என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்தில் ஜெயா கல்வி குழுமங்களின் சேர்மன் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார்.
ராஜபாளையம்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் சார்பில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடந்தது.
விருதுநகர் மாலட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமணபெருமாள் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில தலை வரும், சென்னை ஜெயா கல்வி குழுமங்களின் நிறுவன தலைவருமான டாக்டர் கனகராஜ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் கல்வி கற்றுத் தரும் விதத்தை 2 ரகமாக பிரித்து பார்த்தால் சுலபமாக புரிந்து கொள்ளலாம். சுதந்தி ரத்திற்கு முன்பு, பின்னர் என்று எடுத்துக் கொள்ளலாம். கடும் எதிர்ப்புகளையும் தாண்டித்தான் நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. வாயிலாக தரமான ஆங்கில வழிக்கல்வியை கற்பிக்க முடிந்தது. அதன் பலனாகத் தான் தமிழ்நாட்டுக்கு பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை வெளிக் கொண்டு வரமுடிந்தது.
கல்விக் கண் திறந்த காமராஜர் அவதரித்த புண்ணியபூமி என்பதால் விருதுநகர் மாவட்டம் அரசு தேர்வில் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. அரசு பள்ளிகளில் பல சலுகைகள் வழங்கப்பட்டாலும் நாம் என்றும் தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்க ளாகவும், ஒழுக்கத்தையும் வாழ்க்கையில் மேன்மையுற கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்களை கற்றுதரும் சிறந்த கல்வி நிறுவனங்களாகவும் திகழவேண்டும்.
தரம், நிரந்தரம் ஆக்கப்படும் போது தான் குழந்தைகளை பெரிய, பெரிய அதிகாரிகளாக வளர்க்க முற்படும் பெற்றோர்கள் நமது கல்வி நிலையங்களை தேடி வருவார்கள். அவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விருதுநகர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
பள்ளி கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கக்கூடாது, விண்ணப்பித்து காத்திருக்கும் பள்ளிகளுக்குதொடர் அங்கீகாரசான்று வழங்க வேணடும், ஆர்.டி.இ கல்வி கட்டணத்தை உடனே வழங்க வேண்டும், அனைவருக்கும் ஒரே மாதிரியான, நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுசெயலாளர் நந்தகுமார், சாத்தூர் சன் இந்தியா பப்ளிக் பள்ளி நிர்வாகி சுரஜ்குமார் உள்பட பலர் பேசினர். மாவட்ட பொருளாளர் கந்தையா நன்றி கூறினார்.
இதற்கான எற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பி.எஸ்.ஆர். அலுமினி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியது
- இந்த போட்டி பல சுற்றுகளாக முறையே கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி என்ற சுற்றுகளாக நடைபெறுகிறது.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர்..கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான முதலாமாண்டு ''பி.எஸ்.ஆர். அலுமினி கோப்பை- 2023'' கிரிக்கெட் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் சுந்தர்ராஜன், கல்லூரி அகாடமிக் இயக்குநர் கோபால்சாமி, உடற்கல்வித்துறை தலைவர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த போட்டியானது கல்லூரிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் ஆகியோருக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் பி.எஸ்.ஆர். அலுமினி அணி, பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கலைக்கல்லூரி, சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரி கிரிக்கெட் அணிகள் உள்பட 28 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டி பல சுற்றுகளாக முறையே கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி என்ற சுற்றுகளாக நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் ெவற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-ம் பரிசாக 5 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-ம் பரிசாக பெறும்வற்கு ரூ.4 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், உடற்கல்வித்துறை இயக்குநர் சுந்தரமுர்த்தி, பேராசியர்கள் ரமேஷ், செந்தில்குமார், ராதா மற்றும் இதர பேராசிரியர்கள் இணைந்து செய்துள்ளனர்.
- தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி டி.எஸ்.பி. பிரித்தி பேசினார்.
- நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 78-வது ஆண்டு விழா நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார்மேல்நிலைபள்ளி கலையரங்கத்தில் நாடார் தொடக்கப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 78-வது ஆண்டு விழா நடந்தது.
நாடார் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின் செயலர் விஜயராஜன், மெட்ரிக் மேல்நிலைபள்ளி செயலர் ஆத்தியப்பன் வரவேற்று பேசினார். உறவின்முறைத் தலைவர் ஆதவன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உறவின்முறை செயலர் வெற்றிசெல்வன், பொரு ளாளர் பெரியசாமி, தர்மகர்த்தா மதிபாலன், உதவி தலைவர் வடமலையான், காரியதரிசி நாகரத்தினம், இணைத்தலைவர் மதிப்பிர காசம் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி, சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, ராஜபாளையம் வட்டார கல்வி அலுவலர் முத்து ராமலிங்கம், ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரித்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி வன பாதுகாவலர் வேல்மணி நிர்மலா, ராஜபாளையம் வன சரக அலுவலர் சக்திபிரசாத் கதிர்காமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5, 10, 12 ஆகிய வகுப்புகளில் அரசுப் பொதுத்தேர்வில் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களை பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
பின்னர் விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கும் தங்க பதக்கம் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கிய நன்கொடை யாளர்களுக்கும், உறவின்முறை நிர்வாகி களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் உறவின்முறை சார்பில் பொன்னாடை அணி விக்கப்பட்டது.
நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ெதாடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுமதி ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தனர். மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா நிகழ்ச்சிகளை தமிழாசிரியர்கள் லதா, பிச்சாண்டி,சொர்ணலதா கருப்பசாமி தொகுத்து வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் கணேசன், நவநீதகிருஷ்ணன், பேச்சி யம்மாள் செய்திருந்தார்கள்.
முடிவில் நாடார் மேல்நிலைபள்ளி உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
- மாணவி உள்பட 3 பேர் மாயமாகி உள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சின்னபாண்டியம்மாள்(40),கூலித்தொழிலாளி. இவரது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்த சின்னபாண்டியம்மாள் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சின்னபாண்டியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னபாண்டியம்மாள் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மாவுமில் நடத்தி வருகிறார். இவரது மகன் சந்தோஷ்(23). கேட்டரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கல்லாபெட்டியில் இருந்து ஜெயராஜூக்கு தெரியாமல் ரூ.500-ஐ சந்தோஷ் எடுத்துள்ளார். இதனை ஜெயராஜ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சந்தோஷ் வெளியே சென்றார்.
அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெயராஜ் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே உள்ள திம்மாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனி.இவரது மகன் நாகராஜ்(24),கட்டிட தொழிலாளி.கோவையில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நாகராஜை ஊருக்கு வரும்படி சீனி அழைத்துள்ளார். ஊருக்கு வந்த நாகராஜ் சில நாட்கள் வீட்டில் இருந்தார். பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். இதுகுறித்து சீனி அளித்த புகாரின்பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
சிவகாசி
சிவகாசி சிந்துராஜபுரம் தேவி நகர் பகுதியில் பத்மநாபன் என்பவர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது சிவகாசி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை உடனடி யாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சிவகாசி டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி, சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீ சார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வணிகர் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
- கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் விருதுநகர் மேற்கு மாவட்ட கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மே 5-ந் தேதி வணிகர் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது. ராஜபாளையம்-சத்திரப்பட்டி ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விருதுநகர்-செங்கோட்டை ெரயில் பாதை மின்மயமாக்கல் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களை விரைந்து சேர்க்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். இடைத்தேர்தல் ஆதரவு குறித்து ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் போர்க்கொடி தூக்குவதை ஏற்க முடியாது. புகையிலையை உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்க முடியாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து வணிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு இந்த முடிவை அறிவிக்கும் வரை வணிகர்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
புகையிலை விற்பனை தொடர்பாக வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூர் வணிகர் சங்க நிர்வாகிகள் பச்சி வன்னியராஜ், கோமதி சங்கர் குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,116 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
- முதல்வர் முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அந்த வேலைக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது, படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள், வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய 2 தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைந்திருக்கின்றன.
அதன்படி விருது நகர் மாவட்டம் அருப்புக்கோ ட்டை எஸ்.பி.கே. கல்லூரி யில் நடந்த முகாமில் 154 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 2,383 ஆண்கள், 2,715 பெண்கள், 5 திருநங்கைகள், 12 இலங்கை தமிழர்கள், 17 ஆதரவற்ற விதவைகள், 42 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5,174 வேலைநாடுநர்கள் பதிவு செய்து பங்கேற்றனர்.
இதில் 563 ஆண்கள், 550 பெண்கள், 1 திருநங்கை, 2 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,116 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் 2-ம் கட்ட தேர்விற்கு 183 பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கு 64 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் நெல்லை மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) மகாலட்சுமி, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் சாந்தா, பிரியதர்சினி (தொழில்நெறி வழிகாட்டி), கோட்டாட்சியர் கல்யாணகுமார், கல்லூரி செயலாளர் குணசேகரன், தலைவர் ஞானகவுதம பாண்டியன், முதல்வர் முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அழகு நிலையத்தில் பணம் திருட்டு நடந்தது.
- இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சிங்க ராஜா தெருவில் வசிப்பவர் செல்வமீனா. இவர் ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு அவர் வழக்கம்போல் அழகு நிலையத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அழகு நிலை யத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 ஆயிரம், செல்வமீனாவின் தாய், மகளிர் குழுவிடம் இருந்து பெற்று வைத்திருந்த ரூ.10 ஆயிரத்து 600 ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.
இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் செல்வமீனா ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்.
- கடைகள், உணவு நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.
- விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.
விருதுநகர்
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் ஆணையர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமானகுடியரசு தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலா ளர்களிடம் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IV EE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்டவிதிகளை அனுசரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 38 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 24 உணவு நிறுவனங்கள், 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 65 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.
- எடையளவு சட்டத்தின் கீழ் 22 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 - 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
விருதுநகர்
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி, மீன் கடைகள், பழம் மற்றும் காய்கறிக் கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் சிறப்பாய்வு செய்தனர்.
இந்த கூட்டாய்வின் போது எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 3 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறுமுத்திரையி டப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 19 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரை யிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு, 2009-ம் வருட சட்டமுறை எடை யளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 - 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர் முத்து, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் தயாநிதி, உமாமகேஸ்வரன், செல்வராஜ், பாத்திமா, துர்கா, முருகவேல் ஆகியோர் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே சேத்தூர் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பஸ் நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றி னார்கள்.
மேலும் 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சேத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி, நில அளவை யர் காளிமுத்து, போலீஸ் இன்ஸ்ெபக்டர் ஆனந்த குமார், சப்-இன்ஸ்ெபக்டர் பெருமாள்சாமி, சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் நேரடி கண்காணிப்பில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அசோக்குமார், வரிவசூலர் பலராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆக்ரமிப்புகளை அகறற்றும் பணியில் ஈடுபட்டனர்.சேத்தூரில் நீண்ட இடை வெளிக்கு பிறகு கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மெயின் ேராட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- ராஜபாளையத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
- பள்ளி செயலர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம், அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் ராமசுப்பிரமணியராஜா முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி விவே கானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடந்த நாடகப்போட்டியில் முதல்பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் இயக்க மாணவ தொண்டர்கள் நிகழ்த்திய அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா,
என்.கே.ராம்வெங்கட் ராஜா, ராஜவேல்.சிவ குமார், செல்வ அழகு, சங்கிலி விக்ரம், கருத்தாளர் சிவகுமார், பழனியப்பன், ராமசாமி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராஜபாளையம் முடங்கியார்ரோட்டில் பொன்விழா மைதானம் அருகில் உள்ள பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வந்து சென்ற புனித தலமான சுதந்திர தின நினைவு வளைவு கொடிக்கம்பத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றபட்டது.
ராஜுக்கள் கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ராஜபாளையம் தீயணைப்புநிலைய அதிகாரி சீனிவாசன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதற்கான ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.
வைமா கல்விக் குழுமப் பள்ளிகளில் ஒன்றான வைமா வித்யால யாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் கற்பகலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். 3-ம் வகுப்பு மாணவர் ருசித் வசீகரன், 2-ம் வகுப்பு மாணவர் அகிலேஷ் குடியரசு தினம் பற்றி பேசினர். 2-ம் வகுப்பு மாணவர் எழிலின்பன் தேச பக்தி பாடல் பாடினார்.
5-ம் வகுப்பு மாணவி அமிர்தா குடியரசு தின கவிதை வாசித்தார். பிரி.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்தனர். மாணவிகள் நடனம் ஆடினர். விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன்.மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.
ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவில் உள்ள ராமலிங்கவிலாஸ் ஜெயராம் தொடக்க பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை வாசுகி வரவேற்றார்.
பள்ளி செயலர் பால சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 31-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அவருக்கு பள்ளி செயலர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.






