என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மானிய உதவிகள்
    X

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் ஜெயசீலன் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மானிய உதவிகள்

    • ரூ.62.68 லட்சம் மதிப்பில் மானிய உதவிகளை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி கள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொட்டகை அமைத்தல், கறவைப்பசு, ஆடுகள் மற்றும் நாட்டுக் கோழிகள் கொள்முதல் செய்தல், பசுந்தீவன பயிர் சாகுபடி செய்தல், இயந்திர புல் நறுக்கும் கருவி கொள்முதல் செய்தல் உள்ளிட்ட கால்நடை சார்ந்த தொழில் புரிவதற்கும், கருவிகள் கொள்முதல் செய்வதற்கும் 30 பயனா ளிகளுக்கு மொத்தம் ரூ.99.50 லட்சம் திட்ட மதிப்பில் ரூ.62.68 லட்சம் அரசு மானி யத்திற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×