என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
    • உதவிப் பேராசிரியர் கார்த்திக் பிரபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு சொற்பொழிவு மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். 3-ம் ஆண்டு மாணவி ஷர்மிளா வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் குமரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் இயற்பியல் துறை தலைவர் ஆசாத் பகதூர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மின் தேக்கிகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி, கட்டுரைப் போட்டி, வாய்மொழி விளக்கக் காட்சி, பழைய பொருட்களிலிருந்து கலை மற்றும் வண்ணக் கோலங்கள் உருவாக்குதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாலமுருகன் பரிசுகளை வழங்கினார். இரண்டாமாண்டு மாணவி கார்த்திகா நன்றிகூறினார்.

    உதவிப் பேராசிரியர் கார்த்திக் பிரபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஊராட்சி மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி விழுப்பனூர் ஊராட்சி கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், பிள்ளை யார்நத்தம் ஊராட்சி அண்ணாநகர் கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு தொடர்பான பணியையும் ஆய்வு செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வேளா ண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திருப்பாற்கடல் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2020-21-ன் கீழ், ரூ.107 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி உட்புறம் கான்கிரீட் அமைத்து குளத்தை சுற்றிலும் நடை பாதை மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதையும், மடவார் வளாகத்தில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில் நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    படிகாசுவைத்தான்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில், விவசாயிகள் பயிற்சி மைய வளாகத்தில் 5 ஆயிரம் முசுக்கொட்டை மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும் கலெக்டர் ஜெய்சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார். ராஜபாளையம் அரசு மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகர்நல அலுவலர் கவிபிரியா, நகராட்சி மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, ராஜபாளையம் அரசு தலைமை மருத்துவர் மாரியப்பன், சந்திரா, நகராட்சி செயற்பொ றியாளர் தங்கபாண்டியன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் தர்ணா பேராட்டம் நடத்தினர்.
    • சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். அவர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை, ஆசிரியர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டு, டீ கிளாஸ், கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை கட்டாயப்படுத்தியதாகவும், அவ்வாறு செய்யாத மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு செய்ய மறுத்த 8-ம் வகுப்பு மாணவியை முட்டி போடச்சொல்லி தண்டனை அளித்ததாக கூறி அதனை கண்டித்து நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

    • குழந்தைகள் காப்பகத்திற்கு காளீஸ்வரி கல்லூரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இளங்கலை 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் 56 பேரும் பணியாற்றினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீ ஸ்வரி கல்லூரி ஆங்கில த்துறையின் விரிவாக்கப்பணி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பிலுள்ள வள்ளலார் இல்லம்- குழந்தைகள் காப்பகத்தில் விரிவாக்கப்பணியை மேற்கொண்டனர்.

    இதன் ஒரு பகுதியாக ''சிறப்பு மதிய உணவு'' காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஆங்கில புலமையை மேம்படுத்தும் வகையில் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் நடத்தி, வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    மேலும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான எழுதுபொருட்கள், பென்சில் டப்பாக்கள், நோட்டுப் புத்தகங்கள். பென்சில்கள், ரப்பர்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்கள், பலசரக்கு பொருட்களான அரிசி, துவரம் பருப்பு மற்றும் முதலுதவிப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

    இந்த விரிவாக்கப் பணியில் இளங்கலை 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் 56 பேரும் பணியாற்றினர். இந்த விரிவாக்கப்பணியின் மூலம் மாணவர்களுக்கு சமுதாயத்திலுள்ள பின்தங்கிய குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் தேவைகள் குறித்து விழிப்புணர்வு கிடைத்தது.

    ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் சாந்தி, அர்ச்சனாதேவி மற்றும் வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வை வழி நடத்தினர்.

    • முதியவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வலையப்பட்டி கோட்டூரை சேர்ந்தவர் சதுரகிரி (வயது70). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாதந்தோறும் சென்று சதுரகிரி மாத்திரைகளை வாங்கி வந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த உற வினர்கள் அவரை தேடி ப்பார்த்தனர். அப்போது விருதுநகர் பழைய ரெயில்வே காலனி பிளாட்பாரத்தில் சதுரகிரி இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டில் இருந்தது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(57). குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த இவர் சம்பவத்தன்று விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.

    ராஜபாளையம்

    சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜ பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா சத்திரப்பட்டி நடுத்தெருவில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிழக்கு ஒன்றியசெயலாளரும், கூட்டுறவு வங்கி தலை வருமான குறிச்சியார்பட்டி மாரியப்பன் வரவேற்று பேசினார். கிளைக் கழகச்செயலாளரும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான முருகபூபதி, சத்திரப்பட்டி கிளை செயலாளரும், ஒன்றிய அவைத்தலைவருமான முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான மா.பா.க.பாண்டியராஜன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தலைமைக்கழக பேச்சா ளர்கள் சவுண்ட் சரவணன், மதுரை முத்தரசு, சரவெடி சம்சுகனி பேசினர்.

    கூட்டத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் சண்முக கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மேற்குஒன்றிய செயலாளர் மணிகண்டன், மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணபதியாபுரம் கிளை செயலாளரும், ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான சேகர் மற்றும் லட்சுமணன், முத்து கணபதி நன்றி கூறினர். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.

    • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு திருத்தங்கலை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் மரத்தடியில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து எம்.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து போர்மேன் இளங்கோவனை கைது செய்தார்.

    திருத்தங்கல் பாண்டியன் நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பள்ளி அருகே உள்ள பட்டாசு ஆலையில் திறந்த வெளியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஃபோர்மேன் கணேசனை கைது செய்தனர்.

    சேதுராமலிங்காபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள கோழிப்பண்ணை பகுதியில் உள்ள தகரசெட்டில் அந்தோணிராஜ்(55), அக்கினிராஜ் (26) ஆகியோர் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அங்கிருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
    • கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 116 கிராம உதவியாளர்க ளுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெய சீலன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கிராம உதவி யாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    அவர்களுக்கான அடிப்ப டை பயிற்சி வகுப்பு இன்று தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு நடைபெறும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் 3 நாட்கள் ஒருங்கிணைப்பு பயிற்சியும், 27 நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் பல்வேறு அலுவலர்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பில் கிராம உதவியாளர்களின் பணிகள், வருவாய்த்துறை யின் கிராம அளவிலான திட்டங்களை செயல் படுத்துதல், கிராம நிர்வாக அலுவலருக்கு உதவி செய்தல், கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு தொ டர்பாக பிரச்சனைகளை ஆரம்ப கால கட்டங்களின் கண்டறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தல், கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பினை கிராம உதவியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கிராமங்க ளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர்(பொது) சிவகுமார், 116 கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமசாமி ராஜா பாலிடெக்னிக்கில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
    • ஏற்பாடுகளை மின்னியல் பேராசிரியர் வேல்முருகன், மெக்கானிக்கல் துறைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம், இந்திய பொறியாளர்கள் அமைப்பு இணைந்து பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்தியது. இதில் 25 பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்று கட்டுரையை சமர்ப்பித்தனர். ெதாடக்க விழாவில் பி.ஏ.சி.ஆர். கல்வி அறக்கட்டளை தலைமை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ், முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். நிறைவு விழாவில் மதுரை பிரிவு பொறியாளர்கள் அமைப்பை சேர்ந்த ராஜயோகன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

    சிவில் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, மெக்கானிக்கல் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் நடந்த போட்டியில் முதல் பரிசு விருதுநகர் வி.எஸ்.வின் பாலிடெக்னிக் கல்லூரி, 2-ம் பரிசு மீனாட்சியாபுரம் அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மாணவ-மாணவிகள் பெற்றனர். விழா ஏற்பாடுகளை மின்னியல் பேராசிரியர் வேல்முருகன், மெக்கானிக்கல் துறைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை ஆட்சி மன்ற குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

    • வேளாங்கண்ணி-எர்ணாகுளம் ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நின்று செல்ல வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை வைத்துள்ளனர்.
    • தொழில்துறை பிரிவு மாவட்ட துணை தலைவர் வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ரெயில் பயணிகளுக்கான வசதிகள் குழுவினர் 3 நாட்கள் மதுரை கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் ஆய்வு பணியில் ஈடுபட்ட னர். ரெயில் பயணிகள் வசதிகள் குழு உறுப்பினர்க ளான ரவிசந்திரன், மதுசுதானா, கோட்டளா உமாராணி, அபிஜித் தாஸ் உள்ளிட்டோர் விருதுநகர், ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் ''ஒரு நிலையம் ஒரு பொருள்'' திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள பால்கோவா விற்பனை நிலையம், மாற்று திறனாளி களுக்கான சுகாதார வளாகம், நடைமேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.அப்போது ரெயில் பயணிகள் சேவை குழு உறுப்பினர்களிடம், சென்னை-கொல்லம் ரெயில் சிவகாசியிலும், வேளாங்கண்ணி- எர்ணாகுளம் ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நின்று செல்ல வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் 22 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நடைமேடை உள்ளதால் 24 பெட்டிகள் கொண்ட பொதிகை விரைவு ரெயிலில் ஏறுவதற்கு பயணிகள் சிரமப்படுகின்றனர்.

    அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை மேடையை விரிவாக்கம் செய்து முதல் வகுப்பு ஓய்வு அறை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க. தொழில்துறை பிரிவு மாவட்ட துணை தலைவர் வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடந்தது.
    • தமிழியல் துறைத்தலைவர் அமுதா மற்றும் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து 2 நாட்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், தலைசிறந்த புதினங்கள், கவிதைகள், கதைகள் தொடர்பான புத்தகங்கள், திறனாய்வுப் புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், இலக்கியம், இலக்கணம் தொடர்பான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள், ஆங்கிலம், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பிற துறை சார்ந்த புத்தகங்கள், பயண நூல்கள் உள்ளிட்ட எண்ணற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவையான நூல்களை வாங்கிப் பயனடைந்தனர். தமிழியல் துறைத்தலைவர் அமுதா மற்றும் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.

    • பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
    • மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தாலும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன.

    சிவகாசி

    சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதுடன் ஆக்கிரமிப்புகள் அதிகம் காரணமாக தெருக்களும் ரோடுகளும் சுருங்கி விட்டன.மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தா லும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன. அனைத்து தெருக்களிலும் வாறுகால் அமைக்கப்பட்டிருந்தாலும் குடியிருப்புகள், சாலை கழிவு கள், தொழிற்சாலைகளின் கழிவுகளை வெளியேற்றும் அளவிற்கு போதுமானதாக இல்லை.

    மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் தெருக்க ளில் ஓடுகிறது. இதற்காக சிவகாசியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு நட வடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    சிவகாசி, திருத்தங்கல் 2 பகுதிகளுக்கும் சேர்த்து 150 கிலோ மீட்டர் தூரம் பாதாள சாக்கடை அமைக்க கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ நத்தம், நாரணாபுரம், அனுப்பங்குளம், செங்கமல நாச்சியார்புரம், ஆனையூர், பள்ளபட்டி உள்ளிட்ட 9 முதல் நிலை ஊராட்சிகள் தற்போது நிர்வாகத்தில் இல்லை.

    இந்த ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியோடு இணைக்கப்படாமல் சிவகாசி யூனியன் பகுதிக்குள் உள்ளது. இந்த ஊராட்சி களை மாநகராட்சியோடு இணைத்தால் பாதாள சாக்கடை திட்டத்தின்படி 360 கிலோ மீட்டர் தூரம் அமையவேண்டி இருக்கும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து உட னடியாக சிவகாசியில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×