அ.தி.மு.க பொதுக்கூட்டம்

ராஜபாளையம் அருகே அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா.க.பாண்டியராஜன் பேசியபோது எடுத்த படம்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா.க.பாண்டியராஜன் பேசியபோது எடுத்த படம்.
Published on

ராஜபாளையம்

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜ பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா சத்திரப்பட்டி நடுத்தெருவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிழக்கு ஒன்றியசெயலாளரும், கூட்டுறவு வங்கி தலை வருமான குறிச்சியார்பட்டி மாரியப்பன் வரவேற்று பேசினார். கிளைக் கழகச்செயலாளரும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான முருகபூபதி, சத்திரப்பட்டி கிளை செயலாளரும், ஒன்றிய அவைத்தலைவருமான முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான மா.பா.க.பாண்டியராஜன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தலைமைக்கழக பேச்சா ளர்கள் சவுண்ட் சரவணன், மதுரை முத்தரசு, சரவெடி சம்சுகனி பேசினர்.

கூட்டத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் சண்முக கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மேற்குஒன்றிய செயலாளர் மணிகண்டன், மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணபதியாபுரம் கிளை செயலாளரும், ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான சேகர் மற்றும் லட்சுமணன், முத்து கணபதி நன்றி கூறினர். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com