2-வது திருமணம் செய்து கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்

2-வது திருமணம் செய்து கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய திருப்பூர் வாலிபர்-உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மாப்பிள்ளை வீட்டாருக்கு 6½ பவுன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் சீர் கொடுத்துள்ளனர்.
2-வது திருமணம் செய்து கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்
Published on

விருதுநகர்

திருத்தங்கல் திருவள்ளூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரெஜினாமேரி. இவருக்கும், திருப்பூரை சேர்ந்த செல்வமணி என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு 6½ பவுன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் சீர் கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் கணவர் வீட்டில் ரெஜினா மேரி வசித்து வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் கூடுதலாக ரூ.1 லட்சம் வாங்கி தரவேண்டும் என கேட்டு ரெஜினா மேரியை, கணவர் துன்பு றுத்தி வந்ததாக கூறப்படு கிறது.

அவருக்கு உடந்தை யாக தாய் பொன்னுத்தாய், சகோதரிகள் கலையரசி, சந்திராதேவி, உறவினர் திருத்தங்கல் லலிதா உள் ளிட்டோர் ரெஜினா மேரியிடம் கூடுதல் வரதட் சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் செல்வ மணிக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ரெஜினா மேரி சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து மனு செய்தார். கோர்ட்டு உத்தர வின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீ சார் செல்வமணி மற்றும் உறவினர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com