என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டு விழா போட்டிகள்"

    • ராஜபாளையத்தில் சேக்கிழார் மன்றம் சார்பில் ஆண்டு விழா போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் பொருளாளர், மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம், சேக்கிழார் மன்ற அறக்கட்ட ளையின் 39-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவி களுக்கு இடையே சிவ புராணம், திருத்தொண்டத் தொகை ஒப்பித்தல், தேவாரப் பண்ணிசை, நடனம், பேச்சு, கட்டுரை மற்றும் நாடக போட்டிகள் மன்றத் தலைவர் பூமிநாதன் வழி காட்டுதலின்படி நடைபெற்றது. கவுரவ தலைவர் முத்து கிருஷ்ணராஜா போட்டி களை தொடக்கி வைத்து பேசினார். போட்டிகளில் 25 பள்ளிகளில் பயிலும், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நடுவர்களாக சிதம்பர நாதன், முத்தையா, தமிழ்ப் பித்தன், கோவிந்தன், சங்கர லிங்கம், சுதாகர், ஜெய சுகந்தி, மீனா, வள்ளியம்மாள் ஆகியோர் பணியாற்றி வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு ஜனவரி மாதம் நடைபெற இருக்கின்ற ஆண்டு விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். நாடகம், நடன போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் நாடகம் மற்றும் நடனம் ஆண்டு விழாவின் போது மேடையேற்றப்படும் என்பதை பொதுச்செயலர் கணேசன் தெரிவித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் பொருளாளர் சுப.முத்தையாவும் மன்ற உறு்பினர்களும் செய்திருந்தனர்.

    ×