search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் அசோசியேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி அமைப்பின் மூலமாக ரெட்ஹாட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

    பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • தாளாளர் ஆர்.சோலைசாமி, அட்வான்டேஜ் மேலாளர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சிவகாசி

    அமெரிக்காவின் பன்னாட்டு ஐ.டி. நிறுவ னமான ரெட்ஹாட் நிறுவனம் இந்தியாவில் ரெட்ஹாட் லினகஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் திறமை சாலியான மாணவர்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூ ரியின் அசோசி யேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி அமைப்பின் மூலமாக ரெட்ஹாட் நிறுவ னத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி சென்னை, அட்வான்டேஜ் மேலாளர் சுகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தென் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ரெட்ஹாட் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்குரிய மையமாக பி.எஸ்.ஆர். கல்லூரி திகழும் என்பது குறிப்பிடத்தக்து.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண் குமார், கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராம திலகம், பேராசிரியர் பால சுப்பிரமணியன், பயிற்சியாளர்கள் மகேஷ்வரன், வசந்தகுமார் (அட்வான் டேஜ் புரோ) மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×