என் மலர்
விருதுநகர்
- கடந்த சில வாரங்களாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.
- அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சியில் உள்ள வார்டுகளுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
24-வது வார்டு மற்றும் 13-வது வார்டு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.
அதற்கு பதிலாக நிலத்தடி நீரை வினியோகம் செய்வதாகவும், இதனால் அதனை குடிக்கவும், சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
முற்றுகை
இதை கண்டித்தும், தாமிரபரணி கூட்டுக்குடி நீரை வினியோகம் செய்ய வலியுறுத்தியும் இன்று 24,13-வது வார்டு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- வெள்ளப்பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் வீட்டினை கண்டுபிடித்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தனர்.
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அதனை கலெக்டர் ஜெயசீலன் விசாலினியிடம் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகரை சேர்ந்த நரேஷ்குமார் மற்றும் சித்ரகலா தம்பதியின் மகள் விஷாலினி ஐதராபாத்தில் உள்ள அத்தாப்பூர் டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸில் படித்து வருகிறார்.
இவர் வெள்ளப் பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் பொருட்டு வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் வீட்டினை கண்டுபிடித்துள்ளார்.
இந்த சாதனம் மனித உயிரை குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், செல்ல பிராணிகள், முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற நபர்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை காப்பாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லெக்டர் அலுவலகத்தில் பிரதமர் "பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்" விருது மற்றும் ரூ.1லட்சம் பரிசுத்தொ கையாக காணொலி காட்சி மூலம் விசாலினிக்கு வழங்கினார்.
அதனை த்தொடர்ந்து மத்திய அரசின் மூலம் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதிற்கான பதக்கம், கைகடிகாரம், டேப் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் விருதிற்கான சான்றிதழ் மத்திய அரசின் மூலம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப ப்பட்டு அதனை கலெக்டர் ஜெயசீலன் விசாலினியிடம் வழங்கினார்.
- மாணவர் கார்த்திக் இறந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரி இளவரசி புகார் அளித்தார்.
- இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்தவர் காளையப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 19). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த வாரம் கார்த்திக்குக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர்களது ஊர் விருதுநகர் மாவட்டத்தின் அருகில் இருக்கிறது. இதனால் கார்த்திக்கை அவரது குடும்பத்தினர், ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை அந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.
நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அறுவை சிகிச்சை அறையில் இருந்து தீவிர சிகிச்சை வார்டுக்கு மாற்றுவதற்காக கார்த்திக்கை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவர் அசைவின்றி படுத்திருப்பதை பார்த்து அவரது சகோதரி இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி கேட்டபோது, மயக்க நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் சகோதரி மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையளித்ததால் அவர் இறந்ததாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மாணவர் இறந்த ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு கார்த்திக்கின் உடலை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவர் கார்த்திக் இறந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரி இளவரசி புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மது போதையில் மோதல்; 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- அவர்களை தாக்கிய 6 பேரை தேடி வருகிறார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் கீழ் உள்ள அறையில் விருதுநகர் கண்மாய்பட்டியை சேர்ந்த அஜய்(வயது23) சந்துரு(30) உள்பட 7 பேர் தங்கி பெயிண்டிங் பணிகளை செய்து வருகின்றனர்.
சம்பவத்தன்று அஜய், சந்துரு இருவரும் இரவு சாப்பாடு மற்றும் மது வாங்கி கொண்டு தொட்டியின் எதிரில் உள்ள பொட்டல் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர்.
அங்கு ஏற்கனவே ராஜ பாளையத்தை சேர்ந்த சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருத ரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதையடுத்து பெயிண்டர்கள் இருவரும் தப்பி தொட்டி அறைக்குள் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் எதிர் தரப்பினர் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு காவலாளி வேகமாக வந்துள்ளனர். அவரை பார்த்ததும் தாக்கியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து அஜய் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து அவர்களை தாக்கிய 6 பேரை தேடி வருகிறார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது.
- பட்ஜெட் 2023 ஒரு பார்வை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் ''பட்ஜெட் 2023 ஒரு பார்வை'' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது. சாத்தூர் ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சுந்தர்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதலாமாண்டு மாணவி ஜெயராசாத்தி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், அமிர்த காலத்திற்கான பார்வை என்றால் என்ன? விவசாயத்திற்கும், கூட்டுறவு நிறுவனங்களுக்கான சலுகைகள் பற்றியும், ஆரோக்கியம், கல்வி, திறன்மேம்பாடு, உள் கட்டமைப்பு வசதிகள் பற்றியும், முதலீடுகள் மீதான சலுகைகள், நிதி மேலாண்மை பற்றியும், நேரடி வரிகள் பற்றியும், வருவாய் இனங்கள் மற்றும் செலவினங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
முடிவில் முதலாம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளையும் உதவிப்பேராசிரியர் ராஜீவ்காந்தி செய்திருந்தார். இதில் 108 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
- பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
- தாளாளர் ஆர்.சோலைசாமி, அட்வான்டேஜ் மேலாளர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சிவகாசி
அமெரிக்காவின் பன்னாட்டு ஐ.டி. நிறுவ னமான ரெட்ஹாட் நிறுவனம் இந்தியாவில் ரெட்ஹாட் லினகஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் திறமை சாலியான மாணவர்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூ ரியின் அசோசி யேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி அமைப்பின் மூலமாக ரெட்ஹாட் நிறுவ னத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி சென்னை, அட்வான்டேஜ் மேலாளர் சுகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தென் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ரெட்ஹாட் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்குரிய மையமாக பி.எஸ்.ஆர். கல்லூரி திகழும் என்பது குறிப்பிடத்தக்து.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண் குமார், கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராம திலகம், பேராசிரியர் பால சுப்பிரமணியன், பயிற்சியாளர்கள் மகேஷ்வரன், வசந்தகுமார் (அட்வான் டேஜ் புரோ) மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது38). இவர் 7 வயது பேரனுடன் தெப்பம் கிழக்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். இவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துத்தருமாறு கூறினார். அப்போது பேரன் வாந்தி எடுத்துள்ளார். அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு பேரனை வெளியே அழைத்துச்சென்றார். ஏ.டி.எம். கார்டை திரும்ப பெற மறந்து விட்டார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்டதாக 2 முறை குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து செல்லம்மாள் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது பல தவணைகளில் ரூ.41 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் செல்லம்மாள் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருப்புக்கோட்டையில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமார் மற்றும் மூர்த்தியை கைது செய்தனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை பெரியார் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கம்(வயது 35), ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று பணியை முடித்துவிட்டு தங்கம் ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் அருகே வந்தபோது, அருப்புக் கோட்டை கலைஞர் நகரை சேர்ந்த உதயகுமார்(30) மற்றும் அவரது தந்தை மூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனம் தங்கத்தின் ஆட்டோ மீது மோதியது. இதனால் தங்கம் அவர்களிடம் ஏன் இப்படி வந்து மோதினீர்கள்? என கேட்டுள்ளார். அப்போது அவர் களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உதய குமார் மற்றும் மூர்த்தி தங்கத்தை தாக்கி அரிவாளால் வெட்டி யுள்ளனர். இதனை பார்த்து தடுக்க வந்த தங்கத்தின் தந்தை சுப்பிரமணிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
மேலும் தங்கம் மற்றும் சுப்பிரமணியை உதய குமார் மற்றும் மூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயகுமார் மற்றும் மூர்த்தியை கைது செய்தனர்.
- மகா சிவராத்திரியை முன்னிட்டு நீலகண்ட ஈஸ்வரன் அவதாரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார்.
- மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-மதுரை ரோட்டில் வரலாற்று சிறப்பு மிக்க பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி ஆலய வளாகத்தில் ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு மகாசிவராத்திரியையொட்டி அஷ்ட வரத ஆஞ்சநேயரின் விருப்பத்திற்கு இணங்க அவருடைய தோற்றத்தை சிவபெ ருமானுக்கே அர்ப்பணித்துக் கொண்டு சிவனாகவே காட்சியளித்த நீலகண்ட ஈஸ்வரனின் அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு முழுவதும் சிவலாயங்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு சிவன் அவதாரத்தில் சிவராத்திரி பூஜைகள் விடியவிடிய நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சுவடியில் பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது.
- தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையில் தொல் ஆவணங்கள் பட்டய வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு "சுவடியியல்" பயிற்சிப்பட்டறை நடந்தது. முதல்வர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் பொன்னி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். மதுரை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் மருதுபாண்டியன் "சுவடி - ஓர் அறிமுகம், சுவடிப்பதிப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதுரை, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு ஆய்வாளர். உதயகுமார் "சுவடி அழிவிற்கான காரணங்கள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பூங்கோதை, நன்றி கூறினார். இதில் தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறை சார்பில் வணிகத்தில் சமீபத்திய கணினி தொழில்நுட்ப பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ செளடாம்பிகா பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் இரண்டாமாண்டு மாணவி பத்மகலா அனைவரையும் வரவேறறார். முதல்வர் பாலமுருகன் பேசுகையில் மாணவர்களின் போட்டியிடும் திறனை வளப்படுத்த இத்தகைய கருத்தரங்குகள் அவசியம் என்றார்.
சிறப்பு விருந்தினர் முத்துக்குமார் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகளை சுட்டிக்காட்டினார். மேலும் நிலையான வளர்ச்சிக்கு கணினி சார்ந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். நிறைவாக, இரண்டாமாண்டு மாணவி அபிலட்சுமி நன்றி கூறினார். துறை தலைவர் நளாயினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார். இந்தக் கருத்தரங்கில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறையைச் சேர்ந்த 238 மாணவிகள் கலந்துகொண்டனர்.
- வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கி வந்தார்கள்.
- 60 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி 61-வது வருடமாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெருவில் உள்ளது பத்திரகாளியம்மன் கோவில். இங்கு கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது .
இதில் மகா சிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற சுமார் 90 வயது பாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இதற்கு முன்பு, வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கி வந்தார்கள்.
தொடர்ந்து முத்தம்மாள் பாட்டி கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறார். இதில் 40 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்து பின்னர் வெறும் கையில் அப்பம் சுடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும்.
முன்னதாக பாசிப்பயறு, தட்டாம் பயறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் வைத்து இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டையை பெண்கள் நேர்த்தி கடனாக தயார் செய்து கொடுக்கின்றனர்.
கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி 61-வது வருடமாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காகவும், மகா சிவராத்திரி வழிபாடு செய்வதற்காகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.






