search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவது எப்போது?
    X

    பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவது எப்போது?

    • பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
    • மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தாலும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன.

    சிவகாசி

    சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதுடன் ஆக்கிரமிப்புகள் அதிகம் காரணமாக தெருக்களும் ரோடுகளும் சுருங்கி விட்டன.மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தா லும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன. அனைத்து தெருக்களிலும் வாறுகால் அமைக்கப்பட்டிருந்தாலும் குடியிருப்புகள், சாலை கழிவு கள், தொழிற்சாலைகளின் கழிவுகளை வெளியேற்றும் அளவிற்கு போதுமானதாக இல்லை.

    மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் தெருக்க ளில் ஓடுகிறது. இதற்காக சிவகாசியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு நட வடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    சிவகாசி, திருத்தங்கல் 2 பகுதிகளுக்கும் சேர்த்து 150 கிலோ மீட்டர் தூரம் பாதாள சாக்கடை அமைக்க கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ நத்தம், நாரணாபுரம், அனுப்பங்குளம், செங்கமல நாச்சியார்புரம், ஆனையூர், பள்ளபட்டி உள்ளிட்ட 9 முதல் நிலை ஊராட்சிகள் தற்போது நிர்வாகத்தில் இல்லை.

    இந்த ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியோடு இணைக்கப்படாமல் சிவகாசி யூனியன் பகுதிக்குள் உள்ளது. இந்த ஊராட்சி களை மாநகராட்சியோடு இணைத்தால் பாதாள சாக்கடை திட்டத்தின்படி 360 கிலோ மீட்டர் தூரம் அமையவேண்டி இருக்கும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து உட னடியாக சிவகாசியில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×