search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicide by poisoning"

    • செல்வராஜ் (55). கூலி தொழிலாளி திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் தனது குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
    • மகன் விஜய் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்த செல்வராஜ் நமது குடும்பத்தினருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று மனவருத்தத்தில் கூறியுள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே தளிகை பொய்யேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). கூலி தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள், 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். 4 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் தனது குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.

    இந்நிலையில் கடந்த 15 வருடங்களாக ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதிக்கு சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக பொய்யேரி பாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தில் மது வாங்கி குடித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மகன் விஜய் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்த செல்வராஜ் நமது குடும்பத்தினருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று மனவருத்தத்தில் கூறியுள்ளார். இதனிடையே ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டு விஜய் வீட்டிற்கு வந்தபோது செல்வராஜ் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் விஷம் குடித்து இருந்ததாகவும், வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து விஜய் வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் நலக்குறைவால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா கல்லரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் சத் தியமூர்த்தி (வயது 28), திருமணம் ஆனவர்.

    இவர் திருவண்ணாமலை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இவருக்கு கடன் தொல்லையும், உடல் நலக்குறைபாடும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

    மயக்க நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலை மகள் கைவிட மறுத்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    கணியம்பாடி அடுத்த கம்மசமுத்திரம் அருகே உள்ள அருணகிரிபேட்டை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48), விவசாயி. இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ஏழுமலை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், காதலித்தவரைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் என மகள் கூறியுள்ளார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியடைந்த ஏழுமலை கடந்த 3-ந் தேதி இரவு வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து, வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விவசாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக் குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி ஜமுனா. தம்பதிக்கு யாஷிதா, யாஷிகா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

    கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜமுனா ஆம்பூர் அடுத்த பெரிய குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

    தாய் வீட்டிலும் ஜமுனாவுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் கணவனும் பிரிந்து விட்டார் தாய் வீட்டிலும் நிம்மதி இல்லை என எண்ணிய ஜமுனா நேற்று முன்தினம் தனது 2 குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் கலந்து விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்தார்.

    மயங்கிய நிலையில் இருந்த ஜமுனா மற்றும் அவரது குழந்தைகளை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்தது. ஜமுனாவை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜமுனா பரிதாபமாக இறந்தார்.

    • ரோஜா நகரை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 59). ரிக் வண்டியில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார்.
    • சீரங்கனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எர்ணாபுரம், அத்தியப்பம்பாளையம், ரோஜா நகரை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 59). ரிக் வண்டியில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி (49).

    சீரங்கனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி தனது மனைவியிடம் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் சீரங்கன் தனது மருமகன் அருண்பாண்டியனுக்கு போன் செய்து, வீட்டிற்கு அருகில் உள்ள ஊஞ்சகாட்டில் விஷம் குடித்து உயிருக்கு போராடுவதாக கூறி

    யுள்ளார்.

    இதனையடுத்து அங்கு சென்ற அருண்பாண்டியன், சீரங்கனை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சீரங்கன் உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதியவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வலையப்பட்டி கோட்டூரை சேர்ந்தவர் சதுரகிரி (வயது70). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாதந்தோறும் சென்று சதுரகிரி மாத்திரைகளை வாங்கி வந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த உற வினர்கள் அவரை தேடி ப்பார்த்தனர். அப்போது விருதுநகர் பழைய ரெயில்வே காலனி பிளாட்பாரத்தில் சதுரகிரி இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டில் இருந்தது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(57). குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த இவர் சம்பவத்தன்று விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • உடல்நிலை சரியில்லாததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கருவேல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55).மண்பாண்ட தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்துள்ளது.

    இதற்காக பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார் இருப்பினும் வயிற்று வலி சரியாக இல்லை. இதனால் விரட்டியில் இருந்த ராமலிங்கம் கடந்த பத்தாம் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதனைக் கண்ட அவரது மகன் அண்ணாமலை தந்தை மீட்டு சிகிச்சையாக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுக்கு இதுகுறித்து அணுகாவூர் போலீஸ் சர்வீஸ் சென்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குடிப்பழக்கத்திற்கு ஆளானதை கணவர் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த அமராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குப்பன் (வயது 30). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் ஓச்சேரி அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் மகள் சுகந்தி (25) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

    இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் (5), சூரியா (2) என நான்கு பிள்ளைகள் உள்ள னர். கணவன், மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சுகந்தி அதிகமான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கணவர் மீண்டும் கண்டிதுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சுகந்தி நேற்று முன்தினம் மதுவில் கொக்கு மருந்து (விஷம்) கலந்து குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

    இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது தாய் மல்லிகா அவளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் விசாரணைக்கு பயந்து விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அலமேலு மங்காபுரம் சமாதான நகரை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 21). இவர் உள்பட 4 பேர் மீது அந்தப் பகுதியில் அடிதடி சம்பந்தமாக புகார் வந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக அருள் செல்வம் மற்றும் அவரது நண்பர்களை சத்துவாச்சாரி போலீசார் அழைத்தனர். போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் பயந்துபோன அருள் செல்வம் நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.

    ஆபத்தான நிலையில் அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருள் செல்வம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் சம்பளம் கேட்டதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் ராகுல் (வயது 24) இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் ராகுல் கடந்த 14-ந் தேதி விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது பெற்றோர் ராகுலிடம் வேலை செய்து வாங்கிய சம்பள பணத்திற்கு கணக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராகுல் எலி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிழே விழுந்து கிடந்தார். அதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ராகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தந்தை லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை
    • மதுபான கடை அருகே பிணமாக கிடந்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள புளியங்கண்ணு திருவள்ளு வர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 40). மோட் டார் சைக்கிள் மெக்கானிக் காகவேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெய் சங்கர் பின்னர் வீடு திரும்ப வில்லை.

    இந்தநிலையில் அவர் புளியந்தாங்கல் பக்கத் தில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதபரி சோதனைக்கு அனுப்பிவைத் தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் மயங்கி கிடந்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் ( வயது 50 ) . இவர் ஆரணியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி (48) இவர்களது மகள்கள் சரோ ஜினி ( 30 ) , லட்சுமி (28 ) , ஜெயந்தி ( 25) மூத்த மகள் சரோஜினியை ஆரணியை அடுத்ததுந்திரீகம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் ( 32 ) என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணத்துக்கு பின்னர் கணவர் தினகரனுடன் சரோ ஜினி சென்னையில் குடியேறினார். தினகரன் தனியார் நிறுவனத்தில் செல்போன் ' டவர் மெக்கானிக்காக பணி யாற்றினார். 5 ஆண்டு ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல் லாததால் கணவன் - மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அக்ராபாளையத்தில் சரோஜினியின் பெற்றோர் புதிய வீடு கட்டிகிரகப்பிரவேசம் நடத்தினர்.

    அதில் பங்கேற்க வந்த சரோஜினி தாய் வீட்டிலேயே இருந்தார். தினகரனும் சொந்த ஊரான துந்தரீகம்பட்டுக்கு வந்து அவரும் தாயாருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தினகரன் அளவுக்கு அதிகமாக மதுவை குடித்து ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். கணவர் இறந்ததை அறிந்த சரோஜினி கதறினார்.

    சரோஜினியின் நிலை இவ் வாறாகி விட்டதே என தந்தை அர்ஜூனன், தாயார் ஜெயலட்சுமி, தங்கைகள் லட்சுமி, ஜெயந்தி ஆகியோர் தற்ெகாலை செய்ய முடிவு செய்து சரோஜினியுடன் அனைவரும் விஷத்தை குடித்து விட்டனர். இதனி டையே கணவரின் இறுதிச் சடங்கிற்கு வராததால் உறவினர்கள் அவரை தேடிவந்தனர்.

    அப்போது சரோஜினி, அவ ரது தாய், தந்தை, தங்கைகள் என 5 பேரும் விஷத்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் ஆரணி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×