என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சாலை பாதுகாப்பு விழாவையொட்டி இரு சக்கர வாகன பேரணியை நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம், வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் மற்றும் வெஸ்டன் ஹாட்ஸ் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தியது.

    மாவட்ட நீதிமன்றம் அருகே போலீசார், நீதித் துறையினர், பொதுமக்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார். இதில் ஹெல்மெட் அணிந்து வந்த சிலருக்கு பாராட்டும், நினைவுப்பரிசும் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா வழங்கினார்.

    நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த பேரணி நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வந்து கிருஷ்ணாபுரத்தில் நிறைவு பெற்றது.

    பேரணியில் பங்கேற்றவர்கள் தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை விதிகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் போக்குவரத்து வட்டார ஆய்வாளர் ஜாஸ்மின், துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 30). தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி குருசெல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.

    இந்தநிலையில் மனைவி மீது நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாரிமுத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்துவுக்கும், குருசெல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் மனமுடைந்த குருசெல்வி கடந்த டிசம்பர் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனவேதனையில் மாரிமுத்து இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் திடீரென அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது உறவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம் அருகே தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மங்காபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது53). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை நடைபயிற்சிக்காக ராஜபாளையம் - தென்காசி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது யூனியன் அலுவலகம் எதிரே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 30). தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி குருசெல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.

    இந்தநிலையில் மனைவிமீது நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாரிமுத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்துவுக்கும், குருசெல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் மனமுடைந்த குருசெல்வி கடந்த டிசம்பர் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனவேதனையில் மாரிமுத்து இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் திடீரென அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது உறவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,573 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 16,309 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தபடவில்லை. மாவட்ட சுகாதாரத் துறையினர் நேற்று மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் முடிவுகள் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. மாவட்டத்தில் இதுவரை நோய் பாதிப்புக்கு 231 பேர் உயிரிழந்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,569ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,569ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 94 ஆயிரத்து 97 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தததில் 16, 524 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

    16,307 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 21 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
    சாத்தூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசா கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒத்தையால் கிராமத்தில் பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த சிவராஜ் (வயது56), ஓ.மேட்டுபட்டி பஸ் நிறுத்தத்தில் வைத்து மதுபாட்டில் விற்ற வீமேஸ்வர மூர்த்தி (43) ஆகிய 2 பேரிடம் இருந்து  மொத்தம் 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    வத்திராயிருப்பு அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம் அம்பேத்கர் தெருவில் நேற்றுமுன்தினம் இரவு 57 மூடை ( 2½ டன் அரிசி) ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக விருதுநகர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி வாயிலாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

    இதையடுத்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2½ டன் அளவுள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வத்திராயிருப்பு போலீஸ்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதையடுத்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை வத்திராயிருப்பு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ராஜபாளையத்தில் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 30). தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி குருசெல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. முத்துபிரியா என்ற 7 வயது மகள் உள்ளார்.

    இந்த நிலையில் குருசெல்வி பலருடன் பேசி வருவதாக கூறி சந்தேகத்தில் மாரிமுத்து பலமுறை மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மனைவியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து சென்றார். பின்னர் வீட்டில் விட்டுவிட்டு மாரிமுத்து கடைக்கு சென்றுவிட்டார்.

    இந்த சமயத்தில் குருசெல்வி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரிமுத்து வீடு திரும்பியபோது வீட்டில் மனைவி மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரிமுத்து, நேற்று இரவு அதே மின் விசிறியில் தனது மனைவி தூக்கு போட்ட சேலையாலேயே தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்துவின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் உடனே பேசி சுமுகமான தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு சாத்தூர் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் ஜோதி முப்பிடாதி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. தொழிற் சங்க பொதுச்செயலாளர் பரசுராமன், பார்வர்டு பிளாக் தொழிற் சங்க பொதுச்செயலாளர் பாலசுந்தரம், சாத்தூர் சி.ஐ.டி.யூ. செயலாளர் ரமேஷ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சம்பளம் உயர்த்தப்படவில்லை.

    எனவே ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் கூட்டுறவு சங்கங்களுடன் முறையான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசையும் போக்குவரத்து துறையையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி பேராசிரியை வீட்டில் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அருப்புகோட்டை:

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உஜ்ஜிசாமி கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). இவர் கலுவனச்சேரியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (46). தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் அருகில் உள்ள அவரின் தாயார் வீட்டுக்கு படுக்க சென்று விட்டார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் 2 பேர் வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து, வீட்டுக்குள் புகுந்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தைத் திருடி விட்டு வெளியே செல்ல முயன்றனர்.

    அப்போது சத்தம் கேட்டு எழுந்த ஜெயலட்சுமி மர்மநபர்களை பார்த்தவுடன் சத்தம் போட்டார். ஆனால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான கைரேகைகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    அருப்புக்கோட்டையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு உஜ்ஜி சாமி கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யவில்லை எனவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தியும் அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பெண்கள், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ×