என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சர்வதேச கடல் எல்லை அருகில் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
    போர்பந்தர்:

    குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 மீனவர்கள் குஜராத் கடற்பகுதிக்கு உட்பட்ட அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் சர்வதேச கடல் எல்லை அருகில் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிர மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே (வயது 32) உயிரிழந்தார். திலிப் சோலங்கி என்ற மீனவர் காயமடைந்தார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த 10 வீரர்கள் மீது போர்பந்தர் மாவட்டம் நபி பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

    கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர், 2 படகுகளில் வந்து இந்திய மீன்பிடி படகு மீது தாக்குதல் நடத்தியதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,319 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,712 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்பிற்கு யாரும் பலியாகவில்லை.
    விருதுநகர் அருகே சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் புறநகர் போலீசார் ரோந்து சென்ற போது காந்திநகரில்உள்ள வீட்டுக்கு பின்புறம் உள்ள பகுதியில் காந்தி நகரை சேர்ந்த கணேசன் (வயது 46), அல்லம்பட்டி பாரதி நகரை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (67) ஆகிய 2 பேரும் காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றபோது அவர்களை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
    ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது.
    ஆக்லாண்டு:

    நியூசிலாந்து நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில்78 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளனர். 89 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். 

    தலைநகர் ஆக்லாண்டில் மட்டும் 200 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பரவல் அதிகரித்து இருப்பது தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதாக ஆக்லாண்டு சுகாதாரத்துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் பரவலை மிகத் திறமையாக கையாண்ட நாடுகளில் ஒன்றாக பாரட்டப்பட்ட நியூசிலாந்து, டெல்டா வகை தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
    டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் அரை சதம் அடித்து அசத்தினர்.
    அபுதாபி:

    டி20 உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. 

    158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். 3-வது ஓவரில் பிஞ்ச் 9 ரன்னில் போல்ட் என்ற முறையில் அவுட் ஆனார். 

    இதனையடுத்து டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஸ் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர். 1 ரன் எடுத்தால் வெற்றி பெரும் நிலையில் கெய்ல் பந்து வீச்சில் மிட்செல் மார்ஸ் 53 ரன்னில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 16.2 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
    தீபாவளி அன்று வேலைக்கு சென்ற பெண் மாயமானது தொடர்பாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 34). இவர் மூலிகை மருந்து கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி உமாதேவி (28). அந்தப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடை ஊழியர் முத்துப்பாண்டியுடன் அடிக்கடி பேசினாராம். இதனை செல்லத்துரை கண்டித்துள்ளார்.

    தீபாவளியன்று உமா தேவி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இன்று திரும்பி வர நேரமாகும் என கூறிச் சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் உமாதேவி வீடு திரும்பாததால் கணவர் செல்லத்துரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் செல்லத்துரை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாதேவியை தேடி வருகின்றனர்.
    மார்க்கெட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்த வாலிபரின் பெயர் சுந்தர் (வயது 43) என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை வடக்கு மாசி வீதி மதுக்கடை முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத் தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்தா பிரிவு பார்வையாளர் அறை முன்பு 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை பயணத்திற்கு ஏற்றபடி இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம், கீழ்பக்கம் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், இரவில் கடைக்குச் சென்று உணவு அருந்தியுள்ளார். பின்னர் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    ராமகிருஷ்ணாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அவர் வந்தபோது குண்டும், குழியுமான சாலையால் தவறி கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில் அங்கு ராஜபாளையத்தில் இருந்து தேனி சென்ற அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் சந்திரசேகர் சிக்கிக் கொண்டார். சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நகமங்கலத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (15 ). இவர் வீட்டிலிருந்து அச்சங்குளம் சென்று கொண்டிருந்த போது கூனம்குளம் கண்மாய் கரையில் இருந்த இலுப்பை மரம் எதிர்பாராத விதமாக சாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இசை விழா நடைபெறும் மேடையை நோக்கி பலர் முன்னேறி வந்ததால் நெரிசல் ஏற்பட்டு பலர் தரையில் விழுந்தனர்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் நேற்று இரவு அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இசை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் மேடையின் முன்பகுதியில் நேரம் செல்லச் செல்ல நெரிசல் அதிகரித்தது. 

    ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்த சிலர், நெரிசலை சமாளிக்க முடியாமல் தரையில் விழுந்தனர். அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். இந்த தகவல் பரவி ரசிகர்களிடையே பீதி ஏற்பட, முண்டியடித்து வெளியேற முற்பட்டனர். இதனால் நெரிசல் மேலும் அதிகரித்து பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    விருதுநகர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பட்டாசு ஆலை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூரில் உள்ள பட்டாசு ஆலையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் கோபால் (வயது 52).

    இந்த பட்டாசு ஆலை ஊழியர் ஒருவர் வேலைக்கு வரவில்லை. இதனால் கோபால் அந்த ஊழியர் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டார். அதன் பின்னரும் அவர் வேலைக்கு வரவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கோபால் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது 17 வயது பிளஸ்-2 படிக்கும் மகள் தனியாக இருந்தார்.

    அப்போது அவர் அந்த மாணவியிடம் ரூ.500 கொடுத்து தீபாவளிக்கு இனாமாக வைத்துக் கொள் எனக்கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த மாணவியின் தாயார் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    சேலம் திருமணி முத்தாறில் ஏற்கனவே தண்ணீர் செல்லும் நிலையில் தற்போது மூக்கனேரியில் இருந்த திறந்து விடப்படும் உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாநகரில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    குறிப்பாக பெரமனூர் நாராயண பிள்ளை தெருவில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதேபோல பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம் நாராயண நகர் உள்பட பல பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    சுவர்ணபுரி அனெக்ஸ் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து வெளியில் ஊற்றினர். இதனால் அந்த பகுதி மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். சேலம் அருகே உள்ள புது ஏரி நிரம்பிய நிலையில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள மூக்கனேரி நேற்றிரவு பெய்த மழையில் நிரம்பியது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம் திருமணி முத்தாறில் ஏற்கனவே தண்ணீர் செல்லும் நிலையில் தற்போது மூக்கனேரியில் இருந்த திறந்து விடப்படும் உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதே போல புறநகர் பகுதிகளான ஆத்தூர், பெத்த நாயக்கன்பாளையம் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நிலத்தடி நீர், ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 66 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 63.2, பெத்த நாயக்கன்பாளையம் 24, எடப்பாடி 18.4, ஆனைமடுவு 16, வீரகனூர் 13, கரியகோவில் 11, தம்மம்பட்டி 10, ஏற்காடு 10, காடையாம்பட்டி 8, ஓமலூர 5, மேட்டூர் 3.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 248.40 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை விஜயநகரம் முதல் தெருவை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி. இவருடைய மனைவி கல்யாணி (வயது 60). இவர் பந்தல்குடி செல்வதற்காக காந்தி நகரில் இருந்து அகமுடையார் மகால் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து விளாத்திகுளம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பந்தல்குடியில் இறங்கினார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×