ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் திருட்டு

ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் திருட்டு
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது38). இவர் 7 வயது பேரனுடன் தெப்பம் கிழக்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். இவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துத்தருமாறு கூறினார். அப்போது பேரன் வாந்தி எடுத்துள்ளார். அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு பேரனை வெளியே அழைத்துச்சென்றார். ஏ.டி.எம். கார்டை திரும்ப பெற மறந்து விட்டார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்டதாக 2 முறை குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து செல்லம்மாள் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது பல தவணைகளில் ரூ.41 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் செல்லம்மாள் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com