search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,116 பேர் தேர்வு
    X

     தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,116 பேர் தேர்வு

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,116 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • முதல்வர் முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அந்த வேலைக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது, படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

    இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள், வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய 2 தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைந்திருக்கின்றன.

    அதன்படி விருது நகர் மாவட்டம் அருப்புக்கோ ட்டை எஸ்.பி.கே. கல்லூரி யில் நடந்த முகாமில் 154 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 2,383 ஆண்கள், 2,715 பெண்கள், 5 திருநங்கைகள், 12 இலங்கை தமிழர்கள், 17 ஆதரவற்ற விதவைகள், 42 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5,174 வேலைநாடுநர்கள் பதிவு செய்து பங்கேற்றனர்.

    இதில் 563 ஆண்கள், 550 பெண்கள், 1 திருநங்கை, 2 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,116 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் 2-ம் கட்ட தேர்விற்கு 183 பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கு 64 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் நெல்லை மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) மகாலட்சுமி, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் சாந்தா, பிரியதர்சினி (தொழில்நெறி வழிகாட்டி), கோட்டாட்சியர் கல்யாணகுமார், கல்லூரி செயலாளர் குணசேகரன், தலைவர் ஞானகவுதம பாண்டியன், முதல்வர் முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×