என் மலர்
விருதுநகர்
- சிவகாசி, வத்திராயிருப்பு யூனியன்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரிச்சநத்தம் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிட்டங்கி யை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் நியாயவிலை கடையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.31.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதே கிராமத்தில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக ளையும், கோவிந்தநல்லூர் ஊராட்சி ருத்திரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.24.900 லட்சம் மதிப்பீட்டில், வரத்து கால்வாயில் உறிஞ்சி குழி அமைக்கப்பட்ட பணியை யும், 100 நாள் வேலை திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.மூவரை வென்றான் ஊராட்சி இந்திரா காலனியில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும், வடுகப்பட்டி ஊராட்சி களத்தூர் கிராமத்தில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.995 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பணியையும், குன்னூர் ஊராட்சியில்
15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மைய கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.1.570 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.25 ஆயிரம் மதிப்பில் கால்நடை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்ட பணியையும், ரூ.30 ஆயிரம் மதிப்பில் வட்டார நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, வேளா ண்மைத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் உமா மகே சுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தன.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள வி கரிசல்குளம் கருப்பசாமி கோவில் அருகில் மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் துணை மின் பொறியாளர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பூமி என்பவர் தனது வயல்காட்டில் உள்ள நெற்பயிர்களை காப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் பூமி மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் மின்சாரம் தாக்கி இறந்த ஜல்லிக்கட்டு காளைகள் 2 நாட்களுக்கு முன்பு ஆவியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாயமான ஜெய்ஹிந்த்புரம் மாணிக்கம் மற்றும் அவனியாபுரம் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான காளைகள் என்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இதில் 1,100 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கல்லூரி செயலர் அ.பா.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சென்னை, மைன்ட் ப்ரஷ் டிரைனிங்க் அகாடமியின் நிறுவனர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், "சுய மதிப்பு மிகவும் முக்கியம். மாணவர்களிடம் உள்ள தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டவும் வேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
நம்முடைய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். விதிகளும் கட்டுப்பாடுகளும் இருந்தால் மட்டுமே மனிதன் வாழ்வில் சிறக்க முடியும். ஆகவே மாணவர்களுக்கு விதிகளை கடைபிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு வீட்டின் சூழ்நிலையை உணர்த்த வேண்டும். அவ்வாறு உணர்த்தினால் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். குழந்தைகளிடம் பேசும்பொழுது மறைமுகமாக எடுத்து சொல்ல வேண்டியதை மறைமுகமாகவும், நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டியதை நேரடியாகவும் சொல்ல வேண்டும் என்றார். தமிழியல் துறைத் தலைவர் அமுதா வரவேற்றார். வேதியியல் துறைத் தலைவர் பார்வதி நன்றி கூறினார். இதில் 1,100 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- திருச்சுழி அருகே 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி பசுமடத்தெருவை சேர்ந்தவர் சிவ நாராயணன். இவரது மகன் அருண்குமார் (வயது 24). இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் அடிக்கடி பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று அருண்குமார் சிவனாராயணனின் பென்ஷன் பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் சிவநாராயணன் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் விரக்தி அடைந்த அருண்குமார் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது சகோதரர் பழனிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே நரிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சமீப காலமாக இவர் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சமுதாய கூடம் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுப்பிரமணியனின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.
- 39 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடப்பணி நடைபெற உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் புறவழிச்சாலையில் தாமரை நகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட அலுவலக 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடங்களை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜே.பி. நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தேசிய தலைமை அலுவலகத்திற்கு வந்த போது நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பா.ஜ.க. அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று அப்போதைய தேசிய தலைவர் அமித்ஷாவிடம் அறிவுறுத்தினார். கட்டிடப்பணி நான் அப்போது தேசிய பொதுச்செயலாளராக இருந்தேன்.
தற்போது 290 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் 150 மாவட்டங்களில் கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 14 மாவட்ட அலுவலக கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாவட்டங்களுக்கு கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது.
மேலும் 39 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடப்பணி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகரில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டு ரங்கன் தலைமையில் மாநிலச்செயலாளர்கள் பொன் பாலகணபதி, பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜகோபால், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் சுப. நாகராஜன், பார்வையாளர் வெற்றிவேல், மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், கோபால்சாமி, மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரன், சீதாராமன், அழகர்சாமி ராஜா, மணிகண்டன், புஷ்ப குமார், செல்வகுமார் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- திருத்தங்கல், சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
- ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.
விருதுநகர்
மதுரையில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியதாவது:-
விருதுநகர்-செங்கோட்டை ெரயில் பாதையில் திருத்தங்கல் மற்றும் சாட்சியாபுரத்தில் ெரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இதுகுறித்து ெரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில நெடுஞ்சாலை துறையின் மதிப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவ தாகவும் அது முடிந்த பின் விரைவுபடுத்தப்படும் என்றும் ெரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. சிலம்பு எக்ஸ்பிரஸ் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்ற வேண்டும் என்று கேட்டதற்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு காரைக்குடி, மானாமதுரை வழியாக வாரம் 3 முறை மற்றொரு ெரயில் இயக்கப்பட உள்ளதாகவும், ெரயில் தினசரி ெரயிலாக இயக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் வாய்ப்பில்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.
நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூர் மற்றும் திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்லவும், கொல்லம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்லவும் நடவடிக்கை கோரியதற்கு சிவகாசியில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என்றும், நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தினசரி ரெயில் செங்கோட்டை-சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு புதிய ெரயில், ஐதராபாத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ெரயில் வசதி, குருவாயூர்-புனலூர் ெரயில் மதுரை வரை நீட்டிப்பு, புதுச்சேரி- கன்னியாகுமரி பயணிகள் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான கூடுதல் ெரயில் வசதி தொடர்பான கோரிக்கை களுக்கு ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழிற்படிப்புகள் சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
- வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தொழிற்படிப்புகள் பற்றிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக வணிகவியல் துறை முன்னாள் மாணவர் மணிகண்டன் பங்கேற்றார்.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், தொழிற்படிப்புகளில் எவ்வாறு வெற்றி பெறுவது? வெற்றிக்கான இலக்கை நோக்கி எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்வது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் தொழிற்படிப்புகள் வாயிலாக வாழ்வில் பொருளாதாரத்தின் மேம்பாடுகள் பற்றிக் கூறினார். வணிகவியல் முதலாமாண்டு மாணவி ஜெயராசாத்தி வரவேற்றார். முதலாமாண்டு மாணவி ஜமுனா தேவி நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் துறை ராஜீவ்காந்தி செய்திருந்தார். வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் 13-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.
- சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் அரசுத்தேர்வுகள் இயக்குநர் அறிவிக்கையின்படி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதிவரை நடைபெற உள்ளது. விருதுநகர் கல்வி மாவட்ட த்தில் 44 தேர்வுமையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 தேர்வுமையங்களும், 1 தனித்தேர்வர்களுக்கான தேர்வுமையத்திலும் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் வருவாய் மாவட்ட அளவில் 12-ம் வகுப்பில் 23 ஆயிரத்து 368 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 22 ஆயிரத்து 36 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் மாற்றுத்தி றனாளி மாணவர்களாக 12-ம் வகுப்பில் 105 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 102 தேர்வர்களும் தேர்வெழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் 104 முதன்மை கண்காணிப்பா ளர்களும், 104 துறை அலுவலர்களும், 1236 அறைக்கண்கா ணிப்பா ளர்ளும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுப வர்களாக 110 ஆசிரியர்களும் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிக்க பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 70). இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் தனிமையில் வசித்து வந்த அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தங்கவேல் மகன் தெய்வ முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு முருக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவருக்கு கடந்த 6 மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ராம மூர்த்தியின் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே வி.ராமலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 40). இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் . இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த காளிமுத்து வீட்டில் யாருமில்லாத நேரத்தில் உடலில் டீசலை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் பார்த்திபராஜ் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் ரூ.251 கோடியில் அமைக்கப்படும் கழிவுநீர் உந்து நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவமாறும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் மேல பாட்டை கரிசல்குளத்தில் அம்ரூத் திட்டம்-பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.251 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பிரதான கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் ெரயில்வே வேலை பணித்திட்டம் சார்பில் ரூ.46 கோடி மதிப்பில் ெரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருவதையும், ராஜபாளையம் திருவனந்த புரம் ஊருணியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் நீர்நிலை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், ராஜபாளையம் முடங்கியார் சாலையில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்நல மையம் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவமாறும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, செயற்பொறியாளர் ரத்தின வேல், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொ றியாளர் முகம்மது வாசீக், வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- புதிய ரெயில்களை இயக்க தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர்
2018 முதல் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த மதுரை-நெல்லை இரட்டை ரெயில் பாதைப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி முதல் அனைத்து ரெயில்களும் இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ரெயில் நிலையங்களில் முன் கூட்டி வந்த ரெயில்கள் எதிரே வரும் ரெயிலுக்காக காத்திருந்த நிலை மாறியுள்ளது. மேலும், பயண நேரமும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தென் மாவட்ட மக்கள் மற்றும் ரெயில் பயணிகள் கூடுதலான ரெயில்களை இந்த வழித் தடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக வடமாநி லங்களில் இருந்து மதுரை வரை வரும் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்கவும், வடமாநி லங்களில் இருந்து கேரளா வழியாக நெல்லை வரை வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மதுரை சந்திப்பு ரெயில் நிலையம் வரை நீட்டிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை வரை கூடுதலான ரெயில்களை இயக்க வேண்டும். நீண்ட நாட்களாக சிறப்பு ரெயில்களாக இயங்கும் ரெயில்களை நிரந்தரமாக இயக்கவும், தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் பயணிகள் எதிர்பார்க்கி ன்றனர்.
சிறப்பு ரெயிலாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நெல்லை-தாம்பரம்
(அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது) சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும் வரும் மேட்டுப்பாளையம் -நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். கொல்லம்-விருதுநகர்-மானாமதுரை-ராமேசுவரம் இடையே புதிய ரெயில்களை இயக்க வேண்டும்.
புதிய வந்தே பாரத் ரெயில்கள்
சென்னை-கன்னியாகுமரி வரையும், நெல்லையில் இருந்து -பெங்களூரு வரையும் செல்லும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் ரெயில்வே அமைச்ச கத்திற்கும் ரெயில் பயணிகள் மற்றும் தென் மாவட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் -மதுரை வரை இயங்கும் பயணிகள் ரெயிலை நெல்லை வரையும், மதுரை-ஜெய்ப்பூர் வரை இயங்கும் பிகானிர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரையும், சண்டிகர்-மதுரை வரை இயங்கும் சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரையும், மதுரை-சென்னை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லையில் இருந்து புறப்படும் வகையிலும் நீட்டிக்க வேண்டும்.
விழுப்புரம்-மதுரை பயணிகள் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். சேலம்-கரூர்-திருச்சி வரை இயங்கும் பயணிகள் ரெயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். போடி-மதுரை வரை இயங்கும் பயணிகள் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
கோவை-மதுரை வரை இயங்கும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
மானாமதுரை-மன்னார்குடி வரை செல்லும் டெமு ரெயிலை விருதுநகர் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். விருதுநகர் -மானாமதுரை வழியாக காரைக்குடி, திருச்சி வரை செல்லும் டெமு ரெயிலை பயணிகள் ரெயிலாக மாற்றி செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.
செங்கோட்டை-மதுரைக்கு அதிகாலை நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு புதிய இணைப்பு ரெயில் விட வேண்டும். கேரள மாநிலம் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வரை இயங்கும் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
குருவாயூர்-புனலூர் வரை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட திருப்பதி-கொல்லம் விரைவு ரெயிலை உடனே இயக்க வேண்டும்.
2018-ல் அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயிலையும் காலதாமதமின்றி இயக்க வேண்டும். தாம்பரம்-திருவாரூர்-காரைக்குடி வழியாக நெல்லை சந்திப்பு வரை அறிவிக்கப்பட்ட விரைவு ரெயிலை காலதாமதமின்றி இயக்க வேண்டும்.
நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு செல்லும் விரைவு ரெயிலை மதுரையில் இருந்து புறப்பட செய்ய வேண்டும். நெல்லையில் இருந்து பிளாஸ்பூர் வரை செல்லும் விரைவு ரெயிலை மதுரை சந்திப்பிலிருந்து இயக்க வேண்டும்.
அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கேரளா வழியாக கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரையில் இருந்து இயக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அப்போது சந்தனமாரியப்பன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள வடகரை நயினாபுரம் காலனியை சேர்ந்தவர் சுடர்கொடி(வயது23). இவருக்கும் செந்தட்டி யாபுரத்தை சேர்ந்த சந்தனமாரியப்பன்(26) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுடர்கொடி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த 2019-ம் ஆண்டு எனது கணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதோடு என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் வேலுசாமி- லட்சுமி இருந்தனர்.
இதையடுத்து நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். சம்பவத்தன்று திரும ணத்தின் போது எனக்கு அணிவித்த நகையை கேட்க சென்றேன். அப்போது சந்தனமாரியப்பன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் எனக்கு தெரியாமல் அவர் 2-வது திருமணம் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் விசாரணை நடத்தி சந்தனமாரியப்பன், அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.






