மாணவி உள்பட 3 பேர் மாயம்

மாணவி உள்பட 3 பேர் மாயமாகி உள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாணவி உள்பட 3 பேர் மாயம்
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சின்னபாண்டியம்மாள்(40),கூலித்தொழிலாளி. இவரது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்த சின்னபாண்டியம்மாள் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சின்னபாண்டியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னபாண்டியம்மாள் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மாவுமில் நடத்தி வருகிறார். இவரது மகன் சந்தோஷ்(23). கேட்டரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கல்லாபெட்டியில் இருந்து ஜெயராஜூக்கு தெரியாமல் ரூ.500-ஐ சந்தோஷ் எடுத்துள்ளார். இதனை ஜெயராஜ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சந்தோஷ் வெளியே சென்றார்.

அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெயராஜ் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரியாபட்டி அருகே உள்ள திம்மாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனி.இவரது மகன் நாகராஜ்(24),கட்டிட தொழிலாளி.கோவையில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நாகராஜை ஊருக்கு வரும்படி சீனி அழைத்துள்ளார். ஊருக்கு வந்த நாகராஜ் சில நாட்கள் வீட்டில் இருந்தார். பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். இதுகுறித்து சீனி அளித்த புகாரின்பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com