என் மலர்
விருதுநகர்
- தீபாவளியை முன்னிட்டு வீரசோழன் ஆட்டுச்சந்தை களைகட்டியது.
- ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகிறது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள வீரசோழன் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. பல ஆண்டுகளாக பாரம்பரிய மிக்க இந்த சந்தையானது வாரந்தோறும் திங்கட் கிழமை நடைபெறு வது வழக்கம். மேலும் வீர சோழன் சந்தையானது தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளில் ஆடு வியாபாரம் களை கட்டும்.
வாரம்தோறும் நடை பெறும் இந்த சந்தைக்கு விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடுகள், கோழிகளை விற்பனை செய்யவும், வாங்கவும் வந்து செல்கின்றனர்.
வருகிற 12-ந்தேதி தீபா வளி பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி வீரசோழன் வாரச் சந்தை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதலே வீரசோழன் வாரச்சந்தை திடலில் திரளாக கூடிய ஆட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக ளவில் ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர்.
வீரசோழன் வாரச்சந்தை யில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற் பட்ட ஆடுகள் விற்பனை யான தாகவும் அதன் மூலம் சுமார் ரூ.95 லட்சம் ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்றதாகவும் வீரசோழன் டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவிந்துள்ளது.
மேலும் வருகிற 12-ந்தேதி கொண்டா டப்படும் தீபாவளி பண்டி கையானது ஞாயிற்றுக்கி ழமை கொண்டாடப்படு வதால் வழக்கமாக திங்கட் கிழமை நடைபெறுகின்ற வீரசோழன் வாரச்சந்தையை பொதுமக்களின் நலன் கருதி 11-ந் தேதி அதாவது முன் கூட்டியே சனிக்கிழமை நடைபெறும் எனவீரசோழன் டிரஸ்ட் போடு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அன்றைய தினம் (சனி) எட்டையாபுரம், இளையான்குடி பகுதிகளில் வாரச்சந்தை செயல் படுவதால் தீபாவளிக்கு முதல் நாள் அதாவது சனிக்கிழமை நடைபெறவுள்ள வீர சோழன் வாரச்சந்தையில் ஆடு விற்பனை சற்று குறை வதற்கும் அதிக வாய்ப்புள்ள தாக டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வந்தன.
- ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 108 கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
விருதுநகர்:
தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வந்தன. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சாத்தூர், விருதுநகர், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் மாலையில் மழை கொட்ட தொடங்கியது.
4 மணிக்கு தொடங்கி மழை 2 மணிநேரம் வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இரவிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை வரை தொடர்ந்து பரவலாக மழை நீடித்ததால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அய்யனார்கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் நீர்தேக்க ஏறி நிரம்பும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே பெய்த மழையில் தேவதானம் சாஸ்தா அணையில் நிரம்பி விட்டது.
ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 108 கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் உழவு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவரை தீயணைப்புத்துறையினர் மீட்ட காட்சி.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழையில் மம்சாபுரம் முத்துகருப்ப நாடார் தெருவில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனே சென்று வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய வன்னியராஜ் (வயது62) என்பவரை காயங்களுடன் மீட்டனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலை பகுதியிலும் கொட்டி தீர்த்த மழையால் பல பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருச்சுழி-30, ராஜபாளையம்-114, காரியாபட்டி-60, ஸ்ரீவில்லிபுத்தூர்-108, விருதுநகர்-69, சாத்தூர்-58, சிவகாசி-46, பிளவக்கல்-53, வத்திராயிருப்பு-34.2, கோவிலாங்குளம்-85.8, வெம்பக்கோட்டை-22, அருப்புக்கோட்டை-40. மொத்த மழை அளவு 720.3 ஆகும்.
சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சிவகங்கை நகர் காளையார்கோவில், தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தேவகோட்டையில் நேற்று இரவு தொடங்கிய மழை நிற்காமல் விடிய விடிய பெய்தது. இதில் 23-வது வார்டு மாட்டுச்சந்தை ஆற்றங்கரை பகுதியில் ஈரப்பதம் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கியிருந்த செல்வம்(50), அவரது மனைவி பார்வதி, மகள் ஆகிய 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் தனலட்சுமி நல்லூர்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தேவையான உதவிகளை செய்தனர்.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சிவகங்கை-30, மானாமதுரை-36, திருப்புவனம்-77, தேவகோட்டை-39, காளையார் கோவில்-48. மொத்த மழை அளவு-272.10 ஆகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. கடற்கரை மாவட்டமான இங்கு பலத்த சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம் நகர், திருவாடானை, தொண்டி, பரமக்குடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமேசுவரத்தில் தொடர் மழையால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.மல்கலம் பகுதியில் பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தண்ணீரை அகற்றினர். இருப்பினும் தொடர் மழையால் தண்ணீரை அகற்ற சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வாலிநோக்கம்-62, பரமக்குடி-48, ஆர்.எஸ்.மங்கலம்-46, ராமநாதபுரம்-40, தீர்த்தாண்டதானம்-63, திருவாடானை-73, தொண்டி-95, வட்டாணம்-56. மொத்த மழை அளவு-547 ஆகும்.
3 மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிவகங்கை, விருதுநகரில் இன்று காலையும் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் 9 மணி வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் பல பகுதிகளில் மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்வதை காண முடிந்தது. சில தனியார் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது.
- காங்கிரஸ் வாக்குச்சாவடி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
- 52 வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே குந்தலப்பட்டி கிராமத்தில் வடக்கு வட்டார காங்கிரஸ் வாக்குச்சாவடி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டார தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 52 வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடி நிர்வாகிகளின் செயல் பாடு குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பால கிருஷ்ணசாமி, சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினர். வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பட்டியல் வழங் கப்பட்டது.கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் நாகேந்திரன், வைரமுத்து, மற்றும் வைரவசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார செயலாளர் மாடசாமி நன்றி கூறினார்.
- காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த தற்காலிக சாலையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேலையூர் பகுதியில் இருந்து வடக்கு நத்தம் வழியாக புதூர் செல்லும் சாலையில் பெரிய ஓடை யொன்று உள்ளது. இந்த ஓடையை கடப்பதற்கு சுமார் 17 கண்கள் கொண்ட தரைப்பாலம் இருந்தது.
பந்தல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கன மழை பெய்து வரும் காலங்களில் அவ்வழியாக வரும் மழை நீரானது மறவர் பெருங்குடி வழியாக வந்து கஞ்சம்பட்டி கண்மாய் நிரம்பி உபரி நீராகவும், சுத்தமடம், தொப்ப லாக்கரை பகுதியில் காட்டு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் பெரிய ஓடை யில் நீர்வரத்து அதிகமாகி உப்போடையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
இதனால் பொதுமக்கள் மேலையூர் வழியாக சாயல் குடி, அருப்புக்கோட்டை, செல்ல முடியாமல் புதூர் வழியாக சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.இந்த நிலையில் பொது மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு கிராமப்புற சாலை கள் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடியே 42 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாலம் கட்டி வரும் பகுதியில் மாற்றுச்சாலை அமைக்கப் பட்டது. மேலும் இந்த சாலையில் ஏற்கனவே 17 கண்கள் கொண்ட பாலம் இருந்து வந்த நிலையில் தற்போது அமைத்த தற்கா லிக மாற்றுச்சாலையில் வெறும் 3 கண்களுடைய பாலம் மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படு கிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல் வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கஞ்சம் பட்டி கண்மாய் நிரம்பி அதன் வழியாக உபரி நீரானது அதிகளவில் வெளியேறி வருவதால் புதூர் செல்லும் சாலையில் உள்ள பெரிய ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இதனால் மாற்று சாலையில் போடப்பட் டுள்ள தற்காலிக பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்ட தன் காரணமாக சாலையானது துண்டிக்கப் பட்டது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வடக்கு நத்தம் மற்றும் தெற்கு நத்தம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பாதிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில் தூத்துக்கு டியை சேர்ந்த விவசாயி அந்த பகுதியை டிராக்டரில் கடக்க முயன்றார். அப்போது வெள்ளப் பெருக்கு அதிகரித்தது. இத னால் டிராக்டர் இழுத்து செல்லப் பட்டது. அதிர்ச்சியடைந்த விவசாயி டிராக்டரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிராக்டரை மீட்டனர்.
மேலும் இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச் சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் கூறுகையில், தற்காலி கமாக போடப் பட்ட மாற்றுச் சாலையை தரமாக அமைக்க வேண்டு மென கோரிக்கையும் விடுக்கப்பட் டது. ஆனால் 3 கண்பாலம் மட்டுமே அமைத்து மாற்று சாலை போடப்பட்டதால் அதிக நீர்வரத்தை தாங்க முடியாமல் தற்காலிக சாலையில் அரிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் துண்டிக் கப்பட்ட நிலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள் ளது.
இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் வெளி யூர்களுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் மாற்றுச்சாலை சீரமைக்க உடனடியாக நடவ டிக்கை எடுக்க அப்பகுதி சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- விருதுநகரில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் - கட்டனூர் சாலையில் இருஞ்சிறை விலக்கு பகுதியில் அமைந்துள்ள மறையூர் கழுங்கு பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர்.
இதனை யடுத்து பொது மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக உயர் மட்ட பாலம் அமைக்க திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த நிலையில் மறையூர் - கட்டனூர் சாலையில் சுமார் ரூ.69 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த பால பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நெடுஞ் சாலைத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.
இந்த ஆய்வின் போது நரிக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில்,ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
- ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறி மாடு இறந்தது.
- புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் புலிகள் வன காப்பக பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரண மாக வனத்துறையினர் வனப்பகுதியில் பொது மக்கள் செல்ல கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஆண்டு ஸ்ரீவில்லி புத்தூர் வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதை யடுத்து போலீசார் வனப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர ராஜபுரம் மேற்கு பகுதியில் சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றது. இரவு நீண்ட நேரமாகியும் அது திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சண்முக ராஜ் மாட்டை தேடிச் சென்றார். அப்போது புதுக்குளம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் மாடு இறந்து கிடந்தது. வாய் கிழிந்த நிலையில் மாட்டின் தலை சிதறியிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டை கடித்ததில் மாடு பலியாகி இருப்பது தெரியவந்தது.
புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- தீபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- வருகிற பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உறுதுணையாக இருந்து வெற்றியை பெற்று தர வேண்டும்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளை சார்ந்த தூய்மைப் பணியாளர்க ளுக்கு புத்தாடை, இனிப்பு களை தனுஷ்குமார்
எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
பின்னர் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதி யில் தொற்று பரவாத வண்ணம் தங்கள் உயிர் களையும் பொருட்படுத்தா மல் அர்ப்பணிப்பு டனும் சிறப்பாக பணி யாற்றிய முன்கள பணி யாளர்களான தூய்மை பணியா ளர்கள் அனை வருக்கும் நன்றியை தெரி வித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கட்டணமில்லா பஸ் வசதி திட்டம் போன்ற சிறந்த திட்டங்களை செயல் படுத்தக்கூடிய முதல்-அமைச்சர் நமக்கு கிடைத் துள்ளார்.
மேலும் நமது முதல்-அமைச்சரின் சிறப்பான ஆட்சியில் ஏழை, எளிய பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தி வருகிறார். வருகிற பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உறுதுணையாக இருந்து வெற்றியை பெற்று தர வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பேரூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், பேரூர் செய லாளர் சிங்கப்புலி அண் ணாவி, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச் செல்வி, மாவட்ட மாண வரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆடுகளின் ரத்தமா அல்லது மனித ரத்தமா என சோதனை செய்து வருகின்றனர்.
- நள்ளிரவில் அந்த பகுதியில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் கடும் பீதியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட உச்சி சுவாமி கோவில் நான்காவது குறுக்கு தெரு அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் லேசானது முதல் பலத்த மழை பெய்து வந்தது. நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வழக்கம்போல் இரவு தூங்கினர்.
இன்று அதிகாலை பெண்கள் எழுந்து வாசல் தெளிக்க வந்தபோது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியில் உறையச் செய்தது. காரணம் பெரும்பாலான வீட்டின் வாசல்கள் மற்றும் வீட்டு சுவர்களில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது. பீதியடைந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே ஒருவருக்கொருவர் தகவல் கொடுத்து திரண்டனர்.
மேலும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவின் முன்பகுதியிலும் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பூங்கோதை என்ற மூதாட்டி கூறுகையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னால் எங்கள் தெருவின் பின்பகுதியில் இதேபோல் ஒரு வீட்டில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு 1 மணி வரை நான் தூக்கம் வராமல் விழித்திருந்தேன் அதுவரை யாருடைய நடமாட்டமும் இல்லை. அதன் பிறகு இன்று அதிகாலை வழக்கம் போல் வாசல் தெளிப்பதற்காக எழுந்து பார்த்த போது என் வீடு உள்பட சுமார் பத்து வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது.
மேலும் எனது வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் முன்பகுதியிலும் ரத்தம் தெளிக்கப்பட்டுள்ளது. இதனை யார் செய்திருப்பார்கள், எதற்காக செய்தார்கள் என்று தெரியவில்லை என பதட்டத்துடன் தெரிவித்தார்.
ரத்தம் தெளிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆங்கிலத்தில் பி.ஆர். நேற்று இரவு என்று எழுதியிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரத்தம் தெளிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர்.
மேலும் அந்த ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இது ஆடுகளின் ரத்தமா அல்லது மனித ரத்தமா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் மாந்திரீக வேலைக்காக யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நள்ளிரவில் அந்த பகுதியில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் கடும் பீதியில் உள்ளனர்.
- காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
- சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் காஞ்சனா தேவி (வயது 26). இவருக்கும் சென்னையை சேர்ந்த சோலைராஜ் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு சிவரஞ்சனி (6), கெவின்ராஜ் (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். காஞ்சனா தேவி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார்.
இதற்கிடையே காஞ்சனா தேவிக்கு திடீர் உடல்நலக்கு றைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற வசதியாக சோலைராஜ் தனது மனைவியை, குழந்தைகளை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். காஞ்சனாதேவியின் தந்தை தள்ளு வண்டியில் அப்பளம் வியாபாரம் செய்து வந்தார்.
அவர் தனக்கு உதவியாக பெரம்பலூர் மாவட்டம் கீரனூரை சேர்ந்த செந்தில் என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். அவர் அடிக்கடி மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்துசென்றபோது காஞ்சனாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மாரிமுத்து செந்திலையும், மகள் காஞ்சனா தேவியையும் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சனாதேவி, தந்தை வீட்டில் இருந்து வெளியேறி அதே பகுதியில் குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார். மகளை மறக்க மனமில்லாத மாரிமுத்து அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்று பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்றும் அவர் சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. அக்கக் பக்கத்தில் விசாரித்தபோது காஞ்சனாதேவி வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அப்போது மாரி முத்துவை செல்போனில் தொடர்பு கொண்ட காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையுடன் மாயமான காஞ்சனாதேவி மற்றும் செந்திலை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மலர அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள செங்குளம் பகுதியில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன் னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தலைமைக் கழக பேச்சாளர் சிங்கை.அம்புஜம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆர்.கே.ரவிச் சந்திரன் பேசியதாவது:-
தமிழக மக்களிடம் நிறை வேற்ற முடியாத திட்டங்க ளையெல்லாம் நிறைவேற்று வதாக கூறி பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் இந்த 2½ ஆண்டு காலத்தில் மக்களை வாட்டி வதைக்கும் செயல்கள்தான் நடை பெற்று வருகிறது.
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும் வகையில் எடப்பாடி பழனி சாமி தலைமையில் ஆட்சி மலர அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலா ளர்கள் அம்மன்பட்டி ரவிச் சந்திரன், பூமிநாதன், ராமமூர்த்திராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் வீரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முனி யாண்டி, முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
- அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கே.டி.ராேஜந்திரபாலாஜி கூறினார்.
- கட்சியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்படவேண்டும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென் காசி ரோட்டில் உள்ள ஓட்ட லில் ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. நகர, ஒன்றிய, கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்க ளான பூத் கமிட்டி நிர்வா கிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.
பூத் கமிட்டி பொறுப்பா ளரும், சிறுபான்மை நலப் பிரிவு பொருளாள ருமான மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெயல லிதா பேரவை செயலாளர் என்.எம்.கிருஷ்ணராஜ் வர வேற்றார். கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது நடைபெறுகின்ற தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்வரும் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர் தல்களில் நமக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்த நேரத்தில் நாம் கிளைக் கழகங்களில் கட்சியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்படவேண் டும்.
பூத் கமிட்டி நிர்வாகிகள் அர்ப்பணிப்போடு செயல் பட்டால் நாம் வெற்றிக்க னியை எளிதாக பறித்து நமது பொதுச் செயலாளர் எடப்பாடியாரை முதல மைச்சராக்கி தமிழகத்தை மீண்டும் வளம்பெற செய்ய முடியும். அ.தி.மு.க. கட்சியில் சிறப்பாக செயல்படுபவர்க ளுக்கு செயல்பாட்டுக்கு ஏற்ப தக்க மதிப்பு அளிக்கப் படும். இன்றே களத்தில் இறங்கி வேலைபாருங்கள் என்றார்.
கூட்டத்தில் நகர செய லாளர்கள் வக்கீல் துரை முருகேசன் பரமசிவம், ஓன்றிய செயலாளர்கள் ஆர்.எம்.குருசாமி, நவரத்தி னம், பேரூர் செயலாளர்கள், மகளிரணி நகர செயலாளர் ராணி, மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தார் ஒன்றிய செயலாளர் மயில் சாமி, மாவட்ட அரசு போக் குவரத்து சங்க கவுரவ தலை வர் குருசாமி,
மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சன், செட்டியார்பட்டி அங்குதுரை பாண்டியன் மகளிரணி ராணி கவிதா, விமலா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரி யான், மாவட்ட பேரவை துணை தலைவர் திருப்பதி, துணை செயலாளர் ராசா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் சோலைமலை, யோகசேக ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாண்டியர் கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
- சிற்பங்களை பாதுகாப்பது நமது ஒவ் வொருவரின் கடமையாகும்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள உலக்குடி கிராமத்தில் பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லி யல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர் மற்றும் தாமரைக் கண்ணன் ஆகியோர் கள மேற்பரப்பாய்வில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு பாண்டியர் கால சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது:-
உலக்குடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சிவலிங் கம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிவலிங்கமானது சதுர வடிவில் செதுக்கப்பட்டுள் ளது. இந்த சிவலிங்கத்தை ஊர் பொதுமக்கள் சில காலத்திற்கு முன்பு வரை வழிபட்டு வந்துள்ளனர். இந்த சிவலிங்கத்தின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது முற்கால பாண்டியரின் கைவண்ணத் தில் உருவானவையாகவும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் கருதலாம்.
சிவலிங்கத்தின் அருகே ஒரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. இந்த சிற்ப மானது ஒரு முற்று பெறாத சிற்பமாகும். தலைப்பகுதி கரண்ட மகுடமும், காது களில் காதணியும் தெளி வாக இடம்பெற்றுள்ளது. வலது கையானது கத்தியை பிடித்த படியும் இடது கையை கீழே தொங்கவிட்டும் அக்கரத்தில் தெளிவற்ற ஓர் ஆயுதம் இனங்கான முடி யாத நிலையில் உள்ளது.
மேலும் இந்த சிற்பமானது 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலமும் சிவலிங்கத்தின் காலமும் ஒன்றாக கருதலாம்.
இதேபோல் உலக்குடி கிராமத்தின் பேருந்து நிறுத் தம் அருகே பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் நின்ற கோலத்தில் காணப்பட்டது. 4 அடி உய ரத்தில் 4 கரத்துடனும் வலது மேற்கரத்தில் சக்கரமும் இடது மேற்கரத்தில் சங்கும் இடம் பெற்றுள்ளன. வலது முன் கரத்தில் அபயம் காட்டியும் இடது முன் கரத்தை கடிஹஸ்தமாகவும் வைத்து நின்ற கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள் ளது.
தலையில் கிரீட மகுடமும் மார்பில் முப்புரிநூலும் இடையில் இடைக்கச்சை அணிந்தபடி சிற்பம் வடிக் கப்பட்டுள்ளது. உலக்குடி கிராமத்தில் இது போன்ற சிற்பங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதை பார்க் கும் போது முற்காலங்களில் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்திருக்கக் கூடும் என் றும் முற்காலங்களின் வர லாற்று சான்றுகள் நிறைந்த ஊராகவும் கருதலாம் என் றும் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களை பாதுகாப்பது நமது ஒவ் வொருவரின் கடமையாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






