என் மலர்
நீங்கள் தேடியது "கழிவுநீர் உந்து நிலையம்"
- ராஜபாளையத்தில் ரூ.251 கோடியில் அமைக்கப்படும் கழிவுநீர் உந்து நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவமாறும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் மேல பாட்டை கரிசல்குளத்தில் அம்ரூத் திட்டம்-பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.251 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பிரதான கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் ெரயில்வே வேலை பணித்திட்டம் சார்பில் ரூ.46 கோடி மதிப்பில் ெரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருவதையும், ராஜபாளையம் திருவனந்த புரம் ஊருணியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் நீர்நிலை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், ராஜபாளையம் முடங்கியார் சாலையில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்நல மையம் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவமாறும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, செயற்பொறியாளர் ரத்தின வேல், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொ றியாளர் முகம்மது வாசீக், வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.






