என் மலர்
புதுச்சேரி
புதுவையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் தட்சிணாமூர்த்தி நகரில் சுகாதார ஊழியர்கள் ஊசி போடாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.
அப்போது ஒரு குடிசை வீட்டில் வசிக்கும் முதியவரும், மூதாட்டியும் ஊசி போடாமல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை ஊழியர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால் ஊசி போடமாட்டோம் என்று அந்த வயதான தம்பதியினர் அடம்பிடித்தனர். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் ஊசி போடுவதால் எதுவும் ஆகாது என்று கூறி அவர்களிடம் விளக்கினார்கள்.
ஒருகட்டத்தில் அந்த மூதாட்டி சாமி வந்ததுபோல் ஆட தொடங்கினார். கால்களில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட்டு, தாளாது, இது தாளாது அங்காளம்மா சொல்றா என்று சத்தம் போட்டபடி அந்த மூதாட்டி இது ரங்கசாமிக்கு தெரியாதா? என்றெல்லாம் கூறி சாமியாடினார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டே சுகாதார ஊழியர்கள் அங்கிருந்து இடத்தை காலி செய்தனர்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுவையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது. 24 மணி நேரத்தில் 15.2 செ.மீ. மழை பதிவானது. இதனால் புதுவை நகரம், கிராமப்பகுதிகள் என அனைத்தும் வெள்ளக்காடானது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. நேற்று முன்தினம் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர் மழையால் சேதம் அடைந்த பொருட்கள் மற்றும் துணிகளை வெயிலில் காய வைத்தனர்.
நேற்று பகல் முழுவதும் வெயில் இருந்து வந்தநிலையில் இரவு 9 மணியளவில் திடீரென மீண்டும் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. அதன்பிறகும் லேசாக விட்டு தூறியபடியே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊரடங்கு நடைமுறை அறிவிக்கப்படுகிறது.
தற்போது மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். சமூக, பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் கூடுவது தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது
கடற்கரை, பூங்கா போன்றவை இரவு ஊரடங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் திறந்திருக்கலாம். இங்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் வழக்கம்போல் கோவில் திருவிழாக்கள், மத விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 20 பேர் வரையிலும் கலந்துகொள்ளலாம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரி தடுப்பூசி போடுவதில் பின்தங்கியுள்ளது.
எனவே வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பது போல கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
இதற்கான உத்தரவை அரசு செயலாளர் உதயகுமார் வெளியிட்டுள்ளார்.
புதுவையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கருவடிக்குப்பம் மாருதி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமினை கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் நேற்று மதியம் பார்வையிட்டார். அப்போது முகாம்களில் இருந்த குழந்தைகளுக்கு பிஸ்கெட்டுகளை வழங்கினார். மேலும் அங்கு இருந்தவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். அப்போது கலெக்டர் பூர்வா கார்க் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அவர்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை தெரிவித்துள்ளனர். அவர்களது வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. அவற்றை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.
புதுவைக்கு சேத விவரங்களை பார்வையிட வந்த மத்தியக்குழுவிடம் குறைபாடுகளை தெரிவித்துள்ளோம். நமக்கு தேவையான உதவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும். நமது மாநில அதிகாரிகளும் தொடர்ந்து மத்திய அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு வருகின்றனர்.
அடுத்த மழைக்காலத்துக்கு முன்பாக அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்ய வேண்டும். அப்படி செய்தால் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இப்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது. எனவே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சில மாநிலங்களில் பொது இடங்களுக்கு செல்பவர்களிடம் 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை கேட்கிறார்கள்.
இந்தியாவில் புதிய வைரஸ் பரவியதாக எந்தவித தகவலும் இல்லை. ஆனாலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கடந்த காலங்களில் நாம் போதுமான அளவுக்கு மருத்துவ கட்டமைப்புகளை சரிசெய்து வைத்துள்ளோம். எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
புதுவையில் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறைவு என்பது வருத்தமளிக்கிறது. இதை அதிகரிக்க வேண்டும். ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் பட்டியல்படி 11 லட்சம் பேர் என்று நாம் கணக்கிடுகிறோம். ஆனால் மத்திய அரசு 13 லட்சம் என்று கணக்கிடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாம் தடுப்பூசியில் 70 சதவீதத்தை எட்டியுள்ளோம்.
எந்தெந்த வீட்டில் யார்யார் தடுப்பூசி போடவில்லை என்று கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. சிலர் மருத்துவ அதிகாரிகளை விரட்டுவதாகவும் கூறுகின்றனர். மருத்துவ அதிகாரிகள் மக்களுக்காகத்தான் வீடுவீடாக வருகின்றனர். புதுப்புது வைரஸ் வரும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைவரும் தவறால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுவையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது.
மழை காரணமாக புதுவை நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. ரெயின்போ நகர், பாவாணர் நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
புஸ்சி வீதி, கடலூர் சாலை, மறைமலை அடிகள் சாலை, இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்களில் செல்வோர் அவதி அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
பெரிய வாய்க்காலில் மழைநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. புதுவையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சண்டே மார்க்கெட் முழுமையாக இயங்கவில்லை. ஒரு சில கடைகள் மட்டுமே செயல்பட்டது.
இன்று 4-வது நாளாக மழை பெய்து வருகிறது. இதேபோல் புதுவையின் புறநகர் பகுதியான பாகூர், மதகடிப்பட்டு, காலாப்பட்டு, வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
மழை காரணமாக பாகூர் மூலநாதர் சாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் தண்ணீரில் இறங்கி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பாகூர் பகுதியில் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

புதுவையில் வடகிழக்கு பருவமழை 26-ந்தேதி தொடங்கினாலும் அதற்கு முன்பாக வளிமண்டல மேலடுக்கு சுழற்கி காரணமாக 27 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 104.72 செ.மீ. மழை பெய்துள்ளது. நேற்று காலை 237.6 செ.மீ மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரியை விட 75 சதவீதம் அதிகமாகும்.
புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது கனமழை கொட்டி வருகிறது. மேலும் புதுவைக்கு தொடர் மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
வழக்கமாக வார விடுமுறை நாட்களில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள் களை கட்டும்.
இந்தநிலையில் தொடர் மழை காரணமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் குறைந்திருந்தது.
இதன் காரணமாக புதுவை நகரப்பகுதி பெரிய அளவில் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி காணப்பட்டது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளும் பரபரப்பின்றி வெறிச்சோடி கிடந்தன. தொடர் மழையால் நேற்று தாவரவியல் பூங்கா திறக்கப்படவில்லை. எனவே அங்கு வந்த பொதுமக்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பாரதி பூங்கா திறந்து இருந்தது. அங்கு சிலர் மட்டும் வந்து நடைபயிற்சி மேற்கொண்டனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் நேற்று உள்ளூர் வியாபாரிகள் மட்டும் கடைகள் போட்டிருந்தனர். பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று முழுவதும் தொடர் மழை பெய்ததால் பொதுமக்கள் வரவில்லை. இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
புதுவையில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வங்கக்கடலில் அடிக்கடி உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுவையில் உள்ள முக்கிய ஏரிகளான ஊசுடு, பாகூர், கனகன், வேல்ராம்பட்டு ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.
கனமழை காரணமாக ஏற்கனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஓரிரு நாட்கள் மழையின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவையில் இன்று (திங்கட்கிழமை) வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி நேற்று முன்தினம் மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது. அதாவது நேற்று முன்தினம் காலை 8.30 மணிமுதல் நேற்று காலை 8.30 மணிவரை 31.8 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை 10 மணிக்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது.
அதாவது காலை 10 மணிமுதல் மழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரி நகரம், பாகூர், அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, சேதராப்பட்டு, காலாப்பட்டு பகுதியில் மாலை வரை இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக புதுச்சேரி நகரப்பகுதி, கிராமப்பகுதி என அனைத்து பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தாழ்வான சாலைகள், வீதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் வாய்க்கால் அடைப்பு காரணமாக மழைநீர் வடிய வழியில்லாமல் குளம்போல் தேங்கி நின்றது.
இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, 100 அடி ரோடு, சிவாஜி சிலை, மரப்பாலம், காமராஜ் சாலை, 45 அடி ரோடு, புஸ்சி வீதி, அம்பேத்கர் சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீர் 2 அடிக்கும் மேல் தேங்கியது.
அந்த இடங்களில் இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களால் செல்ல முடியவில்லை. இருப்பினும் அந்த வழியாக சென்ற வாகனங்கள் சில மழைவெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே பழுதாகி நின்றதை காண முடிந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் அதனை தள்ளி சென்றனர்.
புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி உள்ள மழைநீரானது பெரிய வாய்க்கால் வழியாக கடலுக்குள் சென்று சேறும். ஆனால் நேற்று பெய்த கனமழையால் ஒயிட் டவுண் பகுதியும் தப்பவில்லை. வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் மழைவெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
அதுமட்டுமின்றி பெரிய வாய்க்காலில் செல்லும் தண்ணீரானது வாய்க்கால் நிரம்பி ரோட்டில் ஏறி ஓடியது. இதனால் ரோடுகளில் சில இடங்களில் சுமார் 1 அடி உயரம் வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழை காரணமாக புதுவை நகரின் தாழ்வான பகுதிகளான பாவாணர் நகர், நடேசன் நகர், செல்லம்பாப்பு நகர், ரெயின்போநகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். மேலும் பல்வேறு நகர் பகுதிகளை சுற்றிலும் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் மதியம், இரவு உணவு வழங்கப்பட்டது.
தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் பொதுப்பணி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதாலும், கனமழை காரணமாகவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக தவிர வேறு எந்த வேலைக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.
இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ஆண்டு சராசரி மழை அளவு 130 செ.மீ. ஆகும்.
இதில் குளிர் காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்கள், கோடைக்காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்கள், தென் மேற்கு பருவமழையான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் சராசரியாக 40 முதல் 60 செ.மீ., மழை பெய்யும்.
புதுவையின் ஆண்டு சராசரி மழையின் பெரும் பகுதியை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் 70 முதல் 80 செ.மீ., மழை பெய்யும். ஒவ்வொரு பருவத்திலும் சராசரி அளவை விட கூடுதலாகவே மழை பெய்து வருகிறது.
அதில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 96.1 செ.மீ., அளவு மழை பெய்தது.
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. இருப்பினும் அதற்கு முன்பாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 27 செ.மீ., மழை பெய்தது. அதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஆண்டின் சராசரி மழை அளவை எட்டியது.
கடந்த மாதம் 26-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஒரு மாதத்தில் 104.72 செ.மீ., மழை கொட்டியுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டில் நேற்று காலை 8.30 மணி வரை மொத்தம் 227.8 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இது ஆண்டின் சராசரி அளவை விட 75 சதவிகிதம் கூடுதலாகும்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது70). இவரது மூத்த மகள் கவுரி. இவரது கணவர் ராஜி. இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபராம் செய்து வருகிறார்.
இவர்களது மகன் சுரேஷ். இவர் உழவர்கரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி தலைவராக உள்ளார். சீனிவாசன் வீடு 3 மாடியில் அமைந்துள்ளது.
வீட்டின் கீழ் தளத்தில் 4 அறைகள் உள்ளது. வீட்டின் முன்புறம் சுரேஷ் பாரதிய ஜனதா அலுவலகம் நடத்தி வருகிறார். அதே தளத்தில் சீனிவாசன், அவரது மனைவி ஜோதி (60), 2-வது மகள் சாந்தி (42), இளைய மகள் எழிலரசி (38), சீனிவாசன் பேத்திகள் தீபிகா (15), ஸ்ரீ (14) ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
இன்று காலை 6.30 மணியளவில் சீனிவாசன் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. வீடும் உருக்குலைந்தது. வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து கிடந்தது.
வீட்டில் இருந்த ஜோதி, எழிலரசி, சிறுமி ஸ்ரீ ஆகியோர் தீக்காயத்துடன் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கோட்ட தீயணைப்பு அலுவலர் இளங்கோ, நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீடு முற்றிலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.
வீட்டின் மேல் தளத்தில் ஜோதி சிக்கி கொண்டார். அவரை மாடி வழியாக இறங்கி ஸ்டிரக்சர் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். எழிலரசி மற்றும் சிறுமி ஸ்ரீயையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோதி, எழிலரசி ஆகியோர் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டில் இருந்த சாந்தி, தீபிகா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். வீட்டின் பின்பக்க அறையில் இருந்ததால் சீனிவாசன் காயமின்றி தப்பினார்.
சீனிவாசன் வீட்டில் வைக்கப்பட்டடிருந்த பிரிட்ஜ் எரிந்து உருக்குலைந்து காணப்பட்டது. ஆனால் சிலிண்டர் அப்படியே இருந்தது. மேலும் சுரேஷ் நடத்தி வந்த பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஷட்டர் பெயர்ந்து அப்பகுதியில் உள்ள சந்தில் விழுந்து கிடந்தது.
சீனிவாசன் வீட்டின் அருகில் இருந்த வீடுகளிலும், எதிரில் உள்ள வீடுகளிலும் கீறல் விழுந்துள்ளது. மேல் மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல், கதவுகள் இறுகி விட்டது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் யாராவது கட்சி அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீயணைப்புதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சீனிவாசன் வீட்டில் உள்ள சிலிண்டர் அப்படியே உள்ளது. பிரிட்ஜ் மட்டும்தான் தீபிடித்து எரிந்துள்ளது.
மேலும் மின்கசிவு ஏற்பட்டதற்கான எந்த தடயங்களும் இல்லை. எனவே கட்சி அலுவலகத்தில் யாராவது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு பின்னரே இது தொடர்பான முழுவிவரம் தெரியவரும் என்றார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய குழு புதுவையில் முழுமையாக மழை சேதத்தை ஆய்வு செய்யவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி நிவாரணமாக ரூ. 300 கோடி கேட்டுள்ளார். ஆனால், இதுவரை மத்திய அரசு மவுனமாகவே உள்ளது.
அதேநேரத்தில் அதிகாரிகள் ரூ.20 கோடி மட்டுமே நிவாரணம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, தலைமைச் செயலர் அஸ்வினி குமாரை மாற்றக்கோரி மத்திய அரசிடம் பேசியுள்ளார். கடிதமும் அனுப்பி உள்ளார்.

ஆனால், இதுவரை தலைமைச்செயலரை மத்திய அரசு மாற்றவில்லை. எங்களுக்கு தொல்லை தந்தது போல் தற்போது முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய அரசு தொல்லை தருகிறது.
புதுவை மேல் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.இதன் மூலம் மத்திய அரசு புதுவை ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இல்லை என்பது தெளிவாகிறது. மக்களை ஏமாற்றி பா.ஜனதா ஆட்சியில் அமர்ந்துள்ளதும் புதுவையை பா.ஜ.க. வஞ்சிப்பதும் உறுதியாகிறது.
ரங்கசாமி பா.ஜனதாவிடம் சரணாகதி அடைய கூடாது. மின் துறையை தனியார் மயமாக்க அனுமதிக்க கூடாது. சட்டப்பேரவையில் மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது






