என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mega Eye Treatment Camp"

    • ராஜபாளையத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மெகா கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் பயனாளிகளுக்கு ஏற்ற கண் கண்ணாடி இல்லாதவர்களுக்கு ஆர்டர் செய்து அடுத்த வாரத்தில் கண்ணாடி வழங்கப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை (மார்ச் – 1) முன்னிட்டு ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் ராஜபாளையம் தொகுதி தி.மு.க., அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச மெகா கண் சிகிச்சை முகாம் மற்றும் 2 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

    இந்த முகாமை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து ஏழை, எளிய பயனாளிகள் அனைவருக்கும் இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

    இந்த நிகழ்வில் எம்.எல்.ஏ. பேசுகையில், ஏழை, எளிய மக்களுக்கு கண்ணொளி திட்டத்தை தந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் வழியில் செயல்பட்டுவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் 4-வது நிகழ்ச்சியாக கண் சிகிச்சை முகாம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது.

    இனிவரும் காலங்களில் முதல்வரின் பிறந்த நாளையொட்டி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்து மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படும்.

    இந்த முகாமில் பயனாளிகளுக்கு ஏற்ற கண் கண்ணாடி இல்லாதவர்களுக்கு ஆர்டர் செய்து அடுத்த வாரத்தில் கண்ணாடி வழங்கப்படும் என்றார். நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×