விஷம் குடித்து விவசாயி தற்கொலை

காதலை மகள் கைவிட மறுத்ததால் விபரீதம்போலீசார் விசாரணை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

வேலூர்:

கணியம்பாடி அடுத்த கம்மசமுத்திரம் அருகே உள்ள அருணகிரிபேட்டை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48), விவசாயி. இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ஏழுமலை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், காதலித்தவரைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் என மகள் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியடைந்த ஏழுமலை கடந்த 3-ந் தேதி இரவு வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து, வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விவசாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக் குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com