என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
  X

  தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அருப்புக்கோட்டையில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமார் மற்றும் மூர்த்தியை கைது செய்தனர்.

  விருதுநகர்

  அருப்புக்கோட்டை பெரியார் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கம்(வயது 35), ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று பணியை முடித்துவிட்டு தங்கம் ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார்.

  வீட்டின் அருகே வந்தபோது, அருப்புக் கோட்டை கலைஞர் நகரை சேர்ந்த உதயகுமார்(30) மற்றும் அவரது தந்தை மூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனம் தங்கத்தின் ஆட்டோ மீது மோதியது. இதனால் தங்கம் அவர்களிடம் ஏன் இப்படி வந்து மோதினீர்கள்? என கேட்டுள்ளார். அப்போது அவர் களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உதய குமார் மற்றும் மூர்த்தி தங்கத்தை தாக்கி அரிவாளால் வெட்டி யுள்ளனர். இதனை பார்த்து தடுக்க வந்த தங்கத்தின் தந்தை சுப்பிரமணிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

  மேலும் தங்கம் மற்றும் சுப்பிரமணியை உதய குமார் மற்றும் மூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயகுமார் மற்றும் மூர்த்தியை கைது செய்தனர்.

  Next Story
  ×