என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சொக்கம்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் 30 பேர் மற்றும் மாணவர்கள் 4 பேர் விருதுநகர் வந்தனர்.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்த 30 மாணவிகள் புதுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

    சொக்கம்பட்டியில் இருந்து நேரடியாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மாணவிகள் புதுப்பட்டிக்கு வந்து அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சொக்கம்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் 30 பேர் மற்றும் மாணவர்கள் 4 பேர் விருதுநகர் வந்தனர். அவர்கள் அங்குள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சொக்கம்பட்டியில் இருந்து புதுப்பட்டி அரசு பள்ளிக்கு நேரடியாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதுப்பட்டியில் இருந்து அரசு பஸ்ஸில் செல்லும்போது கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாணவிகள் கோஷமிட்டனர்.

    பின்னர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரியை சந்தித்து மனு அளித்தனர். அவர் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    மாணவிகளின் திடீர் போராட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 632 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்களை கலெக்டர் வழங்கினார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் கை கழுவும் பழக்கத்ைத ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு, கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 11 வட்டாரங்களில் உள்ள 1,504 அங்கன்வாடி மையங்களுக்கும் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்கட்டமாக அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் வட்டாரங்களில் உள்ள 867 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டன.

    மீதமுள்ள ராஜபாளையம் ஊரகப்பகுதிகளில் உள்ள 136 அங்கன்வாடி மையங்க ளுக்கும், ராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் உள்ள 62 அங்கன்வாடி மையங்களுக்கும், சிவகாசி வட்டாரத்தில் உள்ள 181 அங்கன்வாடி மையங்களுக்கும், ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாரத்தில் உள்ள 156 அங்கன்வாடி மையங்களுக்கும், வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ள 102 அங்கன்வாடி மையங்களுக்கும் என மொத்தம் 637 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இதில் அவர் பேசியதாவது:-

    கல்விக்கு நிகராக சுகாதாரமும் முக்கியமான தாகும். கைகளை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்வது குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க எளிய வழியாகும். பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் முக்கியமான நேரங்களில் கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சானிடேஷன் பர்ஸ்ட் தொண்டு நிறுவ னத்துடன் இணைந்து சுகாதார பொருட்களை வழங்குகிறது.

    இந்த சுகாதார பெட்ட கத்தில் சோப்பு திரவம், கட்டி சோப்புகள் மற்றும் சோப்பு காகிதங்கள், கை கழுவும் வழிமுறைகள் கொண்ட ஸ்டிக்கர் உள்ளன. இவை குழந்தைகளிடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்து, சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சானிடேசன் பர்ஸ்ட் நிறுவன தலைமை அலுவலர் பத்மபிரியா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆட்டு குட்டிகளை கொட்டகையில் விட்டு,விட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து பொன்னுசாமியை கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலங்குளத்தில் உள்ள கல்குவாரி அருகே சேதுராஜா என்பவர் ஆட்டு கொட்டகை வைத்துள்ளார். சம்பவத்தன்று ஆட்டு குட்டிகளை கொட்டகையில் விட்டு,விட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.

    சிறிது நேரம் கழித்து ஆட்டு கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டு ஆடுகள் இறந்து கிடப்பதாக சேதுராஜாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் திரும்பி வந்து பார்த்தபோது 24 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி இறந்து கிடந்தன. மேலும் 18 ஆடுகள் தீக்காயத்துடன் அலறியபடி இருந்தன.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தார். அதில் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது70) என்பவர் பீடி குடித்து விட்டு அணைக்காமல் சோளக்காட்டில் தூக்கி எரிந்ததும், இதனால் அங்கு தீப்பிடித்து ஆட்டு கொட்டகைக்கும் பரவியதும், தீயில் கருகி ஆடுகள் இறந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து சேதுராஜா ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பொன்னுசாமியை கைது செய்தனர்.

    • கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி தேங்காய் நந்தனம் தெருவை சேர்ந்தவர் முத்துமணி (வயது43), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (35). இவர்களுக்கு முத்து செல்வி என்ற மகளும், செல்வ பாண்டியன் என்ற மகனும் உள்ளனர்.

    முத்துமணி நேற்று பகலில் வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் இன்று காலை வரை திரும்பி வரவில்லை. இதனால் அவரை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.

    ஆனால் அவர் எங்கு சென்றார்? என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் பாலையம் பட்டியில் தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அருகே உள்ள செல்வம் என்பவரது தோட்டத்து கிணற்றில் ஒருவர் இன்று காலை பிணமாக மிதந்தார்.

    அதனை பார்த்த தோட்ட உரிமையாளர் செல்வம், அதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அருப்புக்கோட்டை நகர் போலீசார் வந்தனர். அவர்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த உடலை மீட்டனர்.

    அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்துக்கொன்று கிணற்றுக்குள் உடலை வீசிச்சென்றுள்ளனர். கொன்று வீசப்பட்ட அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்று மாயமான கட்டிட தொழிலாளி முத்துமணி என்பது தெரியவந்தது.

    அவரை யார், எதற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. அவர் பிணமாக கிடந்த கிணற்றின் அருகே ரத்தக்கறை படிந்த பால் கேன் கிடந்தது. மேலும் முத்துமணியின் கழுத்தில் கத்தியால் வெட்டிய காயமும் இருந்தது.

    ஆகவே கொலையாளிகள் அவரை கத்தியால் கழுத்தை அறுத்தும், பால் கேனால் தலையில் அடித்தும் கொடூரமாக கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் முத்துமணி பிணமாக கிடந்த கிணறு, தோட்டத்தில் உள்ள மோட்டார் அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு துப்பு துலக்கினர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. முத்துமணி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதனைத்தொடர்ந்து முத்துமணி உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கொலை குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமல்ராணி மற்றும் அவரது கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கருப்பசாமி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
    • விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கருப்பசாமி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள வீட்டில் விபசாரம் நடந்தது தெரியவந்தது. அங்கிருந்த 30 வயதுடைய பெண்ணை போலீசார் மீட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் விபசாரம் செய்தது பாத்திமாநகரை சேர்ந்த சந்திரசேகரன் (வயது42), அவரது மனைவி அமல்ராணி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விபசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அமல்ராணி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணைத்தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமல்ராணி மற்றும் அவரது கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கருப்பசாமி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜபாளையத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மெகா கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் பயனாளிகளுக்கு ஏற்ற கண் கண்ணாடி இல்லாதவர்களுக்கு ஆர்டர் செய்து அடுத்த வாரத்தில் கண்ணாடி வழங்கப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை (மார்ச் – 1) முன்னிட்டு ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் ராஜபாளையம் தொகுதி தி.மு.க., அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச மெகா கண் சிகிச்சை முகாம் மற்றும் 2 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

    இந்த முகாமை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து ஏழை, எளிய பயனாளிகள் அனைவருக்கும் இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

    இந்த நிகழ்வில் எம்.எல்.ஏ. பேசுகையில், ஏழை, எளிய மக்களுக்கு கண்ணொளி திட்டத்தை தந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் வழியில் செயல்பட்டுவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் 4-வது நிகழ்ச்சியாக கண் சிகிச்சை முகாம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது.

    இனிவரும் காலங்களில் முதல்வரின் பிறந்த நாளையொட்டி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்து மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படும்.

    இந்த முகாமில் பயனாளிகளுக்கு ஏற்ற கண் கண்ணாடி இல்லாதவர்களுக்கு ஆர்டர் செய்து அடுத்த வாரத்தில் கண்ணாடி வழங்கப்படும் என்றார். நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் விபசாரம் நடத்திய அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்டார்.
    • கருப்பசாமி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கருப்பசாமி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள வீட்டில் விபசாரம் நடந்தது தெரியவந்தது. அங்கிருந்த 30 வயதுடைய பெண்ணை போலீசார் மீட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் விபசாரம் செய்தது பாத்திமா நகரை சேர்ந்த சந்திரசேகரன் (வயது42), அவரது மனைவி அமல்ராணி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விபசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அமல்ராணி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணைத்தலைவியாக உள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

    அமல்ராணி மற்றும் அவரது கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கருப்பசாமி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி கண வருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    • கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 22-வது விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் பால முருகன் வரவேற்றார். தேசியக் கொடியை சிறப்பு விருந்தினர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவும், ஒலிம்பிக் கொடியை மற்றொரு சிறப்பு விருந்தினர்-விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறனும், கல்லூரிக் கொடியை கல்லூரிச் செயலர் அ.பா.செல்வராசனும் ஏற்றினர்.

    தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது. இளநிலை தகவல் தொழில்நுட்பவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் அபிஷேக் விளையாட்டு விழாவுக்கான உறுதிமொழி வாசித்தார்.

    100மீட்டர், 400மீட்டர் ஓட்டம், மாணவர் நடனம். மாணவிகளின் சிலம்பம். பிரமிடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் யோகசுவரன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சென்னையை சேர்ந்த சர்வதேச 2-வது கிராண்ட் மாஸ்டர் குகேசின் பயிற்றுநர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.அவர் ேபசுகையில், ஒழுக்கம், காலம் தவறாமை ஆகிய 2-ம் வெற்றி பெறுவதற்கான வழிகள். மனதை எப்பொ ழுதும் அமைதியான சூழலில் வைத்திருக்க வேண்டும். எதற்கும் பதற்றப்படக் கூடாது.

    நம்முடைய எதிரிகள் மூலமே நமக்கு வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆகவே அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.மற்றொரு சிறப்பு விருந்தினரான விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் ராஜேந்திரன் மணி அணியும் பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி மந்தனா அணியும் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்று முதல் இடத்தைப் பிடித்தன.

    உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் புனிதவதி நன்றி கூறினார்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சிறப்புச்சொற்பொழிவு நடந்தது.
    • இதில் சினிமா டைரக்டர் கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

    சிவகாசி

    சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர்ஓர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் திரைப்பட விமர்சன அமைப்பு ஆங்கிலத்துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் முதுகலை தமிழாய்வுத்துறை இணைத்து ''புழதிக்காட்டு வேலிகள்'' என்ற தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவை நடத்தியது.

    முதல்வர் பழனீசுவரி தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறைத்தலைவரும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான சோபனாதேவி வரவேற்றார். திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழின் மேல் கொண்ட அதீத அன்பினால் நான் ''பாமர இலக்கியம்'' என்ற புத்தகத்தை படைத்ததாகப் குறிப்பிட்டார்.

    பெண் உயிரூட்டி, உணர்வூட்டி அரவணைத்துச் செல்லும் பெருங்கொடையானவள். பெண்கள் ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்திராகாந்தி, நிர்மலா சீத்தாராமன் போன்றவர்களை போல் திறமையாக செயல்பட்டு பெண் இனத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    மாணவிகளின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். தமிழ்த்துறை தலைவரும், மற்றொரு ஒருங்கிணைப்பாளருமான பொன்னி நன்றி கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை சினிமா விமர்சன குழு உறுப்பினர்களும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களும், தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    முதல்வர் செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். மாரிச்சாமி, கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் பிச்சிப்பூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) சிறப்பு அணிவகுப்பு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேசிய மாணவர் படையின் வருடாந்திர பயிற்சி முகாமில் சிறந்த செயல்திறன் அடிப்படையில் 4-ம் ஆண்டு மாணவர் அபினாசுக்கு ''கேடட் அண்டர் ஆபீசர்'' என்ற ''ரேங்'' வழங்கப்பட்டது.

    4-ம் ஆண்டு எந்திரவியல் துறை மாணவர் அருணுக்கு கம்பெனி குவாட்டர் மாஸ்டர் சார்ஜென்ட் என்ற ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர் ராஜ்குமார், 2-ம் ஆண்டு மாணவர் கார்த்திக் ஆகியோருக்கு சார்ஜென்ட் ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர்களான பாலமுரளி, மனோஜ், சங்கவி ஆகியோருக்கு ''கார்பொரல்'' ரேங்கும் வழங்கப்பட்டது.

    கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் 4-ம் ஆண்டு மாணவர் சிவ சுப்பிரமணியன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரி நிர்வாகம், கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் மாதவன், உடற்கல்வி துறை இயக்குநர் சுந்தமூர்்த்தி மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • அருப்புக்கோட்டை அருகே வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி-மூதாட்டி பலியாகினர்.
    • இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தும்மு சின்னம்ப ட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் இளையராஜா (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மதியம் இவர் மோட்டார் சைக்கிளில் காளையார் கரிசல்குளத்தில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு புறப்பட்டார்.

    கரிசல்குளம் தொழிற்பயிற்சி கூடம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையா ளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இளைய ராஜா தூக்கி வீசப்பட்டார்.

    படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் பெத்தனாட்சி நகரை சேர்ந்தவர் மாத வன். இவரது மனைவி பரமேஸ்வரி (66). இவர் சம்பவத்தன்று மதுரை ரோட்டில் உள்ள போக்கு வரத்து பணிமனை முன்பு கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார்பரமேஸ்வரி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். பாண்டியன் நகர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • போலீஸ்காரர் மனைவி-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
    • இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே உள்ள சேதுநாராய ணபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது சேலத்தை சேர்ந்த போலீஸ்காரர் சந்தோஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்கள் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் சேதுநாராயணபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். வத்திரா யிருப்பு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி

    சிவகாசி அருகே உள்ள போதுரெட்டியபட்டியை சேர்ந்த 20 வயதுடைய மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின்பேரில் மாரநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண்

    திருச்சுழி சேதுபுரத்தை சேர்ந்தவர் லதா. இவரது மகள் கற்பகவள்ளி. இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததால் குடும்பத்தினர் கண்டித்தனர்.

    இதனால் விரக்தியடைந்த கற்பகவள்ளி திடீரென மாயமானார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மகளுடன் மாயம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மா பட்டியை சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவரது மனைவி நாகரத்தினம். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று நாகரத்தினம் தனது மகளுடன் மாய மானார்.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×