ஆயுதப்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

உடல் நலக்குறைவால் விரக்தி போலீசார் விசாரணை
ஆயுதப்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை
Published on

திருவண்ணாமலை:

செங்கம் தாலுகா கல்லரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் சத் தியமூர்த்தி (வயது 28), திருமணம் ஆனவர்.

இவர் திருவண்ணாமலை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவருக்கு கடன் தொல்லையும், உடல் நலக்குறைபாடும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

மயக்க நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com