என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுடன் கலந்துரையாடிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
    X

    திருச்சுழியில் நடைபயணம் மேற்கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, விவசாயிகளிடம் கலந்துரையாடி, சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு பொருட்களை பார்வையிட்டு விளக்கம் கேட்டறிந்த காட்சி.

    விவசாயிகளுடன் கலந்துரையாடிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

    • திருச்சுழியில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுடன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார்.
    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சியு–டன் சாப்பிட்டு அதன் சிறப் புகள் குறித்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.

    திருச்சுழி

    தமிழக பா.ஜ.க. தலைவர் என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபய–ணத்தை தொடங்கிய அவர் மாலையில் திருச்சுழி வந் தார்.

    திருச்சுழியில், பிரதமர் நரேந்திர மோடியின் விவசா–யிகளுக்காக வகுக்கப்பட்ட திட்டமான பிரதம மந்திரி கிஸான் யோஜனா திட்டத் தின் பயனாளிகளான விவ–சாயிகள் மற்றும் விவசாய மதிப்புக் கூட்டுப் பொருட் கள் உற்பத்தியாளர்களைச் சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உரையாடினார்.

    கடந்த ஒன்பது ஆண்டுக–ளில், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதையும், விவசாயம் சார்ந்த புதிய தொழில் முனைவோர்கள் பலர் உருவாகியிருக்கின்றனர் என்பதையும் அறியும்போது, பாரதப் பிரதமர் நரேந்திர–மோடியின் விவசாயிகளுக் கான நலத்திட்டங்களின் நேரடிப் பலன்களை உணர முடிந்தது என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விவசாயிகளிடம் பேசினார்.

    முன்னதாக கிராமப் பகுதிகளில் விளைந்த வெள்ளரிக்காய் மற்றும் சிறுதானியங்களால் செய் யப்பட்ட உணவு பொருட் களை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சியு–டன் சாப்பிட்டு அதன் சிறப் புகள் குறித்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.

    Next Story
    ×