என் மலர்
செய்திகள்

குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல்
அருப்புக்கோட்டையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு உஜ்ஜி சாமி கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யவில்லை எனவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தியும் அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பெண்கள், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story






