என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரு சக்கர வாகன பேரணி"

    • இந்து முன்னணி நிர்வாகியான குமரி பாலன் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
    • குமரி பாலன் நினைவிடத்தில் நிர்வாகிகள் மலர் அஞ்சலி

    நாகர்கோவில்:

    இந்து முன்னணி நிர்வாகியான குமரி பாலன் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    இதையொட்டி குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து தக்கலை அருகே பிரம்மபுரத்தில் உள்ள குமரி பாலன் நினைவிடத்துத்துக்கு இருசக்கர வாகன பேரணி நடந்தது.

    இதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இந்து முன்னணி நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களில் நாகராஜா கோவில் திடலுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து இருசக்கர வாகன பேரணி தொடங்கியது.

    பேரணிக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். பேரணியை இந்து வக்கீல் முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். முன்னதாக இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர் கொடியேற்றி வைத்தார்.

    நாகராஜா கோவில் திடலில் இருந்து புறப்பட்ட பேரணியானது வடசேரி, கிருஷ்ணன் கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், சுங்கான்கடை வழியாக பிரம்மபுரத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு குமரி பாலன் நினைவிடத்தில் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பேரணி தொடக்க நிகழ்ச்சி யில் நாகர்கோவில் மாநகர ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், பிரவீன், பா.ஜனதா மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மகளிர் அணி மாநில தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொது செயலாளர் ஜெகநாதன், துணைத்தலைவர் தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×