கள் கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரியை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தவும், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி குண்டுபாளையம் ஆருத்ரா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் இதுவரை 10 லட்சம் பேருக்கு (70 சதவீதம்) தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதற்காக சுகாதாரத் துறையை பாராட்டுகிறேன். புதுச்சேரியை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே 3-வது அலையைத் தடுக்கும் ஆயுதம். எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதுவையில் பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்டு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த பத்மநாபன், அத்துறையின் இயக்குனர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு, பத்மநாபன் மீது, அங்கு பணிபுரியும் பெண் டாக்டர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இது தொடர்பாக உள்ளூர் விசாரணை குழு, விசாரணை நடத்தியது. இந்த குழு முன்பு ஆஜராகி 27 பெண்கள் சாட்சியம் அளித்தனர்.
பத்மநாபன், பெண் டாக்டருடன் பேசியதாக கூறப்படும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. பத்மநாபன், அரசு நிறுவனமான ’பாண்கேர்’ துறைக்கு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், நேற்று அவசர வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். பாலியல் புகார் தெரிவித்திருந்த கால்நடை துறை முன்னாள் இயக்குனர் பத்மநாபன், தன் மீதான விசாரணையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 2 ஆண்டாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர் இன்று (வியாழக்கிழமை) ஓய்வு பெற உள்ளதால், அவசர வழக்காக எனது மனுவினை எடுத்து விசாரிக்க வேண்டும்’ என பெண் டாக்டர் குறிப்பிட்டிருந்தார். வழக்கு காணொலி வாயிலாக ஐகோர்ட்டு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் புகாருக்கு உள்ளான பத்மநாபனை சஸ்பெண்டு செய்ய தலைமை செயலர், துறை செயலருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, இன்று பணி ஓய்வு பெறும் நாளில், பத்மநாபன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் வைகை, ஸ்டாலின் அபிமன்யூ ஆகியோர் ஆஜராகினர்.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு சொட்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிகள் திறப்பு தொடர்பாக நான் ஏற்கனவே முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளேன். இதுதொடர்பாக விரைவில் கல்வித்துறை அறிவிப்பு வெளியிடும்.

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழக பாடத்திட்டம்தான் புதுவையிலும் பின்பற்றப்படுகிறது. எனவே தமிழகத்தின் முடிவுகளை நாமும் பின்பற்றவேண்டிய நிலையில் உள்ளோம். குழந்தைகளுக்கு கொரோனாவின் தாக்கமும் குறைவாகத்தான் உள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு சொட்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக உள்ளது.
புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிகள் திறப்பு தொடர்பாக நான் ஏற்கனவே முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளேன். இதுதொடர்பாக விரைவில் கல்வித்துறை அறிவிப்பு வெளியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...புதுச்சேரியில் 92 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமலும், வீணாக கிடக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் நல்ல தண்ணீரில் வளரும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சமீப காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு கொசுக்களை உற்பத்தி செய்வதால் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.
புதுவையில் இதுவரை 92 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமலும், வீணாக கிடக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ளுமாறும், சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.