search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்பிடி படகுகள்
    X
    மீன்பிடி படகுகள்

    இந்திய மீனவர் சுட்டுக்கொலை- பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர் மீது வழக்கு

    சர்வதேச கடல் எல்லை அருகில் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
    போர்பந்தர்:

    குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 மீனவர்கள் குஜராத் கடற்பகுதிக்கு உட்பட்ட அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் சர்வதேச கடல் எல்லை அருகில் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிர மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே (வயது 32) உயிரிழந்தார். திலிப் சோலங்கி என்ற மீனவர் காயமடைந்தார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த 10 வீரர்கள் மீது போர்பந்தர் மாவட்டம் நபி பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

    கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர், 2 படகுகளில் வந்து இந்திய மீன்பிடி படகு மீது தாக்குதல் நடத்தியதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×