என் மலர்
விருதுநகர்
- ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- கலெக்டருக்கு பொதுமக்கள் வலியுறுத்தினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராமசாமி–பட்டி கிராமத்தில் ரேசன் கடை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்பாடி பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 56) என்பவர் கடந்த 30 ஆண்டு–களுக்கும் மேலாக விற்பனை–யாளராக பணிபுரிந்து வரு–கிறார்.
இந்த நிலையில் ரேசன் கடை விற்பனை–யாளருக் கும், மாவட்ட கூட்டுறவுத்து–றைக்கும் இடையே ஊதியம் வழங்குதல் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை முழு–மையாக செயல்படுத்தாதது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
மேலும் ரேசன்கடை விற்பனையாளர் ராமசாமி இதுகுறித்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்துள் ளார். நீதிமன்ற உத்தரவை மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தவில்லை என கூறி மீண்டும் ராமசாமி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால் மோதல் உச்சக்கட் டத்தை எட்டியது.
இந்த நிலையில் ரேசன் கடை விற்பனையாளரான ராமசாமி கடந்த 7-ந்தேதி விடுப்பு எடுத்த நிலையில், ராமசாமிபட்டி ரேசன் கடைக்கு குழுவாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டு–றவுத்துறை துணை பதிவா–ளர் தலைமையிலான சுமார் 12-க்கும் மேற்பட்ட அதிகா–ரிகள் ரேசன் கடையை திடீ–ரென மூடி சீல் வைத்த–னர்.
மேலும் இந்த நடவடிக் கையின்போது திருச்சுழி வட்ட வழங்கல் அதிகாரிக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்காதது, போலீஸ் பாதுகாப்பு என பல்வேறு நடைமுறைகள் மீறப்பட்ட–தாக கூறப்படுகிறது. ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.
இந்த நிலை யில் நேற்று முன்தினம் (8-ந்தேதி) காலை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ரேசன் கடைக்கு வந்தபோது ரேசன் கடை பூட்டப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சிய–டைந்தனர். அதன்பின்னரே அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததை அறிந்தனர். இத–னால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடி–யாமல் அவதிப்பட்ட–னர்.
மேலும் ரேசன் கடையை திறக்கக்கோரி கடை முன்பு 50-க்கும் மேற்பட்ட பொது–மக்கள் கூட்டமாக திரண்ட நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூட்டுறவுத்துறை அதி–காரிகள் ரேசன்கடையை உடனடியாக திறந்து விட்ட–னர். இதனையடுத்து பொது–மக்கள் அனைவரும் ரேசன் பொருட்களை வாங்கி சென்றனர்.
மேலும் இரு தரப்பு பிரச்சனையில் பொதுமக் கள் பயன்படுத்தி வரும் ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக் கைகள் எடுக்கவெண்டு–மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகரில் இன்று அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
- ஒரு தனியார் அரங்கத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
விருதுநகர்
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சியாக மாநில தலைவர் அண்ணா–மலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேசுவ–ரத்தில் நடைபயணம் தொடங்கி–னார். நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபய–ணத்தை ஆரம்பித்த அவர் இன்று காலை விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் பாதயாத்திரை சென்றார்.
அப்போது வழிநெடுகி–லும் திரண்டு நின்ற பொது–மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பா.ஜ.க. தொண்டர்கள் அவர் மீது மலர்களை தூவினர். அப் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ராஜ–பாண்டியும் அண்ணாம–லையை வரவேற்றார்.
தொடர்ந்து அவர் ராம–மூர்த்தி ரோடு, ரெயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலையம், வெயிலுகந்தம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் தெரு, நகராட்சி சாலை, இன்னாசியார் தேவாலயம் வழியாக சாத்தூர் ரோடு சந்திப்பு பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த பொது–மக்கள் மத்தியில் பேசினார். முன்னதாக அவர் பாண்டி–யன் நகர் பகுதியில் அமைந் துள்ள முத்துராம–லிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து இன்று மாலை அண்ணாமலை சிவகாசிக்கு செல்கிறார். அங்குள்ள ஒரு தனியார் அரங்கத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலதிபர் களை சந்தித்து கலந்துரையா–டுகிறார்.
- விருதுநகர் அருகே தொழிலாளி, வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மஞ்சு ஓடைப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது78). 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பு இருந்து வந்தது. மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகாததால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (21). திருமணமானவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சஞ்சய் குமாரின் தாய் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வத்திராயிருப்பு பகுதியில் நடக்கும் திட்டப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க வேண்டும்.
- அதிகாரிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றியம் மேலக்கோபாலபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், 15-வது மானிய நிதி குழுவின் கீழ் ரூ.1.05 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமைய லறை கூடம் புர ணமைக்கப்பட்டுள்ள தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.62 லட்சம் மதிப்பில் உயர் நிலைப் பள்ளியில் சுற்றுச் சு வர் கட்டப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கான்சாபுரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.29.69 லட்சம் மதிப்பில் பெரிய ஓடை கால்வாய் வரத்து கால்வாய் மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணிகளையும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.93.68 லட்சம் மதிப்பில் கான்சாபுரம்-அத்தி கோயில் சாலை பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரை யாடினார்.
பின்னர், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு பேசினார்.
ஆய்வின் போது உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சித்தலைவர் திருமணி தவமணி பெரியசாமி, துணைத் தலைவர் பஞ்சு விக்னேஷ், வட்டாட்சியர் முத்துமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- சிவகாசியில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும்.
சிவகாசி
சுதந்திர தின கொண்டாட் டத்திற்கு இந்திய நாடே தயாராகி வருகிறது. சுதந்திர தின கொண்டாடத்தில் அனைவரின் நெஞ்சங்களி–லும் தவறாமல் இடம் பிடிப் பது மூவர்ண தேசிய கொடி என்றால் அது மிகையல்ல. விருதுநகர் மாவட்டம் சிவ–காசியில் உள்ள அச்சகத்தில், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தேவையான தேசிய கொடிகள் அச்சடிக் கும் பணிகளும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிக–ளும் விறுவிறுப்பாக நடை–பெற்று வருகிறது.
சிவகாசி அச்சகத்தில் துணியிலான தேசிய கொடி–கள், வார்னிஷ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்டவைகளில் தயாராகி வருகின்றன. சட் டையில் குத்தும் வகையில் பேப்பர் தேசிய கொடிகளும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புக–ளில் பொருத்தும் வகையி–லான அட்டையால் தயாரிக் கப்படும் தேசிய கொடிகள் அதிகளவில் தயாராகி வரு–கின்றன. மேலும் இந்தியா வரை படத்துடன் கூடிய தேசிய கொடிகள், தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவத்து–டன் கூடிய தேசிய கொடி–கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு உருவத்து–டன் கூடிய தேசிய கொடிகள் அழகிய வடிவங்களுடன், கண்ணை கவரும் டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப் பட்டு வருகின்றன. மேலும், தொப்பி வடிவில் தலையில் மாட்டிக்கொள்ளும் வகை–யில் தேசியக் கொடிகள், கைகளில் மாட்டிக் கொள் ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட் டுள்ளன.
தேசிய கொடிகள் தயா–ரிப்பில் முன்னணியில் இருக்கும் அச்சக உரிமையா–ளர் கூறும்போது, எங்களது அச்சகத்தில் பல்வேறு வகை–களிலான அச்சு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடிகள் தயாரிக் கும் பணிகளையும் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள பிரப–லமான பள்ளிகள், கல்லூரி–களில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கா க தேசிய கொடிகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள். பொதுமக்கள் பயன்ப–டுத்துவதற்காக ஸ்டேசனரி கடைகளில் பல வடிவங்க–ளிலான தேசிய கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளது. படிப்படியாக தமிழகம் முழு–வதும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை சட்டைக–ளில் குத்திக் கொள்ளும் உற்சாகம் தொடங்கியது. இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடை–களில் விற்பனை செய்வ–தற்கான தேசிய கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது.
ஒரு முறை எங்களது நிறுவனத்தில் தேசிய கொடி–கள் வாங்குபவர்கள் பின்னர் தொடர்ந்து ஒவ் வொரு ஆண்டும் ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேசிய கொடிக்கான ஆர்டர்களும் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக உள்ளது. பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்த–வில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தேசிய கொடி–கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வரு–கின்றன என்றார்.
- சிவகாசி அருகே காதல் தோல்வியில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹனீப்அலி. இவரது மகன் ஹபிதுல் ஹக்(19). இவர் தனது ஊரில் உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ஹபிதுல் ஹக் சிவகாசி சிட்கோவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு மகனை பார்க்க அவரது பெற்றோர் வந்த னர். அப்போது காதலித்த பெண்ணை மறந்து விடுமாறும், வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் ஹபிதுல் ஹக் இதனை ஏற்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தத்தில் தான் தங்கியிருந்த அறையில் ஹபிதுல் ஹக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஹனீப்அலி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல்
- பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அருப்புக் கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் முன்பு மக்களிடையே பேசுகிறார்.
காரியாபட்டி:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் கடந்த மாதம் 28-ந்தேதி ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் அவர் பாதயாத்திரையாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டதோடு, மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறினார்.
மேலும் புகார் பெட்டியையும் கையோடு எடுத்துச்சென்ற அண்ணாமலை அதில் பொதுமக்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தி.மு.க. அரசின் ஊழல் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வரும் அவருடன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
இதற்கிடையே அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஒருவரையொருவர் மாறி மாறி வசைபாடினர். இதனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ரத்தானது. மறுநாள் நடைபயணமும் கைவிடப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னை சென்ற அண்ணாமாலை 2 நாட்களாக ஓய்வெடுத்தார். இன்று மீண்டும் அவர் நடைபயணத்தை தொடங்கினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பத்திரபதிவு அலுவலகம் முன்பு பாதயாத்திரையை தொடங்கிய அவர், பஜார், காவல்நிலையம், ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் பழுதடைந்த காலனி வீடுகளை அப்பகுதியினர் கேட்டுக்கொண்டதன் பேரில் பார்வையிட்டார்.
காலனி வீடுகளுக்குள் சென்ற அண்ணாமலை, பழுதடைந்து இருந்த வீட்டின் உரிமையாளர்களிடம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் பனை ஓலையால் தயாரிக்கப்படும் பெட்டிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வரும் நாதஸ்வர கலைஞர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பள்ளத்துப்பட்டி, அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி சாலை, முக்குரோடு, பேருந்து நிலையம் வழியாக பாதயாத்திரை சென்ற அவர் தொடர்ந்து பிற்பகலில் திருச்சுழியில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர், அங்கு ரமண மகரிஷி இல்லத்திற்கு செல்கிறார். விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார்.
அருப்புக்கோட்டை காந்தி நகர் வந்து மதிய ஓய்வுக்கு பின்பு பாளையம் பட்டியில் இருந்து மாலை 4 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். அருப்புக் கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் முன்பு மக்களிடையே பேசுகிறார். இதனை தொடர்ந்து இரவு ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு விருதுநகர் பாண்டியன் நகர் தலைமை தபால் நிலையம் முன்பிருந்து தனது நடை பயணத்தை தொடங்குகிறார். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலையம், வெயில் உகந்த அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மெயின் பஜார், நகராட்சி அலுவலகம், இன் னாசியார் தேவாலயம் வழியாக சாத்தூர் ரோடு சந் திப்பில் எம்.ஜி.ஆர். சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் அவர் மாலையில் சிவகாசியில் தொழில் அதிபரை சந்திக்கிறார். நாளை மறுநாள் சாத்தூரில் நடைபயணம், மேற்கொள்ளும் அவர் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். இதில் அண்ணாமலையுடன் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.
- அண்ணாமலையை வரவேற்கும் விதமாக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரதமாதா சிலை அகற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுநகருக்கு வருகை தரும் மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் புகார் அளிப்பதோடு, அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
விருதுநகர்:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் மாபெரும் நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்துள்ள அவர் நாளை முதல் விருதுநகர் மாவட்டத்தில் தொடங்க இருக்கிறார்.
இதற்கிடையே அவரை வரவேற்கும் விதமாக விருதுநகரில் விருதுநகர்- சாத்தூர் சாலையில் உள்ள கிழக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் சுமார் 5 அடி உயரத்தில் பாரதமாதா சிலை ஒன்று வைக்கப்பட்டது. இதற்காக அலுவலக வளாகத்திற்குள் பீடம் அமைத்து அதில் சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலையை நாளை விருதுநகரில் நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரெங்கன் செய்திருந்தார். இந்த நிலையில் அந்த சிலை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.
எந்தவித அனுமதியும் பெறாமல் சிலை வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த போலீசார் உடனடியாக அதனை அப்புறப்படுத்துமாறு கூறினர். ஆனால் பா.ஜ.க.வினர் மறுப்பு தெரிவித்ததால் நேற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில், தாசில்தார் பாஸ்கரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த பா.ஜ.க.வினர், இங்கு வைக்கப்பட்டுள்ளது அரசியல் தலைவர்களின் சிலை அல்ல, பாரதமாதாவின் சிலை. மேலும் இந்த சிலை பொது இடத்தில் வைக்கப்படவில்லை, தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் மீண்டும் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் வந்த அருப்புக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கருண் கார்க் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கதவை திறக்குமாறு கூறினர்.
ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து பின்பக்கமாக சுவர் ஏறிக்குதித்த போலீசார் கடப்பாறையால் பீடத்தை உடைத்து அதன் மீது அனுமதியின்றி வைத்திருந்த பாரதமாதாவின் சிலையை அகற்றினர். பின்னர் அதனை மூட்டையாக கட்டி அங்கிருந்து பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.
இன்று காலை அங்கு வந்த பா.ஜ.க. தொண்டர்கள், பாரதமாதா சிலை அகற்றப்பட்டத்தை கண்டு அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்தனர். மேலும் இதுதொடர்பாக கட்சியின் மேலிடத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை விருதுநகருக்கு வருகை தரும் மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் புகார் அளிப்பதோடு, அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
அண்ணாமலையை வரவேற்கும் விதமாக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரதமாதா சிலை அகற்றப்பட்டது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தலைக்கேறிய போதையால் வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
- கணவரின் உடலை பார்த்து காதல் மனைவி கதறி அழுதார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதி–யைச் சேர்ந்தவர் புலியூர்சாமி மகன் பாண்டித்துரை (வயது 30). கூலி வேலை பார்த்து வந்த இவர் மலைவாழ் மக் கள் இனத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திரு–ம–ணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
வேலைக்கு சென்று கிடைக்கும் சம்பள பணத் தின் பெரும் பகுதியை பாண்டித்துரை குடித்தே அழித்து வந்தார். இதனால் குடும்பம் நடத்தவும், குழந் தையை வளர்க்கவும் அவ–ரது மனைவி ஐஸ்வர்யா மிகவும் சிரமப்பட்டு வந்தார். பலமுறை கண்டித்தும், அறி–வுரை கூறியும் அவர் திருந்த–வில்லை. இதனால் கடந்த இரண்டு தினங்களாக கண–வன், மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாண்டித்துரை நேற்று, ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருகே இருந்த கிணற்றின் மேட்டு பகுதியில் அமர்ந்து குடித்தார். அள–வுக்கு அதிகமான போதை–யில் இருந்த அவர் எழுந்து வீட்டுக்கு செல்ல முயன்ற–போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந் தார்.
இதைப்பார்த்த அங்கிருந் த–வர்கள் கிணற்றுக்குள் இறங்கி அவரது கையைப் பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் தலைக் கேறிய போதையில் இருந்த அவரால் கிணற்றுக்குள் இருந்து எழுந்து வரமுடிய–வில்லை. தொடர்ந்து போராடியும் பலனளிக்கா–மல் போனது. ஒரு சில விநாடிகளில் அவர் தண்ணீ–ரில் மூழ்கினார்.
உடனடியாக இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தக–வல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீய–ணைப்பு வீரர்கள் உடலை தேடும் பணி ஈடுபட்டனர். ஒரு வழியாக 12 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் பாண்டித்துரையின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக் காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ராஜபாளை–யம் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதை–யால் உயிரை விட்ட கண–வரின் உடலை பார்த்து அவரது காதல் மனைவி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
- திருச்சுழி குண்டாறு-ஓடைகளில் தொடர் மணல் திருட்டு நடந்துள்ளது.
- 75 மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக திருச்சுழி காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் திருச்சுழி குண்டாற்றுப் பகுதியிலும், சுற்றுவட்டார ஓடைப்பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சுழி அருகே கொட்டம் பகுதியில் உள்ள ஓடையில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக சரக்கு வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
திருட்டு கும்பல் ரோந்து சென்ற போலீசாரைக் கண்டதும் தப்பியோடி விட்டனர். இதனையடுத்து 75 மணல் மூட்டைகளுடன் கூடிய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அதனை திருச்சுழி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இதேபோன்று பாறைக்குளம் பகுதியில் உள்ள ஓடையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளியது தெரிய வந்தது. இதனையடுத்து 1 யூனிட் மணலுடன் கூடிய மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்து திருச்சுழி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட கொட்டம் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ஆனந்தராஜ் மற்றும் பாறைக்குளம் பகுதியை சேர்ந்த ராமு என்பவரது மகன் சின்னதம்பி ஆகிய 2பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
- திருமணமாகி 2 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அவரது சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
சென்னை அண்ணாநகர் கொருக்குபேட்டையை சேர்ந்தவர் மீனாட்சி (வயது44). இவரது மகள் தீபா (26). இவருக்கும், விருதுநகர் கடம்பகுளம் பகுதியை சேர்ந்த சரவணக் குமார் என்பவருக்கும் கடந்த ஜூன் 1-ந் தேதி திருமணமானது.
இந்த நிலையில் 1 மாதத்திற்கு பின்பு கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த பெண் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கணவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வருவதாகவும் தாயிடம் தீபா கூறியுள்ளார்.
அப்போது மீனாட்சி மகளை சமாதானம் செய்து பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் மீனாட்சி தீபாவை செல்போனில் அழைத்து ள்ளார். ஆனால் தீபா அழைப்பை ஏற்கவில்லை. இந்த நிலையில் மாலையில் தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மீனாட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விருதுநகர் வந்த போது மீனாட்சி உடல் சவக்கிடங்கில் வைக்கப் பப்பட்டுள்ளதாகவும், அவரை காண முடியாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்ப தாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூலக்கரை போலீஸ் நிலையத்தில் மீனாட்சி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்.
- வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெப்பக்கோட்டை அருகே உள்ள கோட்டையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கருப்பசாமி. கிருஷ்ணா சாமிக்கு மதுப்பழக்கம் இருந்தது அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்து மனைவியுடன் கிருஷ்ண சாமி தகராறு செய்தார் அப்போது அங்கு வந்த கருப்பசாமி தந்தையை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கருப்பசாமி இருசக்கர வாகனத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை கிருஷ்ண சாமியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அங்கி ருந்தவர்கள் கிருஷ்ணசாமியை மீட்டு காயல்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணசாமி இறந்தார்.
இதுகுறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கணேசனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது போதையில் தகராறு செய்து வந்த தந்தையை மகனே எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






