search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B.S.R."

    • பி.எஸ்.ஆர். அலுமினி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியது
    • இந்த போட்டி பல சுற்றுகளாக முறையே கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி என்ற சுற்றுகளாக நடைபெறுகிறது.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்..கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான முதலாமாண்டு ''பி.எஸ்.ஆர். அலுமினி கோப்பை- 2023'' கிரிக்கெட் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் சுந்தர்ராஜன், கல்லூரி அகாடமிக் இயக்குநர் கோபால்சாமி, உடற்கல்வித்துறை தலைவர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த போட்டியானது கல்லூரிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் ஆகியோருக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் பி.எஸ்.ஆர். அலுமினி அணி, பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கலைக்கல்லூரி, சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரி கிரிக்கெட் அணிகள் உள்பட 28 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டி பல சுற்றுகளாக முறையே கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி என்ற சுற்றுகளாக நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் ெவற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-ம் பரிசாக 5 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-ம் பரிசாக பெறும்வற்கு ரூ.4 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், உடற்கல்வித்துறை இயக்குநர் சுந்தரமுர்த்தி, பேராசியர்கள் ரமேஷ், செந்தில்குமார், ராதா மற்றும் இதர பேராசிரியர்கள் இணைந்து செய்துள்ளனர்.

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

    சிவகாசி

    மத்திய அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு இணைந்து ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022'' என்ற தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மென்பொருள் தொழில்நுட்ப போட்டி சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 2 நாட்கள் நடந்தது.

    காணொலி காட்சி மூலம் நடந்த தொடக்கவிழாவில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்,ஏ.ஐ.சி.டி.இ.சேர்மன் பேராசிரியர் அனில் சகஸ்ரபுதே, மத்திய கல்வி அமைச்சரக செயலாளர் சஞ்சய்மூர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ. துணைத்தலைவர் பேராசிரியர் பூனியா, பெர்சிஸ்டன்ட் சிஸ்டம் நிறுவனர் ஆனந்த் தேஷ் பாண்டே, மத்திய கல்வி அமைச்சரக செயலாளர் மோனிகா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரி உள்பட நாடு முழுவதும் 75 அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் இந்த இறுதி சுற்று திறன்களை அறியும் இறுதி போட்டி நடைபெறுகிறது. பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். ஆர்த்தி ஸ்கேன்ஸ் இயக்குநர் அருண்குமார், கல்லூரியின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தனர்.

    முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். இதில் மத்திய கல்வி அமைச்சரகத்தை சேர்ந்த, ஏ.ஐ.சி.டி.இ.-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மைய தலைவர் உத்யன் மவுரியா, ஐ.சி.டி.அகாடமியின் தமிழ்நாடு கிளை தலைவர் பூர்ணபிரகாஷ், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் பிரதிநிதி சோம சுந்தரம், புராடக்ட் டிசைனர் தாமரைக்கண்ணன், ஹேக்கத்தான் அலுமினி, டீன் மாரிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இறுதி சுற்றில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×